-
பெங்களூரு: சிறையில் சொகுசு வாழ்க்கைக்காக சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. பரப்பன அக்ரஹார சிறையில் கைதிகள் இடையே மோதல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதால், சசிகலா வேறு சிறைக்கு மாற்றப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா சிறை அதிகாரிகளுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்து, சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சசிகலாவுக்கு விதிகளை மீறி சலுகைகள் வழங்கப்பட்டுள்ளதாக, சிறைத்துறை டிஐஜி ரூபா அளித்த அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ரகசியமாக நடந்து வந்த இந்த சொகுசு வாழ்க்கை குறித்த தகவல் வெளியானதால் சசிகலா மிகவும் டென்சனில் உள்ளார். இனி வெளிப்படையாக எதையும் செய்ய வேண்டாம்;
கவனமாக இருக்குமாறு தினகரன், விவேக் ஆகியோரிடம் சசிகலா கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதனால் சசிகலாவுக்கு சிறைக்குள் பிரத்யேக உணவுப்பொருட்கள், மருந்துகள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. சிறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக கூறப்படும் குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சசிகலாவுக்கு சொகுசு வாழ்க்கையும் தடைபட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், சிறையில் உள்ள கைதிகள் போதைப்பொருட்கள், செல்போன் பயன்படுத்துவதாகவும், சூதாட்டத்தில் ஈடுபட்டதாகவும் டிஐஜி ரூபா தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி வினய்குமார் தலைமையில், கர்நாடக அரசு விசாரணை குழு அமைத்துள்ளது. இக்குழுவினர் விசாரணையை தொடங்குவதற்கு முன்பே, நேற்று காலை பரப்பன அக்ரஹார சிறைக்கு சென்ற சிறைத்துறை டிஜிபி சத்யநாராயணராவ், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில், ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நேற்று மாலை டிஐஜி ரூபாவும் சிறைக்கு சென்று ஆலோசனை நடத்தினார். அப்போது அங்கு வந்த சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார், ரூபாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஆய்வின்போது பார்த்ததைதான் அறிக்கையாக தந்தேன் என ரூபா தெரிவித்தார்.
இந்நிலையில், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வரும் கைதிகளுக்கும், சிறை விதிமுறைகளை கடைபிடித்து வரும் கைதிகள் இடையே மோதல் ஏற்படும் நிலை ஏற்பட்டது. சிறையில் நடக்கும் விஷயங்களை சில கைதிகள்தான் புகார் அனுப்பியதாக சொகுசு வாழ்க்கை வாழும் கைதிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் கைதிகள் இடையே மோதல் உருவாகும் நிலை இருந்தது.கைதிகள் சிலர் கோஷங்களையும் எழுப்பினர். இதனால், சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில், அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில், சிறையில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டது. சந்தேகத்துக்கு உரிய 20 கைதிகள் உடனடியாக பெல்லாரி சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர். இந்த விவகாரம் குறித்து, மாநில காவல்துறை தலைவர் ஆர்.கே.தத்தா சிறையில் இன்று விசாரணை செய்ய முடிவு செய்துள்ளார். டிஐஜி ரூபா அளித்த அறிக்கை தொடர்பாக, விசாரணை நடத்த அமைக்கப்பட்டுள்ள வினய்குமார் தலைமையிலான குழு நாளை விசாரணை தொடங்குகிறது.
சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக சிறைத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்த விவகாரத்தால், பரப்பன அக்ரஹார சிறையில் அசாதாரண சூழல் நிலவுகிறது. எனவே, சசிகலா வேறு சிறைக்கு மாற்ற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. சிறை விவகாரத்தை கர்நாடக மாநில எதிர்க்கட்சிகள் முக்கிய பிரச்னையாக கையில் எடுத்துள்ளன.
சட்டம்-ஒழுங்கு குறித்து முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, குமாரசாமி உள்ளிட்டோர் கேள்வி எழுப்பியுள்ளனர். சிறைக்குள் நடக்கும் விஷயங்கள் வெளியே தெரியாமல் இருக்க பல்வேறு முறைகேடுகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளனர். இந்த விவகாரம் முதல்வர் சித்தராமையாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
-
பகிர்ந்தளிக்க :
-
[ 2016-07-23 22:29:15 ]
-
[ 2015-02-21 15:08:01 ]
-
[ 2014-11-23 08:47:51 ]
-
[ 2014-08-12 21:18:34 ]
-
[ 2018-03-19 20:18:19 ]
-
[ 2018-03-19 20:15:02 ]
-
[ 2018-03-19 20:12:45 ]
-
[ 2017-10-01 00:12:45 ]
-
[ 2018-04-02 09:59:34 ]
-
[ 2018-03-22 08:41:25 ]
-
[ 2018-03-09 07:05:36 ]
-
[ 2018-02-18 01:45:57 ]
-
மரண அறிவித்தல் பெ திருமதி-குமாரசாமி மகேஷ்வரி. பி மட்டக்களப்பு அன்னமலை. வா யாழ். நாச்சிமார் கோவிலடி. தி இறப்பு : 2 யூலை 2017. -
மரண அறிவித்தல் பெ திரு.மயில்வாகனம் ருக்மாங்கதன். பி மட்டக்களப்பு நாவற்குடா. வா பிரான்ஸ் Gien தி உதிர்வு : 15 யூன் 2017. -
மரண அறிவித்தல் பெ திரு சோமசுந்தரம் சுரேந்திரன். பி மட்டக்களப்பு புளியந்தீவு சிங்களவாடி சூரியா லேன். வா கனடா Toronto தி 7 மே 2017. -
மரண அறிவித்தல் பெ திரு கதிரேசன் செல்லத்துரை. பி துறைநீலாவணை வா துறைநீலாவணை தி மறைவு : 4 மே 2017 -
மரண அறிவித்தல் பெ திருமதி மாரிமுத்து வல்லிபுரம் பி மட்டக்களப்பு கோட்டைக்கல்லார் வா திருகோணமலை தி இறப்பு : 26 ஏப்ரல் 2017 -
மரண அறிவித்தல். பெ திருமதி-பரராஜசிங்கம் சிவபாக்கியம்(ரெத்தினம்) பி கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும், சுவிசை தற்காலிக வதிவிடம் வா சுவிசை தற்காலிக வதிவிடம் தி யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரம் -
மரண அறிவித்தல். பெ இளையதம்பி சிவானந்தராஜா. பி பாண்டிருப்பு. வா பாண்டிருப்பு 2 ம் குறிச்சி தி 21-10-2016. -
மரண அறிவித்தல் பெ அமரர் திருமதி.ரதி கோபாலபிள்ளை. பி ஓந்தாச்சிமடம், வா மட்டக்கிளப்பு சென் செபஸ்தியான் வீதி இல-58/7 தி மட்டக்கிளப்பு, -
மரண அறிவித்தல் பெ திருமதி யோகேஸ்வரன் தவறஞ்சிதம்(றோசா) பி முள்ளியவளை தண்ணீரூற்று, வா முள்ளியவளை தண்ணீரூற்று தி முள்ளியவளை தண்ணீரூற்று, -
மரண அறிவித்தல், பெ திரு நல்லரட்ணம் சிவராசா பி அவுஸ்திரேலியா Melbourne வா Allison Monkhouse, Funeral Home, Corner Stud Rd & Burwood Hwy, Wantirna VIC 3152, Australia. தி மட்டக்களப்பு கோட்டைமுனை