பூமியை நெருங்கும் எரி நட்சத்திர மழை,
 • பூமியை நெருங்கும் எரி நட்சத்திர மழை,

  சுவிட்சர்லாந்து நாட்டில் இம்மாத இறுதிக்குள் எரி நட்சத்திர மழை பொழியும் எனவும் இதனை வெறும் கண்களால் கண்டு மகிழலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  சூரியனை பூமி அசுர வேகத்தில் சுற்றி முடிக்க ஒரு ஆண்டு தேவைப்படுகிறது.

  சூரியனை சுற்றி வரும்போது குறிப்பிட்ட சில இடங்களுக்கு செல்லும்போது வால் நட்சத்திரத்தின் சிதறல்கள் பூமியில் மழையாக பொழியும்.

  இதுபோன்ற ஒரு அரிதான நிகழ்வு சுவிட்சர்லாந்து நாட்டில் இம்மாத இறுதிக்குள் நிகழும் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளார்.

  குறிப்பாக, எதிர்வரும் 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் எரி நட்சத்திரங்கள் மழையாக பொழியும்.

  நள்ளிரவு 11 மணி முதல் அதிகாலை 4.30 மணிக்கு இடையில் இக்காட்சி நிகழ வாய்ப்புள்ளது.

  சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்நிகழ்வில் சுமார் 50 முதல் 75 எரி நட்சத்திரங்கள் சுவிஸ் மண்ணில் மழையாக பொழியும்.

  இக்காட்சியை பைனாகுலர் இல்லாமல் வெறும் கண்களாலும் பார்க்கலாம். ஆனால், வெளிச்சம் இல்லாத இருண்ட இடங்களில் மட்டுமே பார்க்க முடியும்.

  குறிப்பாக, வாட் மாகாணத்தில் உள்ள Les Pleiades என்ற பகுதியில் இந்த எரி நட்சத்திர மழையை துல்லியமாக பார்க்கலாம் என விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  பூமியை நெருங்கும் எரி நட்சத்திர மழை,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
விவசாயத் தகவல்கள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்