சுவிட்சர்லாந்து நாட்டில் மோட்டார் சைக்கிள் போட்டி: பரிதாபமாக உயிரிழந்த 3 வீரர்கள்,
 • சுவிட்சர்லாந்து நாட்டில் மோட்டார் சைக்கிள் போட்டி: பரிதாபமாக உயிரிழந்த 3 வீரர்கள்,

  சுவிட்சர்லாந்து நாட்டில் நிகழ்ந்த மோட்டார் சைக்கிள் பந்தியத்தில் தொடர்ச்சியாக 3 வீரர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  சுவிஸின் துர்கவ் மாகாணத்தில் உள்ள Amriswil என்ற நகரில் சமீபத்தில் மோட்டார் சைக்கிள் போட்டி நடைபெற்றுள்ளது.

  பல்வேறு நகரங்களை சேர்ந்த வீரர்கள் பங்கேற்ற இப்போட்டியை காண ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டுள்ளனர்.

  போட்டி தொடங்கியதும் வீரர்கள் அசுர வேகத்தில் மோட்டார் சைக்கிளில் பறந்துள்ளனர்.

  ஒவ்வொரு வாகனத்திலும் இரண்டு பேர் பயணிக்கும் இப்போட்டியின் இறுதி சுற்று நிகழ்ந்தபோது பயங்கரமான விபத்து ஏற்பட்டுள்ளது.

  57 வயதான நபர் ஓட்டிய மோட்டார் சைக்கிள் திடீரென கட்டுப்பாட்டை இழந்து பொதுமக்கள் மீது பாய்ந்துள்ளது.

  எதிர்பாராமல் நிகழ்ந்த இவ்விபத்தில் ஓட்டுனருக்கு படுகாயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

  மேலும், கூட்டத்தில் காயம் அடைந்த ஒரு குழந்தை உள்பட மூன்று பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  துரதிஷ்டவசமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓட்டுனர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

  முன்னதாக, இதே போன்று நிகழ்ந்த போட்டியில் இரண்டு வீரர்கள் ஏற்கனவே பலியாகியுள்ளனர்.

  மோட்டார் சைக்கிள் போட்டியில் நிகழ்ந்த விபத்துக்களில் தொடர்ச்சியாக 3 பேர் பலியாகியுள்ளது போட்டி ஏற்பாட்டாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
தொழில்நுட்பம்
மருத்துவம்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்