சுவிஸ் உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாதை பாலம்,
 • சுவிஸ் உலகின் மிக நீளமான தொங்கும் நடைபாதை பாலம்,

  சுவிட்சர்லாந்து நாட்டில் திறக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தின் ஸெர்மாத் நகருக்கு அருகில் சுமார் ஆயிரத்து 640 அடி நீளத்தில், உலகிலேயே மிக நீளமான தொங்கும் பாலம் திறக்கப்பட்டுள்ளது.

  ஐரோப்பிய பாலம் என பெயரிடப்பட்டுள்ள இந்த பாலம் Grächen, Zermatt ஆகியவற்றை இணைக்கிறது. இது கிட்டதட்ட 500 மீட்டர் அளவைக் கொண்டுள்ளது.

  பாத சாரிகள் பயணிப்பதற்காக திறக்கப்பட்டுள்ள இந்த பாலம், ஆடாமல் இருப்பதற்காக 8 டன் எடை கொண்ட கேபிள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

  இதற்கு முன்னதாக இங்கு அமைக்கப்பட்டிருந்த பாலம், பாறைகள் விழுந்து சேதமடைந்த நிலையில் 2010 ஆண்டு முடப்பட்டது. அதற்கு பதிலாக இந்த புதிய தொங்கும் நடைபாதை பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

  புதிய பாலம் திறக்கப்படுவதற்கு முன்னர் பாத சாரிகள் இரண்டு நாட்கள் தெற்கு சுவிட்சர்லாந்து வழிப்பாதையில் சுற்றி செல்ல வேண்டியிருந்தது. தற்போது, திறக்கப்பட்டுள்ள புதிய பாலம் கோடைகாலத்தில் இருந்து பாதசாரிகள் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும், இந்த பாலத்தில் நடப்பதன் மூலம் உலகின் அழகான மலைத்தொடரை ரசிக்க முடியும் என அந்நாட்டு சுற்றுலா துறை தெரிவித்துள்ளது..

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மருத்துவம்
தொழில்நுட்பம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இந்தியச் செய்திகள்
 மரண அறித்தல்