சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு அலுவலகம், தினசரி தர்பார்,
 • சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு அலுவலகம், தினசரி தர்பார்,

  டி.ஐ.ஜி. ரூபா 2-வது அறிக்கை சசிகலாவை பார்க்க வருபவர்களை, அவர் சந்தித்து பேசுவதற்காக தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது என ரூபா இரண்டாவது அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

  டி.ஐ.ஜி. ரூபா சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக 2-வது அறிக்கையை தாக்கல் செய்ய இருப்பதாக நேற்று முன்தினமே தகவல் வெளியானது.

  அதன்படி, அவர் நேற்று சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக 2-வது அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையை கர்நாடக சிறைத்துறை டி.ஜி.பி. சத்திய நாராயணராவுக்கு டி.ஐ.ஜி. ரூபா அனுப்பி வைத்துள்ளார். அதே நேரத்தில் அந்த அறிக்கையின் நகலை கர்நாடக தலைமை செயலாளர் சுபாஷ் சந்திர குந்தியா, உள்துறை செயலாளர் மற்றும் கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. ஆர்.கே. தத்தாவுக்கும் டி.ஐ.ஜி. ரூபா அனுப்பி வைத்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள அறிக்கை 3 பக்கங்களை கொண்டதாக உள்ளது.

   இந்த நிலையில், டி.ஐ.ஜி. ரூபா தாக்கல் செய்திருக்கும் 2-வது அறிக்கையில் கூறியுள்ள சில குற்றச்சாட்டுகள் தற்போது வெளியே கசிந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

  பெலகாவியில் உள்ள சிறையில் தனக்கு எதிராக கைதிகள் நடத்திய போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது. அது எப்படி? என்பது பற்றியும் விசாரிக்க வேண்டும். முதல் அறிக்கையில் 8-வதாக நான் குறிப்பிட்டு இருந்த குற்றச்சாட்டுகள் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் செயல் நடைபெற்று வருகிறது. அதாவது சிறையில் உள்ள 7-வது மற்றும் 8-வது பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன. சசிகலாவை பார்க்க வருபவர்களை, அவர் சந்தித்து பேசுவதற்காக தனியாக அறை ஒதுக்கப்பட்டுள்ளது.

  அந்த அறையில் சேர்கள் உள்ளிட்ட வசதிகள் உள்ளன. மேலும் பார்வையாளர்களை சந்திக்க வரும் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படவில்லை. மேற்கண்ட விவரங்கள் அந்த 2-வது அறிக்கையில் இடம்பெற்று இருப்பதாக தெரிகிறது.

  சிறை பணியாளர்கள் சசிகலாவிற்கு சிறப்பு அறையை ஒதுக்கி உள்ளனர். நாற்காலிகள் மற்றும் மேஜையுடன் அலுவலகம் போன்ற ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தினசரி செயல்படும் அலுவலகம் போன்று ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என தகவல்கள் தெரிவித்து உள்ளன. சிறையின் பெண் கண்காணிப்பாளர் அறைக்கு அடுத்த அறையில் சசிகலாவிற்கு சிறப்பு அலுவலகம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஏற்பாடுகள் தொடர்பாக பணியாளர்களிடம் விசாரித்தபோது ரூபா கேட்டு தெரிந்து உள்ளார், இதனை அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார்.

  ரூபாவின் விசாரணையில் சிறை பணியாளர்கள் தினமும் சசிகலாவை சந்திக்க அதிகமான பார்வையாளர்களை அனுமதித்து உள்ளனர் என்பதும் தெரியவந்து உள்ளது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
இலங்கை செய்தி
சுவிஸ் செய்தி
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink