காணிகளை விடுவிக்கும் பணிகள் இரண்டு வருடங்களில் பூர்த்தி,
 • காணிகளை விடுவிக்கும் பணிகள் இரண்டு வருடங்களில் பூர்த்தி,

  இராணுவத்தின் பிடியிலுள்ள பொது மக்களின் காணிகளை விடுவிக்கும் நடவடிக்கை 2 வருட காலத்தில் பூர்த்தி செய்யப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன தெரிவித்தார்.

  பாதுகாப்பு நடைமுறைகளையும் கருத்திற் கொண்டே இதற்கான முன்னெடுப்புகள் இடம்பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

  அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக மாநாட்டில் வடக்கு காணி விடுவிப்பு குறித்து வினவப்பட்டது.இதன் ​போதே இராணுவப் பேச்சாளர் இதனை தெரிவித்தார்.

  வடக்கில் தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருவது குறித்து இதன் போது வினவப்பட்டது. இதற்குப் பதிலளித்த இராணுவப் பேச்சாளர்.

  வடக்கில் இராணுவத்தின் பிடியிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பில் செயல்திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய சுமார் 2 வருட காலத்தினுள் இந்த பிரச்சினைக்கு முழுமையான தீர்வு காண எதிர்பார்க்கப்படுகிறது. இதன் போது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடைமுறைகள் அனைத்தையும் ஆராய்ந்தே காணி விடுவிப்பு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

  கையளிக்கக் கூடிய சகல காணிகளையும் கையளிக்க இராணுவம் நடவடிடக்கை எடுக்கும் என்றார்.

  அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிடுகையில்,

  வடக்கு காணி பிரச்சினை தொடர்பில் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் நான் பேச்சு நடத்தியிருந்தேன்.அவர்களின் புள்ளிவிபரப்படி 62 வீதமான காணிகள் கையளிக்கப்பட்டுள்ளன.எஞ்சிய காணிகளை விடுவிப்பது தொடர்பில் பாதுகாப்பு தரப்பினருடனும் ஏனையவர்களுடன் பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுகிறது.சில பிரதேசங்களில் மாற்றுக் காணிகள் வழங்குவது குறித்து ஆராயப்படுகிறது.

  மக்களி்டமிருந்து பெறப்பட்ட காணிகளில் அநேகமானவை மீள கையளிக்கப்பட்டுள்ளன என்றார்.

  யுத்தத்தின் பின்னர் பாதுகாப்பு தரப்பினர் பொதுமக்களின் பெருமளவான காணிகள் மற்றும் வீடுகள் என்பவற்றை கைப்பற்றி பாதுகாப்பு தேவைகளுக்கு பயன்படுத்தியருந்தனர். இவற்றில் அநேகமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கையளிக்கப்பட்ட போதும் குறிப்பிடத்தக்க அளவு காணிகள் இன்னும் படையினர் வசமே உள்ளதாக குற்றஞ்சாட்டப்படுகிறது. தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி வடக்கின் பல பிரதேசங்களில் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தப்பட்டுவருவது தெரிந்ததே

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
சாதனையாளர்கள்
இலக்கியம்
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்