நீண்ட ஆயுளுடன் வாழ அதிகம் காப்பி அருந்துங்கள்,
  • நீண்ட ஆயுளுடன் வாழ அதிகம் காப்பி அருந்துங்கள்,

    நாளொன்றுக்கு மூன்று கப் காபி அருந்துவது நீங்கள் நீண்ட காலம் வாழ உதவலாம் என்று 10 ஐரோப்பிய நாடுகளில் ஏறத்தாழ அரை மில்லியன் மக்களிடையே நடத்தப்பட்ட ஆய்வு கூறுகிறது.

    அதிகமாக காபி அருந்துவது, மரணம் நேருவதற்கான குறைந்த ஆபத்து உடையது என்றும் குறிப்பாக இதய நோய்கள் மற்றும் குடல் நோய்களுடன் உள்ளவர்களுக்கு இது பொருந்தும் என்று புற்று நோய் ஆராய்ச்சிக்கான சர்வதேச முகமை மற்றும் லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

    ஐரோப்பிய யூனியனில் உள்ள பத்து நாடுகளைச் சேர்ந்த 35 வயதுக்கும் அதிகமான ஆரோக்கியமாக வாழும் மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவுக்கு பிறகு, இதனை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆய்வின் தொடக்கத்தில் எவ்வளவு காபி குடிக்கின்றனர் என்று அந்த மக்களிடம் ஆய்வாளர்கள் கேட்டனர். பிறகு, அவர்களில் சராசரியாக 16 ஆண்டுகளில் ஏற்பட்ட மரணங்களை கணக்கெடுத்தனர்.

    பொதுமக்களால் உணரப்படும் ஆபத்து பற்றி ஆய்வு செய்த பிறகு, காபியால் மரணங்கள் குறைவதாக மதிப்பிட்டால், தினமும் கூடுதலாக காபி குடிப்பதால் ஒரு ஆணின் ஆயுள் சுமார் மூன்று மாதங்களும் ஒரு பெண்ணின் ஆயுள் சராசரியாக ஒரு மாதமும் அதிகமாகலாம் என்கிறார் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியர் சர் டேவிட் ஸ்பீக்ஹால்டர்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
இந்திய சட்டம்
சாதனையாளர்கள்
ஆன்மிகம்
 மரண அறித்தல்