யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் பிரதமர் ரணில் உத்தரவு,
 • யாராக இருந்தாலும் கைது செய்யுங்கள் பிரதமர் ரணில் உத்தரவு,

  பாரதூரமான குற்றச் செயல்கள் சம்பந்தமாக வழக்குகளை துரிதப்படுத்தி, அவற்றுடன் தொடர்புடையவர்களை கைது செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

  இந்த நடவடிக்கைகளில் போது தடையேற்படுத்துவோர் யாராக இருந்தாலும் அது குறித்து தனக்கு அறிவிக்குமாறும் பிரதமர், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களம் ஆகியவற்றுக்கு உத்தரவிட்டுள்ளார்.

  றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீன் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க போன்றோரின் படுகொலை, ரத்துபஸ்பல பொதுமக்கள் கொலை, பாரிய ஊழல் மோசடிகள், வெலிகடை சிறைச்சாலை படுகொலை போன்றவற்றுடன் சம்மந்தப்பட்ட யாராயினும் கைது செய்வதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறே அவர் உத்தரவிட்டுள்ளார்.

  கடந்த தேர்தல் காலங்களில் மக்களுக்கு வாக்குறுதி வழங்கியபடி ஊழல்வாதிகள் மற்றும் குற்றவாளிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதனால் பொதுமக்களுக்கு அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை இல்லாமல் போய்விட்டதாகவும் இதனால் மாகாண சபைத் தேர்தலில் அரசாங்கத்துக்குச் சாதகமற்ற தன்மை காணப்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பிரதமரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர்.

  முன்னாள் அமைச்சர் ரவி கருணநாயக்க பதவியில் இருந்து விலகியமையானது அரசாங்கத்தின் மீது பொதுமக்களுக்கு புது நம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளது. இதே நம்பிக்கை நிலையைத் தொடர்ந்தும் தக்கவைக்கவேண்டிய சூழ்நிலை அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ளதாக ஐக்கியதேசியக் கட்சிக்கு நெருங்கிய வட்டாரங்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தமிழகச் செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
தங்க நகை
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்