பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பிரதமர் மோடி,
 • பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை பிரதமர் மோடி,

  பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார்.

  புதுடெல்லி,
  நாடு முழுவதும் பசு பாதுகாவலர்கள் என தங்களை அழைத்துக் கொள்பவர்கள் வன்முறை சம்பவங்களில் ஈடுபடும் சம்பவமானது அதிகரித்து காணப்படுகிறது. இவ்விவகாரத்தில் மத்திய அரசு மீது கடும் விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியும் பசு பாதுகாப்பு என்ற பெயரில் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என எச்சரிக்கை விடுத்தார். இருப்பினும் அதுபோன்ற கொடூரச் சம்பவங்கள் நடந்த வண்ணமே உள்ளது.

  நாக்பூர் மாவட்டத்தில் கடோல் நகர் பகுதியை சேர்ந்த சலீம் இஸ்மாயிலை (வயது 31) 13-ம் தேதி மாலை ஸ்கூட்டரில் மாட்டிறைச்சியை எடுத்துச் சென்றதாக கொடூரக் கும்பல் தாக்கியது. சலீம் இஸ்மாயில் தாக்கப்படுவதை சிலர் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பரவவிட்டனர். அதன்மூலம் குற்றவாளிகளை அடையாளம் கண்டுகொண்ட போலீசார் இதில் தொடர்புடைய 4 பேரை கைது செய்தனர். தொடர்ச்சியாக இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று வருவதும் பெரும் அதிர்ச்சியையும், கோபத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

  நாளை பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. அப்போது எதிர்க்கட்சிகள் இவ்விவகாரத்தை எழுப்பலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தினார். அனைத்து கட்சி கூட்டத்தின் போது முக்கிய விவகாரங்கள் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பேசிய பிரதமர் மோடி பசு பாதுகாப்பு என வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மோடி உறுதியளித்து உள்ளார் என்று மத்திய மந்திரி ஆனந்த் குமார் கூறினார்.

  பிரதமர் மோடி பேசுகையில், பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுக்கும்படி மாநில அரசுக்களிடம் கேட்டுக் கொண்டு உள்ளேன். பசுவின் பெயரில் இதுபோன்று நடைபெறும் வன்முறைகளுக்கு அரசியல் அல்லது மத சாயத்தை பூசக்கூடாது. இதனால் தேசம் பலன்பெறாது. பசு தாயை போன்றது என்ற நம்பிக்கையானது பரவலாக உள்ளது, இதனால் மக்கள் அவர்களுடைய கையில் சட்டத்தை எடுக்கக்கூடாது,” என பேசிஉள்ளார்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
சட்டம்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்