கைதான நாமல் எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கும் ஒக். 16 வரை விளக்கமறியல்,
 • கைதான நாமல் எம்.பி உள்ளிட்ட 6 பேருக்கும் ஒக். 16 வரை விளக்கமறியல்,

  கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர ஆகிய 3 பாராளுமன்ற  உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேருக்கும் எதிர்வரும் எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.
   
  ஹம்பாந்தோட்டை நீதவான் முன்னிலையில் குறித்த 6 பேரும் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து இவ்வாறு விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
   
  நாமல் ராஜபக்ஷ, டீ.வீ. சானக , பிரசன்ன ரணவீர ஆகிய 3 பாராளுமன்ற  உறுப்பினர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
   
  ஹம்பாந்தோட்டையில் கடந்த வெள்ளிக்கிழமை (06) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் ஆர்ப்பாட்ட பேரணியில் இடம்பெற்ற அமைதியின்மை தொடர்பிலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
   
  மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் உபாலி கெடிகார, சம்பத் அதுகோரல ஆகிய மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் அஜித் பிரசன்ன ஆகிய மூவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
   
   
  நீதிமன்ற உத்தரவை மீறி சட்டவிரோதமாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை, பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
   
  குறித்த ஆறு பேரும் இன்று (10) மாலை ஹம்பாந்தோட்டை பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்குவதற்காக       முன்னிலையாகியிருந்த நிலையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
   
  இவர்களை அம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சுவிஸ் செய்தி
மருத்துவம்
தமிழகச் செய்திகள்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்