மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் பரா ஒலிம்பிக் போட்டிகள்,
  • மட்டக்களப்பில் மாற்றுத்திறனாளிகள் பரா ஒலிம்பிக் போட்டிகள்,

    மாற்றத்தை நோக்கி மாற்றுத்திறனாளிகள் எனும் தொனிப் பொருளிலான கிழக்கு மாகாண மாற்றுத்திறனாளிகளுக்கான பரா ஒலிம்பிக் போட்டி நிகழ்வுகள் நேற்று சனிக்கிழமை மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி மாற்றுத்திறனாளிகள் பங்குகொள்ளும் இப்போட்டி நிகழ்வு இரண்டாவது முறையாக மட்டக்களப்பில் நடைபெற்று வருகின்றது.

    மட்டக்களப்பு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் ஒன்றியத்ததின் தலைவர் எஸ். பரமானந்தம் தலைமையில் நடைபெற்ற இப்போட்டியின் ஆரம்ப நிகழ்வில் அதிதிகளாக, கிழக்கு மாகாண சமூகசேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.சி.எம். அன்ஸார், மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் வெள்ளக்குட்டி தவராஜா, மாவட்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எஸ். அருள்மொழி, சிரேஷ்ட சமூகசேவைகள் உத்தியோகத்தர் எம். அலியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
தையல்
மரண அறிவித்தல்
சிறுவர் உலகம்
 மரண அறித்தல்