இலங்கை தமிழ் அகதியை சுட்டுக்கொன்ற பொலிசார். பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்,
 • இலங்கை தமிழ் அகதியை சுட்டுக்கொன்ற பொலிசார். பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார்,

  சுவிட்சர்லாந்து நாட்டில் தாக்குதல் நடத்த முயன்ற இலங்கை அகதியை சுட்டுக்கொன்ற பொலிசார் பணியில் இருந்து நீக்கப்பட மாட்டார் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

  சுவிஸின் டிசினோ மாகாணத்தில் உள்ள Brissago நகரில் தான் இக்கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  இந்நகரில் உள்ள டவுன் ஹால் பகுதியில் இலங்கையை சேர்ந்த ஏராளமானவர்கள் கடந்த 8 ஆண்டுகளாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

  இவர்களில் புதுக்குடியிருப்பு 6 ஆம் வட்டாரம் ஆனந்தபுரம் பகுதியை சேர்ந்த 38 வயதான கரன் என்பவரும் தங்கி வந்துள்ளார்.

  இவர்கள் அனைவரும் புகலிடத்திற்காக விண்ணப்பம் செய்துவிட்டு காத்திருந்துள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் அகதிகள் மத்தியில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

  இந்நிலையில் நேற்று இரவு நேரத்தில் அகதிகள் மத்தியில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இலங்கையை சேர்ந்த இருவர் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

  தகவலை பெற்ற பொலிசார் இரவு 2 மணியளவில் அகதிகள் முகாமிற்கு சென்றுள்ளனர். பொலிசாருடன் புகார் கொடுத்த இரண்டு பேரும் சென்றுள்ளனர்.

  அப்போது, வீட்டிற்குள் இருந்த கரன் இரண்டு கத்திகளை எடுத்துக்கொண்டு பொலிசாருடன் வந்த இருவர் மீது தாக்குதல் நடத்த முயன்றுள்ளார்.

  நிலைமையை உணர்ந்த பொலிசார் கரன் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நிகழ்த்தியுள்ளனர்.

  கரன் ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்ததும் அவருக்கு பொலிசார் முதலுதவி சிகிச்சையும் வழங்கியுள்ளனர்.

  ஆனால், படுகாயம் அடைந்த கரன் சம்பவ இடத்திலேயே பலியானார். இச்சம்பவம் குறித்து உயர் பொலிஸ் அதிகாரிகள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

  அதில், பொலிசார் மற்றும் இலங்கையை சேர்ந்த இரண்டு அகதிகளின் உயிரை காப்பாற்றவே துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.

  எனவே, நடவடிக்கை எடுத்த பொலிஸ் அதிகாரி பணி நீக்கம் செய்யப்பட மாட்டார்.

  மேலும், அகதிகள் மத்தியில் எழுந்த தகராறு தான் இத்தாக்குதலின் பின்னணி காரணமாக இருக்க வாய்ப்பிருந்தாலும், இச்சம்பவம் தொடர்பாக பொலிசார் விரிவான விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
சட்டம்
தமிழகச் செய்திகள்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink