படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்,
 • படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்,

  இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை  எல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை அமைக்கும் பணியை சீனா கடந்த 4 வாரங்களுக்கு முன்னர் தொடங்கியது.

  பாதுகாப்பு காரணங்களுக்காகவும் அந்த பகுதி நம் கட்டுப்பாட்டில் உள்ளதாலும் இந்திய இராணுவம் அப்பணியை தடுத்து நிறுத்தியது. இதனால் சீன ராணுவம் நம் மீது கடுங்கோபத்தில் உள்ளது.

  இந்த பதற்றம் காரணமாக, அந்த எல்லையில் இரு நாட்டு படைகளும் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. படைகளை திரும்ப பெற இரு நாடுகளும் பரஸ்பரம் எச்சரிக்கை விடுத்தன.

  இந்த விவகாரத்தில் இரு நாட்டு இராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்துவதை காட்டிலும் தூதரக ரீதியிலான பிரச்சினையையே இந்தியா விரும்புகிறது. இந்த நிலையில் இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

  சீனா நாட்டின் அதிகாரப்பூர்வ ஊடகமான ஷின்ஹுவாவில், எல்லை பிரச்சினையில் பேசி தீர்த்துக் கொள்ளும் பேச்சுக்கே இடம் இல்லை.

  டோக்லாமில் எல்லை தாண்டி நிறுத்தப்பட்டுள்ள படைகளை இந்தியா திரும்ப பெற வேண்டும். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும். இந்தியா கடும் பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வரும்.

  சீனாவை பொறுத்தமட்டில் எல்லை என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். தற்போதைய சூழல் அப்படியே இருக்கும் என்றோ அல்லது கடந்த 2013 மற்றும் 2014ல் லடாக்கில் நடந்த எல்லை பிரச்சினையை போன்றது என்றோ இந்தியா கருத வேண்டாம்.

  பொதுவாக எல்லைகளில் பிரச்சினை ஏற்பட்டால் தூதரக ரீதியிலான தீர்வே பெரும்பாலும் நடைபெறும். ஆனால் தற்போது ஏற்பட்டுள்ள விவகாரம் முற்றிலும் மாறுபட்டது என்று ஷின்ஹுவாவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வீடியோ
இலங்கை சட்டம்
சரித்திரம்
வினோத நிகழ்வுகள்
 மரண அறித்தல்
The resource you are looking for has been removed, had its name changed, or is temporarily unavailable.
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink