புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் இன்றுவரை எதையும் ஏன் சாதிக்க முடியவில்லை,
 • புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களால் இன்றுவரை எதையும் ஏன் சாதிக்க முடியவில்லை,

  மார்க்கண்டு தேவராஜா(LLB-MP-TGTE-Zurich.Switzerland.)புலம் பெயர்ந்துவாழும் தமிழ் மக்களால் இலங்கை தொடர்பான  ஈழத்தமிழர் சார்ந்த  உண்மையான தரவுகளை வெளிநாட்டாருக்கோ அல்லது சர்வதேச மனித செயற்ப்பாட்டார்களுக்கோ எடுத்துக் கூறப்படவில்லை அல்லது எடுத்துக் கூற முடியவில்லை என்பதே உண்மை.

  அதே நேரம் உண்மையான தமிழர் தரப்புத் தொடர்பான உண்மைத்தன்மை தரவுகளோ நியாயங்களோ இன்றுவரை எவராலும் முன்வைக்கப்படவில்லை அல்லது முன்னெடுத்துச் செல்லவில்லை எனலாம் அதை புலம் பெயர்ந்து வாழும் இப்போதைய இளம் சமூகத்திடம் கொண்டு செலப்படவில்லை என்பதையும் யாராலும் நிராகரிக்கமுடியாது.

  புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் நடைபெறும் நீதிவேண்டிய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்லும் இளம் சந்ததியினர் மத்தியில் நாம் ஏன் போராடுகிறோம் அல்லது அந்தப் போராட்டங்களின் நியாயத் தன்மையை வெளி உலகத்தினருக்குக் கொண்டு செல்லும் தரவுகளை நமது சமூகத்தில் வாழும் பெரியோர் எடுத்துக் கூறவில்லை என்பதே உண்மை.

  இலங்கை அரசிற்க்கு எதிராகப் போராடும் நிலையை உருவாக்கிய நம்மால் நமது தரப்பின் போராட்டங்களுக்கான நியாயங்களை ஈழத் தமிழர்களுக்கான வாழ்வுரிமையை வெளிநாட்டாரிடம் வெளிப்படுத்தத் தவறி விட்டோம் என்பதை நாம் ஏற்றுக் கொள்ளவேண்டும் இந்தக் காரணங்களால் அடிப்படையற்ற போராட்டமாக வெளிநாட்டவர்களது பார்வையில் தென்படுகின்றதா.

  ஈழத்தின் முழுத் தரவுகள் தெரிந்த பல கல்விமான்கள் இலை மறை காயாகவே வாழ்ந்து வருகின்றனர் அவர்களால் சரியான விழிப்புணர்வை ஏற்ப்படுத்தமுடியவில்லையா அல்லது அதுபோன்றோரை தேடி அவர்களின் உதவியை இன்றைய செயல்ப்பாட்டாளர்கள் முன்னெடுக்கவில்லையா.

  அதனால் நாம் முன்னெடுக்கும் போராட்டங்கள் வெற்றி பெறுவதில்லை எங்கள் தரப்பு நியாயங்களை வெளிப்படுத்தவேண்டிய தேவை இளம் சமூகத்திடம் உண்டு  எனவே இளம் சமூகத்தினர் நாம் யார் என்றும் நமது சரித்திரம் என்ன என்றும் தெரிந்து கொள்வதில் அக்கறை காட்டவேண்டும் அது உங்களுக்கு ஒரு உந்து சக்தியைக் கொடுக்கும்.

  நாம் சரியான பாதையைத் தேர்ந்தேடுக்காவிடின்  இன்னும் 100 வருடம் போனாலும் இந்தப் போராட்டம் முற்றுப் பெறப் போவதும் இல்லை நமக்கு பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா எனும் சந்தேகத்தையே உணர்த்தும் நான் அறிந்தததையும் எனக்குத் தெரிந்தயுமே விபரித்துள்ளேன் இன்னும் எவ்வளவோ விடயங்கள்  வெளிவரவேண்டி உள்ளது.

  சிந்தியுங்கள்  இது விளையாட்டுத்தனமான  விடயம் அல்ல இதை  மனதில் வைத்துக் கொண்டு செயல்ப்படுங்கள்.

  இந்த தரவுகளைப் புலம் பெயர்ந்து வாழும் அனைத்துத் தமிழ் இளைஞர்களும் ஈழத்தில் உள்ள அனைத்துத் தமிழ் சமூகவும் பதிவேற்றிவைத்துக் கொள்ளுங்கள்  தேடுதர்க்கரிய தகவல்கள்.

  1940 இல் இருந்து தமிழ் மக்களின் நாடாளுமன்ற மற்றும் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்கும் முகமாக சிங்களக் குடியேற்றங்கள் தமிழ் மக்கள் வாழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டன. மேலே செல்லுமுன் மண் பறிப்புப் தொடர்பான சில புள்ளி விபரங்களைப் பார்ப்போம்.

  இலங்கையின் மொத்த நிலப்பரபு 65,610 ச.கிமீ (25,332 ச.மைல்) ஆகும்.

  வடக்கு கிழக்கு மாகாணங்கள் இரண்டும் 01.10.1833 இல் கோல்புறூக் - கமரூன் சீர்திருத்தத்தின் கீழ்

  உருவாக்கப்பட்ட போது மொத்தம் 18,880 ச.கிமீ (7,289 ச.மைல்) நிலப்பரப்பினைக் கொண்டிருந்தன.

  அதாவது 29 விழுக்காடு நிலப்பரப்பு தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சொந்தமாக இருந்தது.

  இதில் வடக்கு மாகாணத்தின் நிலப்பரப்பு 8,884 (3,430 ச.மைல்) ஆகும்.

  கிழக்கு மாகாணத்தின் மொத்த பரப்பளவு 9,996 ச.கிமீ (3860 ச.மைல்) ஆக இருந்தது.

  கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டம் 4431.4 ச.கிமீ (1,775 ச.மைல்) நிலப்பரப்பையும்

  மட்டக்களப்பு மாவட்டம் 2854 கிமீ (1,102 ச.மைல்) நிலப்பரப்பையும்

  திருமலை மாவட்டம் 2727 ச.கிமீ (1,053 ச.மைல்) நிலப்பரப்பையும் கொண்டிருந்தன.

  காலப்போக்கில் மாவட்டங்களின் எல்லகைள், பிரதேச சபைகளின் எல்லைகள் என்பன சிங்களப் பெரும்பான்மை சமூகத்தின் வசதிக்கும் தேவைக்கும் ஏற்றவாறு மாற்றி அமைக்கப்பட்டன.

  எஞ்சி இருப்பவை இன்று முஸ்லிம்களால் ஆக்கிரமிக்கப்படுகின்றன,

  இதுவரை இலங்கையில் கொண்டுவரப்பட்ட அரசியல் சீர் திருத்தங்கள் இத்தனால் தமிழர்களுக்கு என்ன கிடைத்தது.

  சீரதிருத்தம்                          ஆண்டு                              திருத்தம்
  1ம்-சீர்திருத்தம்                    1978/11/20             உயர்நீதிமன்ற அதிகாரம்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  2ம்-சீர்திருத்தம்                   1979/02/26              பாராளுமன்ற உறுப்பினர்கள் கட்சி             
                                                                                  மாற்றம்  ஆசன இடைவெளி, பூரணப்படுத்தல்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  3ம்-சீர்திருத்தம்                    1982/08/27             சனாதிபதி பதவி காலநீடிப்பு
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  4ம்-சீர்திரு;தம்                     1982/12/23              முதலாம் பாராளுமன்ற பதவி   கால நீடிப்பு
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  5ம்-சீர்திருத்தம்                   1983/02/25             சனாதிபதி ஆசனஇடைவெளிபூரணப்படுத்தல்/பதிலீடு   .                                                                              செய்தல்;
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  6ம்-சீர்திருத்தம்                  1983/08/08               ஆள்புல ஒருமைப்பாட்டுக்கும்  இறைமைகும்                   .                                                                               எதிரானசெயற்பாடுகளை தடை செய்தல்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  7ம்-சீர்திருத்தம்                  1983/10/04               நிர்வாக மாவட்ட எண்ணிக்கையை அதிகரித்தல்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  8ம்-சீர்திருத்தம்                  1984/03/06               சனாதிபதி சட்டத்தரணியின்  சிறப்புரிமை.
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  9ம்-சீர்திருத்தம்                 1984/08/24               பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்ய(முடியாத).
                                                                                 தகைமையின திருத்தம்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  10ம்-சீர்திருத்தம்              1986/08/06               மக்கள் பாதுகாப்பு
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  11ம்-சீர்திருத்தம்              1987/05/06              மேல் நீதிமன்ற, மேல்முறையீட்டு நீதிமன்ற அதிகாரம்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  12ம்-சீர்திருத்தம்                                              நிறைவேற்றப்பட வில்லை
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  13ம்-சீர்திருத்தம்             1987/11/14               மாகாணசபை அரசாங்க மொழியாக தமிழ் மொழி அங்கீகாரம்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  14ம்-சீர்திருத்தம்             1988/06/24                பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்க                                             .                                                                              விகிதாசார தேர்தல் . முறை திருத்தம்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  15ம்-சீர்திருத்தம்             1988/12/17                தேர்தல் விகிதாசார விகித   திருத்தம்
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  16ம்-சீர்திருத்தம்             1988/12/23                 நிர்வாக மொழி, சட்டவாக்க மொழி நீதிமன்ற மொழி
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  17ம்-சீர்திருத்தம்            2001/10/03                 அரசியலமைப்பு பேரவை,
  https://www.parliament.lk/files/pdf/constitution/constitution-upto-17th.pdf

  18ம்-சீர்திருத்தம்           2010/ 09/09                 ஜனாதிபதியின் அதிகாரம் அதிகரிப்பு ஜனாதிபதி தவனைக்                                 .                                                                             கால வரை யறை நீடிப்பு.
  https://www.parliament.lk/files/pdf/constitution/18th_amendment_act.pdf

  19-சீர் திருத்தம்           2015/05/  29             இந்த அரசியலமைப்புச் சீர் திருத்தம் கீழ் வரும்                                           .                                                                             5  விடயங்களை உள்ளடக்கியது
  1. அரசியல் அமைப்புச் சபையை மீள நிறுவுதல்

  2. தேசிய பொலிஸ், தேர்தல் ஆணைக்குழு உள்ளிட்ட சுயாதீன ஆணைக்குழுக்களை நிறுவுதல்

  3. தகவல்களை அறிந்து கொள்ளும் உரிமை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக ஏற்றுக் கொள்ளல்.

  4. உச்ச நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்களுக்கான நீதவான் தெரிவு சுயாதீனமான முறயில் மேற்கொள்ளல்.

  இலங்கையில் நீதியின் அதிகாரத்தை பேணவும் ஜனநாயகத்தை நிலைநாட்டி நல்லாட்சியை ஏற்படுத்தவும் 19ம் திருத்தச் சட்டம் அவசியமானது.

  5. 18ம் திருத்தச் சட்டத்தை ரத்து செய்தல்.

  19 வது அரசியலமைப்பு முழுமையான தமிழ் வடிவம்.
  http://slembassyusa.org/downloads/19th_Amendment_T.pdf

  13 அரசியலமைப்புச் சட்டத்தின் முழு வடிவம் தமிழில் உள்ள தொடர்பாக்கியைக் கீழே குறிப்பிட்டுள்ளேன் ஆர்வமுள்ளவர்கள் படித்துப் பாருங்கள்
  http://www.parliament.lk/files/pdf/constitution-ta.pdf

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தையல்
உலக சட்டம்
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்