அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம்,
 • அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம்,

  அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் இரு தலைவர்களும் சந்தித்து பேசுகிறார்கள்.

  முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அ.தி.மு.க. அம்மா அணி அமைச்சர்கள், எம்.எல். ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டத்தை சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் கூட்டினார். அப்போது அணிகள் இணைப்பு பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

  அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்குவது பற்றியும் பேசப்பட் டது. அவர்கள் இருவரையும் நீக்கி தீர்மானம் இயற்றப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப் பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு அ.தி.மு.க. தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.

  அ.தி.மு.க. அணிகளை இணைக்க இரு அணி தலைவர்களும் சம்மதித்து விட்டதால், அதை அமல்படுத்துவது எப்போது என்று ஆலோசிக்கப்படுகிறது. இதற்கு பா.ஜ.க. உதவிக்கரம் நீட்டியுள்ளது. டெல்லியில் நாளை (வெள்ளிக்கிழமை) துணை ஜனாதிபதியாக வெங்கய்யா நாயுடு பதவி ஏற்கும் விழா நடைபெற உள்ளது.

  அந்த விழாவில் கலந்து கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் இன்று டெல்லி செல்கிறார்கள். அவர்களுடன் அவர்களது முக்கிய ஆதரவாளர்களும் உடன் செல்கிறார்கள்.

  நாளை துணை ஜனாதிபதி பதவி ஏற்பு விழா முடிந்ததும் டெல்லியில் இரு அணி தலைவர்களும் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது அணிகள் இணைப்புக்கான  புதிய உடன்பாடு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இன்னும் ஓரிரு நாட்களில் அ.தி.மு.க. அணிகள் இணைப்பு விவகாரத்தில் புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளது.

  அதிமுக-வின் இரு அணிகள் இணைப்பில் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தகவல்  வெளியாகி உள்ளது. மேலும்  பன்னீர்செல்வத்திற்கு துணை முதலமைச்சர் பதவி என தகவல் வெளியாகி உள்ளது.

  புதிய சமரச உடன்படிக்கை வேறு  விதமாக இருக்கும் என்று ஆங்கில பத்திரிகை ஒன்றில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சராக நீடிப்பார், துணை முதல்வர் பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் ஏற்பார்” என்று கூறப்பட்டுள்ளது.

  ஓ.பன்னீர்செல்வத்துக்கு மேலும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அவர் துணை முதல்-அமைச்சர் பதவியுடன் கட்சி பொதுச் செயலாளராகவும் இருப்பார் என்று அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது. அதாவது ஆட்சி எடப்பாடிக்கும் கட்சி ஓ.பி.எஸ்.சுக்கும் என்ற ரீதி யில் உடன்பாடு ஏற்பட்டு இருப்பதாக தெரிகிறது.

  அ.தி.மு.க. அணிகள் இணைப்புக்குப் பிறகு அமைச்சரவையில் சிறு மாற்றம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதன் படி தற்போதைய அமைச்சர்களில் 2 பேருக்கு “கல்தா” கொடுக்கப்படும் என்று தெரிகிறது.

  அதற்கு பதில் ஓ.பன்னீர் செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் மாபா பாண்டியராஜன், செம்மலை இருவரும் அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்று தெரிய வந்துள்ளது.

  இந்த நிலையில் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படவுள்ளதாக அமைச்சர் கே.சி.வீரமணி தகவல் தெரிவித்து உள்ளார். மேலும் அவர் கூறும் போது வரும் 15-ம் தேதிக்குள், அதிமுகவின் இரு அணிகளும் இணையும் என கூறினார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை சட்டம்
சினிமா
தங்க நகை
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink