தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் காட்டிக்கொடுத்த அட்மிரல் கரன்னகொட,
 • தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரம் காட்டிக்கொடுத்த அட்மிரல் கரன்னகொட,

  பல ராணுவ அதிகாரிகள் விரைவில் கைது.2008 மற்றும் 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படையைச் சேர்ந்த மேலும் பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட வழங்கிய தகவல்களின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்படவுள்ளதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

  கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட கடந்த ஆண்டு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

  இதன்போது ஆட்கடத்தல் சம்பந்தமாக குற்றப்புலனாய்வு பிரிவினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் வழங்கிய வாக்குமூலத்திற்கு அமைய கடற்படை அதிகாரிகள் பலர் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதேவேளை, 11 தமிழ் இளைஞர்கள் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கடற்படையின் முன்னாள் ஊடகப் பேச்சாளரான கொமடோர் டி.கே.பி.தசநாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
இலக்கியம்
இந்திய சட்டம்
ஜோதிடம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink