மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்,
 • மனித உரிமை மீறல் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்,

  தொகுப்பு-மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE)Zurich Switzerland.  இனப்படுகொலை [Genocide] பொதுவாக ஒரு போர் சூழலில் அல்லது இரண்டு இனங்கள் /குழுக்கள் ஒன்றுக்கு ஒன்று மாறுபட்ட ,முரண்பட்ட அரசியல், பண்பாட்டு சூழலில் அல்லது ஒரு இனம் அதிகாரம் ,படை ,ஆள் பலம் அதிகரித்த நிலையில் தன்னிச்சையாக மற்ற சிறுபான்மை இனத்தை நசுக்க, ஒடுக்க முயலும் சூழலில் அல்லது எதோ சில பல காரணங்களால் ஒரு இனம் மற்ற இனத்தை வெறுக்கும் சூழலில் அல்லது இவைகள் எல்லாம் கலந்த ஒரு சூழலில் ,பொதுவாக நடை பெறுகிறது.

  ஆகவே இனப்படு கொலையைப் பற்றி சிந்திக்கும் போது ,அவைகளுடன் போர் குற்றங்கள்[War Crimes] ,'மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள்['crimes against humanity'] போன்றவையும் பொதுவாய் வந்து விடுகின்றன.இப்ப இனப்படு கொலை என்றால் என்ன என பார்ப்போம்.

  இனப்படு கொலை என்பது ஒரு இனம் மற்ற இனத்தை ஆயிரம், பத்தாயிரம்,இலட்சம் என கொன்று குவிப்பதோ ,அழிப்பதோ மட்டும் அல்ல .அதற்கு மேலாக ஒரு இனத்தின் அடையாளமான மொழி ,பண்பாடு ,பரம்பரை பழக்க வழக்கங்கள் ஆகியவற்றை தடுப்பதும் ,இடையூறு விளைவிப்பதும் , அழிப்பதும் அத்துடன் அதன் வாழ்வை, வளர்ச்சியை,வளத்தை முடக்குவதும் ஒரு இனப்படு கொலையே!

  போர் குற்றங்கள்,இனப்படுகொலைகள் ,மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் போன்றவை உலக சமூகத்தில் மனித வரலாறு முழுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.என்றாலும் அத்தகைய குற்றங்க ளைத் தண்டிப்பது அல்லது அதற்கு எதிரான குற்ற ச்சாட்டு க்கள் இருபதாம் நூற்றாண்டில் தான் வெளி வரத் தொடங்கின.

  இரண்டாவது உலகப் போரில் [1939–1945 ] ஜெர்மனியரும் ஜப்பானியரும் செய்த கொடுமைகள், குற்றங்கள் போன்றவை மக்கள் வெறுப்பை சம்பா த்தித்து அவைகளுக்கு எதிராக ஒரு பொது சீற்றம் அல்லது கொந்தளிப்பு ஏற்பட்டதே இதற்கு காரணமாகும். செப்டம்பர் 1, 1939-இல் துவங்கிய அந்த போர் 1945 ஆகஸ்டு பதினைந்தாம் தேதி முடிவடைந்த போது மொத்தம் ஐந்து முதல் ஏழு கோடி உயிர்களை பலி வாங்கி இருந்தது.

  இதில்,இராணுவத்தோடு சம்பந்தப்பட்ட வர்கள் இரண்டிலிருந்து இரண்டரை கோடியாகவும் (இதில் போருக்கு பின் பிடிபட்டு தண்டிக்கப்பட்ட இராணுவ வீரர்களும் அடங்குவர்) அப்பாவி பொதுமக்கள் நான்கிலிருந்து ஐந்து கோடியாகவும் இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டது. போருக்கு பின் போரினால் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் வியாதியால் 1.3 கோடியிலிருந்து இரண்டு கோடிவரை மக்கள் உயிரிழந்து இருக்கி றார்கள்.

  இனச் சுத்திகரிப்பு என்ற பெயரில் ஜெர்மனி நடத்திய 'யூத' இனப்படுகொலைகள் மட்டும் அறுபது லட்சத்திற்கு மேல் ஆகும்.இந்தப் போருக்கு காரணமான பெரும்பாலானோர்கள் போரின் முடிவுக்குள்ளாகவே கொல்லப்பட்டு விட்டார்கள். அடால்ஃப் இட்லர் (Adolf Hitler) தற்கொலை செய்துக்கொண்டான். இத்தாலிய நாட்டின் சர்வாதிகாரி பெனிட்டோ அமில்கார் அன்டிரியா முசோலினி (Benito Amilcare Andrea Mussolini) அவன் மக்களாலே கொல்லப்பட்டான்.

  ஜப்பான் ஹிரோஷிமா, நாகசாகிக்கு பிறகு சரணடைந்தது. போர் முடிந்து போயிற்று.இதை அடுத்து பல பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு அக்டோபர் 18, 1945-இல் 'சர்வதேச இராணுவ தீர்ப்பாயம்'தொடங்கப்பட்டது. 'அமைதிக்கு எதிரான செயல்களில் வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ பங்குபெற்றிருப்பது', 'அமைதியை குலைக்கும் செயல்களை வடிவமைத்தல், துவக்குதல் மற்றும் வழிநடத்தல்',

  'போர் குற்றங்கள்' மற்றும் 'மனித குலத்திற்கு எதிரான குற்றம் செய்தல்' ஆகியவை குற்றச் சாட்டுகளாக அங்கு முன் வைக்கப்பட்டன.இன்று உலக முழுவதும் இது உருவாக்கிய இரண்டு பெரிய குற்றங்களை பரவலாக தொடர்ந்து கடை பிடிக்கப் படுகின்றன.ஒன்று 'மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள்' மற்றொன்று 'இனப்படுகொலை' ஆகும்.இவை இரண்டும் முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மனிதகுலம் சுதந்திரத்தோடு வாழமுடியும்.

  போர் குற்றம் எனப்படுவது போர் விதிமுறை அல்லது அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்திற்கு முரணாக செயற்படுவதாகும் என்பதை அதிகமாக எல்லா நாடு களும் அரசாங்கமும் ஏற்றுக் கொள்ளும். உதாரணமாக ,போர் கைதிகளை கொலை செய்தல் அல்லது சரிவர நடத்தாதல் அல்லது கொடுமைப் படுத்துதல் ஒரு போர் குற்றம் ஆகும்.அது போல,எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் [act of Perfidy] ஒரு போர் குற்றம் ஆகும். மேலும் ஒரு போர்க்கால சூழலில்,சித்திரைவதை ,இனப்படு கொலை,பெரும் திரளான மக்களை தம் சொந்த இடங்களில் இருந்து துரத்தல்,மற்றும் பல வழிகளில் அவர்களை துன்புறுத்து தல் போன்ற மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் செய்தல் ஒரு போர் குற்றம் ஆகும்.

  எதிரியை வேண்டும் என்றே ஏமாற்றுதல் அல்லது நம்பிக்கை மோசம் செய்தல் என்பதற்கு இன்றைய கால கட்டத்தில்,மே மாதம் ,2009 ஆம் ஆண்டு,இலங்கையில் நடைபெற்ற வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்தவர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட "வெள்ளைக் கொடி சம்பவத்தை" ஒரு உதாரணமாக கூறலாம்.

  அதே போல,பண்டைய காவியத்திலும் (இதிகாசம்) ஒரு சம்பவத்தை கூறலாம்.உதாரணமாக, கிருஷ்ணர் பாண்டவர்களின் வெற்றியை பல தடவைகளில் நம்பிக்கை மோசம் அல்லது கௌரவர்களை வேண்டும் என்றே ஏமாற்றுதல் மூலமே பெற்றுக் கொடுத்துள்ளார். இவரின் செயல்கள் தர்மத்தின் நேரடி மீறலாக காணப் படுகின்றன. கண்ணனின் போர்த் தந்திர ஏமாற்று ஆலோசனையின் பேரில், குருச்சேத்திரப் போரில் வீழ்த்த முடியாத பீஷ்மர், துரோணர், ஜயத்திரதன், கர்ணன், சல்லியன் மற்றும் துரியோதனாதிகளை, அருச்சுனனும், வீமனும் வீழ்த்தியதால் பாண்டவர் அணி வெற்றி கொண்டது என்பது குறிப்பிடத் தக்கது.

  உதாரணமாக,பெண்களிடமும், திருநங்கைகளிடமும் போர் செய்ய விரும்பாத பீஷ்மரை வீழ்த்த, சிகண்டியை [துருபதனின் மகளான சிகண்டினி இப்போது சிகண்டி என்ற ஒரு திருநங்கையாகத் திகழ்ந்தான்] முன்னிருத்தி, பின்புறத்தில் அருச்சுனன் நின்று பீஷ்மர் மீது அம்பு களை எய்யுமாறு ஆலோசனை கூறினார் கண்ணன். அதே போல,துரோணர் உயிருக்கு உயிரான தன் மகன் அஸ்வத்தாமன் மீது கொண்ட பாசத்தை உணர்ந்த கண்ணன், பதினைந்தாம் நாள் போரின் போது, போர்க்க ளத்தில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் எனும் பொய்ச் செய்தியை தருமன் மூலம் துரோணரிடம் கூறும் படி ஆலோசனை வழங்கினான் கண்ணன்.

  அதன் படியே தருமனும், அஸ்வத்தாமன் என்ற யாணை இறந்து விட்டது, என்ற சொல்லில் அஸ்வத்தாமன் இறந்து விட்டான் என்ற சொற்களை அதிக ஒலியுடனும், யானை என்ற சொல்லை மிக மெலிதாக துரோணரிடம் கூறினார்.அதனால், துரோணர் தனது மகன் அஸ்வத்தா மன் போரில் இறந்து விட்டான் என்று நம்பி மனமுடைந்த துரோணர், தன் கையில் இருந்த போர்க்கருவிகளை விட்டு விட்டு, போர்க்களத்தில் தேரில் அமர்ந்து தியா னத்தில் அமர்ந்து விட்டார்.அப்பொழுது துரோணரின் தலையை திருட்டத்துயும்னன் தன வாளால் வெட்டி னான்.எங்கே கிருஷ்ணன்?, எங்கே தருமன்?,எங்கே தருமம்?

  அப்படியே,கர்ணனை பல சூழ்ச்சிகளால் கொன்றான் கிருஷ்ணன்! உதாரணமாக,எந்த ஒரு ஆயுதமும் இல்லாமல், சேற்றில் மாட்டிக் கொண்ட தன் தேர் சக்கரங்களை தூக்கி எடுக்க கர்ணன் முயற்சித்த போது, இப்படிப்பட்ட சந்தர்ப்பம் மறுபடியும் கிடைக்காது என்ற காரணத்தினால், கர்ணனை கொல்ல அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் ஆலோசனை கூறினார்.

  அதன் படி தேர்ச்சக்கரம் தரையில் அழுந்தியதை,கர்ணன் மீண்டும் தூக்கி நிலைநிறுத்தும் நேரத்திற்குள், அருச்சுனன் கர்ணனின் மீது கனைகளை ஏவிக் கொன்றான்!! தன் இலக்குகளை அடைய ஒன்றுக்கு பல முறை,இப்படி கிருஷ்ணன் விதிமுறைகளை மீறியுள்ளார். மகா பாரதத்தை மேலோட்டமாக படித்தவர்களும் சரி, மதிநுட்பமாக படித்தவர்களும் சரி, கர்ணனை கொன்றது அர்ஜுனன் தான் என நினைப்பார்கள்.அர்ஜுனன் என்பவர் தன் கையில் கருவியே என மகாபாரதம் முழுவதும் கிருஷ்ணர் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டு கிறார் என்பது குறிப்பிடத் தக்கது.

  பீஷ்மர், கர்ணன், துரோணர் ஆகிய மூவருமே ஆயுதம் இல்லாமல் இருக்கும் போது தான் வதைக்கப்பட்டனர்.இவை எல்லாம் பகவத் கீதையில் தர்மத்தை பாதுகாப்பதற்காக தான் அவதாரம் செய்தான், அதை ஒரு புறத்தில் தள்ளி வைக்க அல்ல என்ற கிருஷ்ணனின் கூற்றிற்கு,இது முற்றிலும் வேறுபட்டே காணப்படுகிறது. அத்துடன் வஞ்சனை மூலம் வெற்றி கொள்ளுதல், மகாபாரதத் திற்கு முன்பே பிராமண புராணங்களில் காணலாம். இங்கு ஆண்டவன் அடிக்கடி ஏமாற்றும் சூழ்ச்சிகளைப் பயன்படு த்தி அரக்கர்களுடன் அல்லது அசுரர்களுடன் போரிட்ட கதைகளை காணலாம்?

  மனிதாபிமானத்திற்கு எதிரான அல்லது மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என்ற பதம் முதல் முதலாக 1915 இல்,பெரிய பிரித்தானியா[கிரேட் பிரிட்டன்], பிரான்ஸ் மற்றும் ரஷ்யா [Great Britain, France and Russia] ,துருக்கிய அரசாங்கம் [Turkish government] ,ஆர்மேனியர்களுக்கு [Armenians] எதிராக செய்த படுகொலையை கண்டிக்கும் பொழுது பாவிக்கப் பட்டது.போர் குற்றம் மாதிரி அல்லா மல்,இது சமாதான காலத்திலும் போர் காலத்திலும் செய்ய முடியும்.

  இந்த பதம் 1915 இல் இருந்து பாவிக்கப் பட்டாலும், உண்மையில் இரண்டாவது உலகப் போருக்கு பின் 1945 இல் தான் முதலாவது வழக்கு இந்த குற்றச் சாட்டின் கீழ் நடை பெற்றது. திட்டமிட்ட ரீதியில் மிகப் பெரும் எண்ணிக்கையிலான பொதுமக்களைக் கொல்கின்ற செயலானது மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள் என வரையறுக்கப்பட்டுள்ளது. இனப்படுகொலை என்பது தனிப்பட்ட மக்களைக் கொல்வதோடு மட்டுமல்லாது, ஒரு சமுதாயத்தை அழிப்பதை நோக்காகக் கொண்டு மேற்கொள்ளப்படு வதாகும்.

  வேறுவகையில் கூறினால், தனியொரு குழுவைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் கொல்லப்படு வதையே மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் குறிக்கி ன்றது.பொதுவாக இது,கொலை,முழுமையாக அழி த்தொழித்தல்,சித்திரவதை,பாலியல் வன்புணர்வு, அரசியல், சமய, அல்லது இன முறையிலான அடக்கு முறைகள் மற்றும் பிற மனிதம் அற்ற செயற்பா டுகள் போன்றவற்றை குறிக்கும்.ஆகவே, மனிதாபி மான த்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படு கொலை ஆகிய இரண்டும் வேறுபட்ட இரு வேறு எண்ணக்கரு க்களாகும்.

  அமெரிக்காக்களில் ஐரோப்பியக் குடி யேற்றத்தில் [ European Colonization of the Americas] அழித்து ஒழிக்கப் பட்ட கணக்கில் அடங்கா பெரு வாரியான உள்ளூர் குடிகள், இரண்டாம் உலகப் போர்க் காலத்தில்,ஐரோப்பிய யூதர்கள் ஜெர்மனியில் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்ட பெரும் இன அழிப்பு [Holocaust],1932- 1933 ம் ஆண்டுக் காலப் பகுதியில் உக்ரேனில் பட்டினியால் நடந்த இனப்படு கொலை கோலதடமோர் (The Holodomor, உக்ரேனியம்), நைஜீரிய உள்நாட்டுப் போர் [Nigerian Civil War],மற்றும் கம்போடியா இனப்படுகொலை (Cambodia Genocide) ஆகியன மிகப் பெரிய முதல் ஐந்து மானுடத்துக்கு எதிரான குற்றங்கள் என இன்று கருதப் படுபவை ஆகும்.

  இனப்படு கொலை என்ற சொல் [THE TERM "GENOCIDE" ] 1944 க்கு முன் இருக்கவில்லை. போலந்து-யூதச் சட்ட வல்லுனரான ராபேல் லெம்கின் [Raphael Lemkin (1900-1959)]என்பவரே இனப்படுகொலை என்னும் கருத்து ருவுக்கு முதன் முதலில் சொல்வடிவம் கொடுத்தவ ராவார்.இனத்தை குறிக்கும் geno என்ற கிரேக்க சொல்லை யும், கொலையை குறிக்கும் cide என்ற லத்தீன் சொல்லையும் ஒன்றிணைத்து இந்த சொல்லை உருவா க்கி னார்.ஆகவே இனப்படு கொலை என்பது ஒரு சர்வதேச குற்றம் [International Crime] ஆகும்

  அதாவது கிழே தரப்பட்டவைகளை,முழுமையாகவோ பகுதியாகவோ ஒரு தேசிய,குடிமக்களை, இனத்தை, சாதியை அல்லது ஒரு மதம் சார்ந்த குழுவை அழிக்கும் நோக்குடன் ஈடுபடுதலை குறிக்கிறது .அதாவது ஒரு குழுவின் உறுப்பினர்களை

  * கொல்லுதல்
  *உடலிற்கு அல்லது மனதிற்கு கடும் தீங்கு ஏற்படுத்துதல்/விளைவித்தல்.
  * வேண்டும் என்று பகுதியாகவோ முழுமையாகவோ ஒரு உடல் அழிவை ஏற்படுத்தும் ஒரு சூழ்நிலையை ஏற்படுத்துதல்
  *அந்த குழுவிற்குள் இனப்பெருக்கத்தை அல்லது பிறப்புகளை தடுப்பதற்கான வழி முறைகளை சுமத்துதல் .
  *அந்த குழுவின் சீரார்களை கட்டாயப் படுத்தி மற்ற குழுக்குள் மாற்றுதல் .

  ஆகியவை இனப்படு கொலையாகும்! .இனப்படு கொலை என்ற சொல் 1944 ற்கு பின்பு வந்த படியால் அதற்கு முன் அப்படி ஒன்றும் நிகழவில்லை என்று பொருள் அல்ல .பல சாட்சிகள் எமது பண்டைய சரித்திரத்திலும் இதிகாசத்திலும் புராணத்திலும் மற்றைய சமய இலக்கியங்களிலும் காணப்படுகின்றது .ஆனால் இனப்படுகொலை என்ற சொல்லை நேரடியாக பாவிக்காமல்.வேறுவிதமாக பயன்படுத்துகின்றனர்,

  குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள்

      அடிமையாகா உரிமை
      சித்தரவதைக்கு உட்படா உரிமை
      சுதந்திரம் - Liberty
      தனிநபர் பாதுகாப்பு - Security of person
      வாழும் உரிமை - Right to life
      கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்/பேச்சுரிமை
      சிந்தனைச் சுதந்திரம்
      ஊடகச் சுதந்திரம் - Freedom of the press
      தகவல் சுதந்திரம் - Freedom of information
      சமயச் சுதந்திரம் - Freedom of religion
      நகர்வு சுதந்திரம் - Freedom of movement
      கூடல் சுதந்திரம் - (Freedom of assembly)
      குழுமச் சுதந்திரம் - Freedom of association
      தன்னாட்சி உரிமை/சுயநிர்ணயம் -
      அரசில் பங்களிக்க உரிமை
      புகலிட உரிமை
      சட்டத்தின் முன் சமநிலை
      நியாமான விசாரணைக்கான உரிமை - Right to a fair trial
      தேசியத்துக்கான உரிமை
      அந்தரங்க உரிமை - Privacy
      மொழி உரிமை

  பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள்

      உணவுக்கான உரிமை - Right to food
      கல்விக்கான உரிமை
      நீருக்கான உரிமை - Right to water
      கல்வி உரிமை
      பண்பாட்டு உரிமை
      நலத்துக்கான உரிமை - Right to health
      சொத்துரிமை
      மொழி உரிமை

  கோருபவர்கள் வாரியாக உரிமைகள்

      மனித உரிமைகள்
      பெண்கள் உரிமைகள்
      ஆண்கள் உரிமைகள்
      பாலின, பாலியல்பு உரிமைகள்
      குழந்தைகள் உரிமைகள்
      முதற்குடிமக்கள் உரிமைகள்
      தொழிலாளர் உரிமைகள்
      அகதிகள் உரிமைகள்
      சிறுபான்மையினர் உரிமைகள்
      போர்க்கைதிகளின் உரிமைகள் (Prisoner of war)

  மனித உரிமை மீறல்கள்/குற்றங்கள்

      இனவொதுக்கல் குற்றம் (Crime of apartheid)
      அமைதிக்கு எதிரான குற்றம் (Crime against peace)
      War of aggression
      Piracy
      கடத்தல் - Abuduction
      காணாமல் போதல் - Disapperance
      கட்டாய ஆள்சேர்ப்பு - forced conscription
      கூட்டுத் தண்டனை - collective punishment

  இனப்படுகொலைகள்

      இனப்படுகொலை
      ஆர்மேனியன் இனப்படுகொலை - Armenian Genocide
      கிரேக்க இனப்படுகொலை
      பெரும் இன அழிப்பு
       Holodomor
      கம்போடியா இனப்படுகொலை
      Communist genocide
      ருவாண்டா இனப்படுகொலை
      போசுனியன் இனப்படுகொலை
      குர்துமக்கள் இனப்படுகொலை
      தார்ஃபூர் போர்
      இலங்கைத் தமிழர் இனப்படுகொலை


  சட்டங்கள்

      ஜெனீவா உடன்படிக்கை
      மூன்றாவது செனீவாச் சாசனம் (Third Geneva Convention)
      நான்காவது செனீவாச் சாசனம் (Fourth Geneva Convention]
   Convention relative to the Treatment of Prisoners of War, Geneva July 27, 1929
  Geneva Convention for the amelioration of the condition of the wounded and sick in armies in the field (1929)
      உலக மனித உரிமைகள் சாற்றுரை
      இனப்படுகொலை குற்றத்தை தடுப்பது, தண்டிப்பது தொடர்பான உடன்படிக்கை (Convention on the Prevention and Punishment of the Crime of Genocide)
      அனைத்துலக மனிதபிமானச் சட்டம் (International Humanitarian Law)
      அனைத்துலக் குற்றவியல் சட்டம் (International criminal law)
      அனைத்துலக மனித உரிமைகள் சட்டம் (International Human Rights Law)
      அனைத்துலகச் சட்டம் (International law)
      வேதி ஆயுத உடன்படிக்கை
      சித்திரவதைக்கு எதிரான ஐ.நா உடன்படிக்கை (United Nations Convention Against Torture}
  Protocol I

  Protocol II
      குறிப்பிட்ட மரபுவழி ஆயுதங்கள் தொடர்பான உடன்படிக்கை (Convention on Certain Conventional Weapons)
      ஒட்டாவா ஒப்பந்தம் (Ottawa Treaty)
      Convention on Cluster Munitions
      ஹேக் சாசனம் (1899 and 1907)
  Rome Statute of the International Criminal Court
      அகதிகளின் நிலை தொடர்பான ஐக்கிய நாடுகள் உடன்படிக்கை
      அனைத்துலக குடிசார் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை - International Covenant on Civil and Political Rights
      அனைத்துலக பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் உடன்படிக்கை -

  International Covenant on Economic, Social and Cultural Rights
      பெண்களுக்கு எதிரான அனைத்து பாகுபாடுகளையும் ஒழிப்பதற்கான உடன்படிக்கை -

  Convention on the Elimination of All Forms of Discrimination Against Women
      அனைத்துவகை இனத்துவ பாகுப்பாட்டையும் ஒழிப்பதற்கான அனைத்துலக உடன்படிக்கை -

  Convention on the Elimination of All Forms of Racial Discrimination
  International Convention for the Protection of All Persons from Enforced Disappearance

  Convention on the Rights of Persons with Disabilities
   United Nations Convention on the Protection of the Rights of All Migrant Workers and Members of Their Families
      குழந்தைகளின் உரிமைகளுக்கான உடன்படிக்கை

  நீதி
      அனைத்துலக நீதிமன்றம் (International Court of Justice)
      அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றம் (International Criminal Court)

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
உலக செய்தி
எம்மவர் நிகழ்வுகள்
இலங்கை சட்டம்
அரசியல் கட்டுரைகள்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort