அவுஸ்திரேலிய அகதிகள் ஒப்பந்தத்தில் மீண்டும் குழப்பம்,
 • அவுஸ்திரேலிய அகதிகள் ஒப்பந்தத்தில் மீண்டும் குழப்பம்,

  அமெரிக்க அதிகாரிகள் வெளியேற்றம் அவுஸ்திரேலியாவின் நவுரு மற்றும் மனுஸ்தீவு தடுப்பு மையங்களில் உள்ள அகதிகளை அமெரிக்காவில் குடியமர்த்துவது, கோஸ்டா ரிக்கா தடுப்பு மையத்தில் உள்ள மத்திய அமெரிக்க அகதிகளை அவுஸ்திரேலியாவில் குடியமர்த்துவது என்ற உடன்பாட்டின் அடிப்படையில் கடந்த ஆண்டு அமெரிக்கா - அவுஸ்திரேலியா இடையேயான அகதிகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.

  அமெரிக்காவில் ஆட்சி மாற்றம், அகதிகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனல்ட் டிரம்ப் பின்பற்றும் கடும்போக்கு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்களுக்கு பின்னர் இதனை நடைமுறைப்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டன.

  இதற்காக பசுபிக் தீவில் உள்ள நவுரு தடுப்பு மையங்களில் முகாமிட்ட அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகள் பரிசோதனை நேர்காணல்களை நடத்தி வந்தனர்.

  இந்நிலையில் எவ்வித முன்னறிவிப்புமின்றி இப்பணி இடையிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், இந்த ஒப்பந்தத்தின் மீது மேலும் குழப்பத்தையும் சந்தேகத்தையும் உருவாக்கியுள்ளது.

  இது தொடர்பாக நவுரு முகாமில் உள்ள ஓர் அகதி ராய்டர்ஸிடம் கருத்து தெரிவித்துள்ளார். “அமெரிக்க அதிகாரிகள் ஜூலை 26ம் திகதி வரை இருப்பதாக அறிவுறுத்தியிருந்தனர். ஆனால் அவர்கள் ஜூலை 14ம் திகதியே வெளியேறி விட்டார்கள் என்று தெரிவித்தார்.

  இதுபோல மூத்த அமெரிக்க குடிவரவுத்துறை அதிகாரிகளின் நவுருப் பயணம் திட்டமிட்டவாறு நடைபெறவில்லை எனக் கூறப்படுகின்றது. இதைப்பற்றி கருத்து தெரிவிக்க அவுஸ்திரேலிய குடிவரவுத்துறை மறுத்துவிட்டது.

  50,000 அகதிகளை உள் எடுத்துக் கொள்ளும் எண்ணிக்கையை அமெரிக்கா எட்டி விட்டதாகவும் ஒக்டோபர் 1ம் திகதிக்கு பின்னரே மீண்டும் புதிதாக அகதிகளை உள் எடுப்பதற்கான பணிகள் தொடங்கும் என கடந்த ஜூலை 13ம் திகதி அமெரிக்க அரசு அறிவித்திருந்தது.

  இச்சிக்கல் தொடர்பாக பேசியுள்ள அவுஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜூலி பிஷப், “ஒக்டோபர் 1ம் திகதிக்கு பின் புதிய எண்ணிக்கை தொடங்கும், அமெரிக்க அதிபர் உறுதி அளித்துள்ளதன் படி அகதிகள் ஒப்பந்தத்தை அமெரிக்கா கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

  எந்த முன்னறிவிப்போ காலவரையோயின்றி அமெரிக்கா - அவுஸ்திரேலிய அகதிகள் ஒப்பந்தத்தினை அமெரிக்கா தள்ளிப்போட்டுள்ளதால், ஒக்டோபர் 31க்குள் மனுஸ்தீவு தடுப்பு முகாமினை மூட வேண்டும் என்ற அவுஸ்திரேலியாவின் உறுதிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

  இதுவரை தடுப்பு முகாம்களில் உள்ள 70 அகதிகளிடம் (மொத்த எண்ணிக்கையில்10 வீதம்) மட்டுமே அமெரிக்க அதிகாரிகள் நேர்காணலினை நிறைவு செய்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

  அவுஸ்திரேலிய அகதிகள் ஒப்பந்தத்தில் மீண்டும் குழப்பம்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
சுவிஸ் செய்தி
சாதனையாளர்கள்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink