அரசு வசமானது நெவில் பெர்ணான்டோ வைத்தியகல்லூரி,
 • அரசு வசமானது நெவில் பெர்ணான்டோ வைத்தியகல்லூரி,

  இதன் பெறுமதி சுமார் 3000 மில்லியன் ரூபாய் மாலபே – சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்ணான்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்றுபொறுப்பேற்றுக்கொண்டது

  நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தத்தில் ஜனாதிபதி முன்னிலையில் வைத்தியர் நெவில் பெர்ணான்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.

  நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையானது, நவீன வைத்திய உபகரணங்களுடன் சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளதோடு, இதன் பெறுமதி சுமார் 3000 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்படுகிறது. வைத்தியசாலையுடன், அதன் பணியாளர்களும் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

  இந்த வைத்தியசாலையை அரசாங்கத்திடம் ஒப்படைப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து எவ்வித கட்டணங்களையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் வைத்தியசாலையின் தலைவர் வைத்தியர் நெவில் பெர்னாண்மோ ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

  இவ் வைத்தியாலையை போதனா வைத்தியசாலையாக மாற்றி, எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் முதலாம் திகதி மக்கள் பாவனைக்காக கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மரண அறிவித்தல்
தொழில் நுட்பம்
சரித்திரம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
 மரண அறித்தல்