நோய்களைத் துரத்தும் துத்தி Abutilon indicum,
  • நோய்களைத் துரத்தும் துத்தி Abutilon indicum,

    இதய வடிவ இலைகளையும், மஞ்சள் நிற சிறு பூக்களையும், தோடு வடிவக் காய்களையும் உடைய செடி. இலையில் மென்மையான கணையுண்டு. உடலில் பட்டால் சற்றே அரிக்கும். இது 4 அடி வரை வளரக் கூடியது. பூக்கள், அச்சு முறுக்கு அல்லது தாமரைப் பூ போன்று அமைந்திருக்கும்.

    துத்தியின் இரண்டு காய்ந்த காய்களை ஒன்றோடு ஒன்று இரு தலையையும் அழுத்தினால் ஒட்டிக்கொள்ளும். இலை, பூ, விதை, வேர் ஆகியவை மருத்துவக் குணம் உடையவை. தமிழ்நாட்டில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் மழைக் காலத்தில் தானாகவே இது வளரும்.

    இதன் பூ இரத்தப் போக்கை நிறுத்தவும். காமம் பெருக்கியாகவும் செயல்படக் கூடியது. விதை உடலுக்கு பலத்தைக் கொடுக்கும் குணம் உடையது. துத்தியில் பலவகைகள் இருந்தாலும் பசும் துத்தி, ஐந்து இதழ் துத்தி மற்ற துத்திகளை விட சிறந்த மருத்துவக் குணம் கொண்டது.

    வேறு பெயர்கள்: ஆனைக் கன்று, இயாகதம், ஐ இதழ், பணியார துத்தி.
    வகைகள்: ஐந்து இதழ் துத்தி, ஒட்டுத் துத்தி, சிறு துத்தி, பசும் துத்தி, கருந்துத்தி, நிலத்துத்தி, எலிக்காது துத்தி, முடக்கு துத்தி, நாம துத்தி, ராத்துத்தி, பெரும்துத்தி, வயிற்றுத் துத்தி, ரண துத்தி.

    ஆங்கிலத்தில்:Abutilon indicum; G.Don;
    மருத்துவக் குணங்கள்
    ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.

    துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)

    துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.

    துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.

    துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.

    துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.

    துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.

    துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.

    துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.

    துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.

    துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.

    துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும்.

     துத்தி உடலிலுள்ள புண்களை ஆற்றி, மலத்தை இளக்கி உடலைத் தேற்றுகிறது. துத்தி இலை வேர் முதலியவற்றை முறைப்படி குடிநீரிட்டு பல் ஈறுகளிலிருந்து ரத்தம் வருபவர்கள் வாய் கொப்பளித்து வர ரத்தம் வடிவது நிற்கும். உடலில் ஏற்படும் வலிகளுக்கு துத்தி இலையை கொதிக்கும் நீரில் போட்டு வேக வைத்து அந்நீரில் துணியை முக்கி ஒற்றடமிட்டு வந்தால் வலி குணமாகும்.

    ·  கழிச்சல் இருப்பவர்கள் துத்தி இலையின் சாறு இருபத்தினான்கு கிராம் நெய் பன்னிரண்டு கிராம் கலந்து உட்கொண்டு வந்தால் குணமாகும்.

    ·  ஆசன வாய்க் கடுப்பு, சூடு முதலியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் துத்தி இலைக் குடிநீருடன் பாலும் சர்க்கரையும் கலந்து உட்கொண்டு வர நலம் தரும். மலத்தை இளக்கும்.
    ·  துத்தி இலையை பருப்புடன் சேர்த்து உண்டு வந்தால் மூலச்சூடு நீங்கும்.

    ·  எளிதில் பழுக்காத கட்டிகளின் மீது துத்தி இலையை இடித்துப் பிழிந்த சாற்றை அரிசி மாவுடன் கலந்து களியாகக்கிண்டி கட்டிகளின் மீது பூசி, கட்டி வந்தால் அவை  எளிதில் பழுத்து உடையும்.

    ·  இரத்த வாந்தியால் துன்பப்படுபவர்கள் துத்திப் பூவை நன்கு உலர வைத்து சூரணம் செய்து தேவையான அளவு பாலும் கற்கண்டும் சேர்த்து அருந்தி வந்தால் ரத்த வாந்தி நின்று உடல் குளிர்ச்சியாகும். ஆண்மையையும் இது பெருக்கும்.

    ·  துத்திப் பூவை உலர்த்தி பொடி செய்து சம அளவு சர்க்கரை கலந்து பசும் பாலுடன் அருந்தி வந்தால் நுரையீரல் கபம், இருமல், இரைப்பு, காசநோய் இரத்த வாந்தி, முதலியவை குணமாகும்.
     
    ·  துத்தி விதைகளைப் பொடித்து சர்கரையுடன் கலந்து இருநூற்று ஐம்பது மி.கி. முதல் ஐநூறுமி.கி. அளவு உண்டு வந்தால் சரும நோய்கள் உடல் சூடு, தொழுநோய், கருமேகம், வெண்மேகம், மேகஅனல் முதலியவை கட்டுப்படும்.

    ·  வெள்ளைபடுதல் நோய், மூலம் உடையவர்கள் இதன் விதையைக் குடிநீர் செய்து முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வரலாம்.

    ·  துத்தி வேர் முப்பத்தயிந்து கிராம் திராட்சைப் பழம் பதினேழு கிராம் நீர் எழுநூறு மி.லி சேர்த்து நன்கு காய்ச்சி நூற்று எழுபது மி.லி ஆக வற்ற வைத்து வடிகட்டி காலை மாலை இரு வேளையும் முப்பது முதல் அறுபது மி.லி. அருந்தி வந்தால் தாகம், நீரடைப்பு, மேகச்சூடு, முதலியவை குணமாகும்.

    ·  துத்தி விதைகளைப் பொடி செய்து சம அளவு கற்கண்டுப் பொடி கலந்து அரை முதல் ஒரு கிராம் இரண்டு வேளை நெய்யுடன் குழைத்து உண்டு வந்தால் வெண்புள்ளி நோய் குணமாகும்.

    ·  துத்தி வேரை உலர்த்தி பொடி செய்து மூன்று கிராம் முதல் ஐந்து கிராம் வீதம் தினமும் பாலில் சேர்த்துக் குடித்து வர மூலச் சூடுதணியும்.

    ·  வாயு சம்பந்தப் பட்ட வியாதிகளுக்கும் இடுப்புவலி, பழைய மலத்தினால் உண்டாகும் பூச்சிகள் ஒழிய இந்தக் கீரையை அடிக்கடி கடைந்தோ பொரியல் செய்தோ உணவுடன் சேர்த்துக் கொண்டு வந்தால் யாவும் குணமடையும்.

    ·  எலும்பு முறிவு ஏற்பட்டால், முதலில் எலும்பை ஒழுங்குபடுத்திக் கட்டிக் கொண்டு இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாகப் பூச அதன் மேல் துணியைச் சுற்றி அசையாமல் வைத்திருந்தால் வெகு விரைவில் முறிந்த எலும்பு கூடி குணமாகும்.

    ·  துத்தி இலையை நன்றாக அரைத்துக் கசக்கி சாறு எடுத்துக் கொண்டு அந்தச் சாற்றுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நீர் சுண்டும் அளவு நன்றாக காய்ச்சி வடிகட்டிப் பாட்டிலில் வைத்துக் கரப்பான் கண்ட குழந்தைகளுக்கு தடவி வந்தால் இந்நோய் குணமாகும்.

    ·  குடற்புண்ணால் வேதனைபடுகின்றவர்கள் துத்தி கஷாயத்தை தினசரி மூன்று வேளை சர்க்கரை கலந்து குடித்து வந்தால் பூரண குணம் பெறலாம். தவிர நீர்சுளுக்கு, தொண்டை கம்மல் சொரிசிரங்கு உள்ளவர்கள் இந்த கஷாயத்தை குடித்து குணமடையலாம்.

    ஐந்து பெரிய துத்தி இலைகளை எந்தக் கீரையுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தாலும், ஆண், பெண் இருவருக்கும் உள்ள வெள்ளை வெட்டை நீங்கும்.

    துத்தி இலையை காரமின்றி பொரியலாகச் செய்து உணவுடன் உண்டு வர 120 நாள்களில் மூல நோய் முற்றிலும் குணமாகும். (புளி, காரம், புகை, புலால் நீக்க வேண்டும்)
    துத்தியிலையை நிழலில் உலர்த்தி காயவைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு தேக்கரண்டி பொடியை வெந்நீரிலோ அல்லது 1 டம்ளர் பாலிலோ 2 வேளை சாப்பிட்டு வர மூல நோய் கட்டுப்படும்.

    துத்தியிலையையும், வேலிப் பருத்தி இலையையும் சம அளவாக எடுத்து அனைத்து சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து வாயில் நன்றாக வைத்துக் கொப்பளித்து துப்பிவிடவேண்டும். இப்படிச் செய்வதால் பல் வலி, கூச்சம் போன்றவை குணமாகும்.

    துத்தி இலையை விளக்கெண்ணெயில் வதக்கி இளம் சூட்டில் கட்டி வர, இரத்த மூலம், சீழ் மூலம் குணமாகும்.

    துத்தியிலையின் பூவை நிழலில் உலர்த்திக் காயவைத்து இடித்துப் பொடியாக்கி அதேயளவு சர்க்கரை கலந்து அரைத் தேக்கரண்டியளவு எடுத்து 1 டம்ளர் பாலில் கலந்து 2 வேளை குடித்து வர காசம், நுரையீரல் கபம், இரைப்பு, இரத்த வாந்தி குணமாகும்.

    துத்தியின் விதையை நிழலில் காயவைத்து இடித்துப் பொடியாக்கி 5 கிராம் எடுத்து, கற்கண்டு பொடி 5 கிராம் சேர்த்து சிறிது தேனுடன் கலந்து 2 வேளை சாப்பிட்டு வர கருமேகம், வெண்மேகம், உடல் சூடு, மேக அனல் குணமாகும்.

    துத்தியின் விதையைப் பசுவின் பால் விட்டு அரைத்து நெல்லிக் காயளவு எடுத்து 1 டம்ளர் பாலுடன் கலந்து 2 வேளை தொடர்ந்து குடித்து வர, கை, காலில் படர்கின்ற கருமேகம், குட்டம், வெப்பு குணமாகும்.

    துத்தியிலையைக் கைப்பிடியளவு எடுத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது பாலும், சர்க்கரையும் சேர்த்து காப்பி குடிப்பது போலக் குடித்து வர, மேகச் சூடு தணியும்.

    துத்தியிலையில் வெங்காயம், சிறு பயிறு சேர்த்து சமைத்து உண்ண மலச்சிக்கல் நீங்கும். மூலச் சூடு தணியும்.

    துத்தி வேர் 60 கிராம், திராட்சை 30 கிராம் இவற்றைச் சிதைத்து 1 லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியாக வற்றக் காய்ச்சி வடிகட்டி சிறிது நெய் சேர்த்துச் சாப்பிட நீர்ச் சுருக்கு நீங்கும்.

    துத்தியிலையை அரைத்து பருக்கள் மீது தடவி வர அல்லது துத்தியிலையில் காடி சேர்த்து அரைத்து பருக்கள் மீது கட்டி வர பருக்கட்டிகள் உடைந்து குணமாகும்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆன்மிகம்
மங்கையர் மருத்துவம்
தமிழகச் செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்