வடகொரியா மிரட்டல் அமெரிக்காவைத் தாக்க 4 ஏவுகணைகள் தயார்,
 • வடகொரியா மிரட்டல் அமெரிக்காவைத் தாக்க 4 ஏவுகணைகள் தயார்,

  அமெ­ரிக்­கா­வைத் தாக்­க­வேண்­டும் என்ற எண்­ணம் வட­கொ­ரி­யா­வுக்கு இருந்­தால், அந்த நாடு வர­லாறு காணாத பேர­ழி­வைச் சந்­திக்­கும்’’ என்று அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் எச்­ச­ரித்­தி­ருந்த நிலை­யில், அமெ­ரிக்­கா­வைத் தாக்க தம்­மி­டம் நான்கு மேம்­பட்ட ரகத்தை உடைய கண்­டம்­விட்­டுக் கண்­டம் பாயும் ஏவு­க­ணை­கள் உள்­ளன என்று தெரி­வித்­தது வட­கொ­ரியா.

  பன்­னாட்டு சட்­ட­திட்­டங்­க­ளை­யும், விதி­க­ளை­யும் மீறி வட­கொ­ரியா தொடர்ந்து பல ஏவு­க­ணைச் சோத­னை­களை நடத்தி வரு­கி­றது. அண்­மை­யில் அந்த நாடு கண்­டம் விட்­டுக் கண்­டம் பாயும் ஏவு­க­ணை­களை வெற்­றி­க­ர­மா­கச் சோதித்­தது.

  தமது சோத­னை­கள் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரா­னவை என்று வட­கொ­ரியா பகி­ரங்­க­மாக அறி­விக்­க­வும் செய்­தது. வட­கொ­ரி­யா­வி­டம் இத்­த­கைய ஏவு­க­ணை­கள் இல்லை என்று தெரி­வித்­துக் கொண்­டி­ருந்த அமெ­ரிக்­கா­வுக்கு, வட­கொ­ரி­யா­வின் இந்­தச் சோதனை பெரும் தலை­வ­லி­யைக் கொடுத்­தது.

  இந்­தப் பின்­ன­ணி­யில் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப், ‘‘வட­கொ­ரியா கடு­மை­யான ஊழிக்­கா­லப் பேர­ழிவைச் சந்­திக்க நேரி­டும். அமெ­ரிக்க இரா­ணுவ முகா­மின் மீது தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டால் இந்த உல­கம் இது­வரை காணாத தீயை­யும் சீற்­றத்­தை­யும் வட­கொ­ரியா சந்­திக்­கும்’’ என எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருந்­தார்.

  ட்ரம்­பின் இந்­தக் கருத்­துக்கு வட­கொ­ரிய இரா­ணு­வத் தள­பதி, கம் ராக் கயாம் பதி­லடி கொடுத்துள்­ளார்.‘‘அமெ­ரிக்­கா­வை­யும், பசு­பிக் கட­லில் அமெ­ரிக்­கா­வுக்­குச் சொந்­த­மாக உள்ள குவாம் தீவை­யும் வட­கொ­ரியா எந்த நேரத்­தி­லும் தாக்­க­லாம். ஹவ­சாங் – 12 ரகத்­தைச் சேர்ந்த 4 ஏவு­க­ணை ­கள் எப்­பொ­தும் அமெ­ரிக்­கா­வுக்கு எதி­ரா­கச் சிறிப்­பா­ய­லாம்’’ என அவர் மேலும் குறிப்­பிட்­டார்.

  குவாம் தீவு வட­கொ­ரி­யா­வில் இருந்து 3 ஆயி­ரத்து 350 கிலோ மீற்­றர் தூரத்­தில் உள்­ளது. இது 541 சதுர கிலோ மீற்­றர் பரப்­ப­ளவு கொண்­ட­தா­கும். இதில் ஒரு லட்­சத்து 63 ஆயி­ரம் மக்­கள் வசிக்­கி­றார்­கள். இந்­தத் தீவு அமெ­ரிக்­கா­வின் முக்­கிய இரா­ணு­வத் தள­மா­க­வும் உள்­ளது. தீவின் கால் பங்கு பகு­தியை இரா­ணு­வத் தள­மாக பயன்­ப­டுத்­து­கின்­ற­னர். 6 ஆயி­ரம் பேர் கொண்ட வலு­வான விமா­னப்­ப­டை ­யும் அங்கு உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
மங்கையர் பகுதி
ஆன்மிகம்
தையல்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink