நாடு கடந்த அரசாங்கம் ‘புலி மாவீர தேவ தூதர்கள் திருச்சபை’யாக மாற்றம்,
 • நாடு கடந்த அரசாங்கம் ‘புலி மாவீர தேவ தூதர்கள் திருச்சபை’யாக மாற்றம்,

  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  என்கின்ற  அமைப்பானது,  நாடு  கடந்த  ‘ புலி மாவீர   தேவ தூதர்கள்  திருச்சபை’ யாக   தோற்றம்… பெற்றுள்ளது.   உலகத் தமிழர்  பேரவை  தலைவரான  கிறிஸ்தவ  பாதிரியார்  எஸ்.ஜே. இமானுவேல்  அவர்களை  புலி மாவீர தேவ தூதர்கள்  திருச்சபையின்  முதன்மை தூதராகவும்,  உருத்திரகுமாரனை    திருச்சபையின்   போதகராகவும் வே. பிரபாகரனை    இறைதேவனாகவும்      ஏற்றுக்கொண்டு   மரணித்த  மாவீரர்களை  வைத்து  பிழைப்பு  நடத்தும்  அமைப்பாக  செயல்படவுள்ளது.)
   

  (இப்படி  ஆயர்மார்கள்    போன்று  உடையை  அணியவேண்டும்  என  உலகத் தமிழர்  பேரவை  தலைவரான  கிறிஸ்தவ  பாதிரியார்  எஸ்.ஜே. இமானுவேல் தான்  ஆலோசனை வழங்கியவராம்)

  (நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  என்கின்ற  அமைப்பானது,  நாடு  கடந்த  ‘ புலி மாவீர   தேவ தூதர்கள்  திருச்சபை’ யாக   தோற்றம்… பெற்றுள்ளது.   உலகத் தமிழர்  பேரவை  தலைவரான  கிறிஸ்தவ  பாதிரியார்  எஸ்.ஜே. இமானுவேல்  அவர்களை  தேவ தூதர்கள்  திருச்சபையின்  முதன்மை தூதராகவும்,  உருத்திரகுமாரனை  திருச்சபையின்  போதகராகவும் வே. பிரபாகரனை    இறைதேவனாகவும்      ஏற்றுக்கொண்டு   மரணித்த  மாவீரர்களை  வைத்து  பிழைப்பு  நடத்தும்  அமைப்பாக  செயல்படவுள்ளது.)


  (போரால்  பாதிக்கப்பட்ட  நாட்டில்  வாழும்   சாதாரண   தமிழர்களுக்கும் , போராடி  மரணித்த  மாவீரர்களுக்கும்  இந்த  கோட்சூட்டு அணிந்திருக்கும்  பணக்கார  ஆசாமிகளுக்கும்   எதாவது  சம்பந்தம்  இருக்கா   என்று   பாருங்கள்?  ஆகக்குறைந்தது   இவர்களுக்கு  பணம்  வாரியிறைக்கும்   புலம்பெயர்   புலியாதரவு  கூட்டங்களுக்காவது  உடுபுடவையில்  உருவத்தில்  எதாவது  சம்பந்தம்   இருக்கா  என்று பாருங்கள்?  இதெல்லாம் பணம்  கூடி  பகட்டுக்கு   செய்கின்ற  பகல்   வேசங்கள்…)

  நாடு  கடந்த அரசின் 4 வது அமர்வு லண்டனில்  நடைபெற்றது. இதற்கு முன்னதான அமர்வுகள் அமெரிக்காவில்  நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடையம். இம் முறை இந்த அமர்வுகள்  பிரித்தானிய பாராளுமன்றின் வளாகத்தினுள் நடைபெற்றது.

  அதன் உறுப்பினர்கள் கலர் கலரா உடுப்பு போட்டு வந்து பார்வையாளட்களை அசத்தியுள்ளார்கள். உறுப்பினர்களுக்கு ஒரு கலர் உடுப்பு…. அமைச்சர்கள் மற்றுமொரு கலர்… செனட் சபை உறுப்பினர்கள் ஒரு கலர் என்று, வித்தியாசம் வித்தியாசமான ஈஸ்மன் கலரில் இவர்கள் வந்து கலக்கினார்கள். ஆனால் இலங்கை அரசு கலங்கியுள்ளதாக என்று கேட்டால் அது தான் இல்லை.

  இதிலும்    கனடா அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வந்த அங்கத்தவர்கள், பிரித்தானிய பாராளுமன்றம் மிகவும் நன்றாக இருக்கிறது என்று, முழு நேரப் புகழ் பாடினார்களே தவிர தமிழர்களுக்கு என்ன  தீர்வு என்று, இல்லையேல்   தமது நிலைப்பாடு என்ன என்று தெளிவுபடுத்த மறந்துவிட்டார்கள்.


  (சும்மா  சொல்லக் கூடாது   ‘ புலி மாவீர பெண்  தேவ  தூதர்கள்’  அழகாகதான்  ஜொலிக்கின்றார்கள்…  )

  வழமைபோல நாடு கடந்த அரசு , அதனைச் செய்யும், இதனைச் செய்ய இருக்கிறது என்று சொல்லி கூட்டத்தை அப்படியே முடித்துவைத்தனர்.    நாடு கடந்த   அரசின் அவைப்  பேச்சாளர் GTV க்கு ஒரு நேர்காணலையும் வழங்கியிருந்தார். அதில் திரு.தினேஷ் அவர்கள் இடக்கு முடக்கான கேள்விகளைக் கேட்டுவிட்டார்.

  உங்களுக்கும் தலைமைச் செயலகம் என்று சொல்லப்படும் சங்கீதன் கோஷ்டிக்கும் தொடர்பு இருப்பதாகப் பேசப்படுகிறதே உண்மையா ? என்று கேட்டுவிட்டார். சீறிப் பாய்ந்த அவைப் பேச்சாளர் பொன் பால்ராஜ், எமது தலைவர் உரைக்கு மதிப்புக்கொடுக்காத எவருடனும் நாம் சேரமாட்டோம் என்று சொன்னார். தலைவர் என்றால் யார் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களையா சொல்கிறீர்கள் ? என்று கேட்க்க, இல்லை  இல்லை  திரு ருத்திரகுமாரனை நான் சொல்கிறேன் என்றார் திரு.பொன் பால்ராஜ் அவர்கள்.

  அப்படி என்றால், ருத்திரகுமாரன்  என்ன தேசிய தலைவருக்கு சமமானவரா ? என்று அடுத்த கேள்வியும் கேட்க்கப்பட்டது. இல்லை இல்லை, ஆனால் பத்தோடு பதின் ஒன்றாக அவருக்கும் மரியாதை கொடுக்கவேண்டும் என்று சமாளித்தார், பொன் பால்ராஜ் அவர்கள்.

  இதில் வேடிக்கையான விடையம் என்ன தெரியுமா ?

  பாமர மக்கள் சிலர், குறிப்பிட்ட கூட்டத்துக்குச் சென்றுள்ளார்கள். வெளியே வந்த அவர்கள், ஏன் நாடு கடந்த அரசின் கூட்டத்தில் இத்தனை ஆயர்மார் கலந்துகொள்ளவேண்டும். கத்தோலிக்க ஆயர்மார்களுக்கும்    நாடு கடந்த அரசுக்கும்   என்ன சம்பந்தம் என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

  அட கடவுளே நாடு கடந்த அரசின் உறுப்பினர்கள் தான் இவ்வாறு கத்தோலிக்க ஆயர் போல கலர் கலரா உடுப்பு போட்டுள்ளார்கள் என்று யாராவது சொல்லியிருக்கலாம் அல்லவா ? என்ன கொடுமை சரவணா ?

  இப்பதான்  படிச்சு  பட்டம் வாங்குகிறார்களோ?

  ஒரு  வெள்ளைககாரன் கலந்து கொண்டிருக்கின்றான். பெருமைதானே!!


  உண்மையான  பாதிரியார்  எஸ்.ஜே. இமானுவேல்  அடிகளார்  மட்டு  ஏன்  மஞ்சல் சிகப்பு  பாதிரியுடை  அணியவில்லை?  நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திற்கு  ஆதரவளிக்கும்  சாதாரண  தொண்டர்கள்    ‘நாடுகடந்த  தமிழீழ  அரசாங்கத்தின்  அமைச்சர்கள்   என்ன  செய்கின்றார்கள்  என வாயை  பிழந்து  பார்த்துக்கொண்டிருகின்றார்கள்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
உலக செய்தி
தங்க நகை
தொழில்நுட்பம்
 மரண அறித்தல்