தமிழ் நீதி நூல் திருக்குறள் முழு விளக்கம்,
 • தமிழ் நீதி நூல் திருக்குறள் முழு விளக்கம்,

  மக்களுக்கு ஒழுக்க நீதிகளை அறிவுறுத்துவதற்காக எழுந்த நூல் நீதி நூல் எனப்படுகின்றது. பண்டைக்காலம் தொட்டே தமிழில் பல நீதி நூல்கள் எழுந்துள்ளன. சங்ககால நூல்கள் பலவற்றில் நீதிக் கருத்துக்கள் ஆங்காங்கே பரவிக் காணப்பட்டாலும், நீதி நூல் என்று கூறுமளவுக்குத் தனியான நூல் எதுவும் கிடைக்கவில்லை. சங்கம் மருவிய காலத்து நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள 18 நூல்களுள் 11 நீதி நூல்களாகக் காணப்படுகின்றன. இவற்றுள் புகழ் பெற்றதும், பரவலாக அறியப்பட்டதும், வெளிநாட்டு அறிஞர்களின் கவனத்தை ஈர்த்ததுமான நூல் திருக்குறளாகும்.

  சங்க காலம் - பதினெண் கீழ்க்கணக்கு

      திருக்குறள்
      நாலடியார்
      நான்மணிக்கடிகை
      இன்னா நாற்பது
      இனியவை நாற்பது
      திரிகடுகம்
      ஆசாரக்கோவை
      பழமொழி நானூறு
      சிறுபஞ்சமூலம்
      ஏலாதி
      முதுமொழிக்காஞ்சி

  இடைக்காலம்

      அருங்கலச் செப்பு
      அறநெறிச்சாரம்
      நறுந்தொகை
      நீதிநெறிவிளக்கம்
      நன்னெறி
      உலகநீதி
      முதுமொழி வெண்பா - சிவஞான முனிவர் - நீதிக் கதை நூல்

  அவ்வையார்
      ஆத்திசூடி
      கொன்றை வேந்தன்
      மூதுரை
      நல்வழி

  பிற்காலம்
      புதிய ஆத்திசூடி
      நெறிசூடி
      தமிழ் சூடி
      நீதி சூடி
      நீதி சிந்தாமணி
      பொண்மதிமாலை
      நீதிநூல் (வேதநாயகம் பிள்ளை)
      நீதிபேதம்
      விவேக சிந்தாமணி

  சதகங்கள்

      தண்டலையார் சதகம்
      கோவிந்த சதகம்
      சயங்கொண்டார் சதகம்
      அறப்பளீசுர சதகம்
      மணவாள நாராயண சதகம்

  நீதிக் கதை நூல்கள்

      பஞ்ச தந்திரக் கதைகள் (தமிழ் மொழிபெயர்ப்பு)
      தமிழ் ஈசாப்புக் கதைகள் (தமிழ் மொழிபெயர்ப்பு)

  பூதஞ்சேந்தனார் என்பவர் இயற்றிய நூல் இனியவை நாற்பது. இது நாற்பது வெண்பாக்களினால் ஆனது. பண்டைக்காலத் தமிழ்நூல் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் இதுவும் ஒன்று. உலகில் நல்ல அல்லது இனிமையான விடயங்களை எடுத்துக்கூறுவதன் மூலம் மக்களுக்கு நீதி புகட்டுவதே இந்நூலின் நோக்கம். ஒவ்வொரு பாடலும் மூன்று நல்ல விடயங்களை எடுத்துக் கூறுகின்றது.

  எடுத்துக்காட்டு

  சுற்றியிருப்பவர்களுக்குக் கல்வி கற்பித்தல் மிகவும் நல்லது; கற்றறிந்த பெரியோர்களைத் துணை கொண்டு வாழ்தலும் மிக நன்று; சிறிய அளவிலாயினும் தேவைப்படுபவர்களுக்குக் கேட்காமலேயே கொடுப்பது எப்பொழுதுமே நல்லது என்னும் பொருள்படும் இந்நூற் பாடலொன்று பின்வருமாறு:

      சுற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே
      மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே
      எள்துணை யானும் இரவாது தான்ஈதல்
      எத்துணையும் ஆற்ற இனிது.

  இந்நூல் பதினெண் கீழ்க்கணக்கில் உள்ள நான்கு நாற்பது பாடல்களைக் கொண்ட நூல்களில் இரண்டாவதாகும். இதன் ஆசிரியர் மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ் சேந்தனார் எனப்படுவர். இவர் தந்தையார் மதுரைத் தமிழாசிரியர் பூதன். இவர் வாழ்ந்த நாடு பாண்டி நாடு. இவர் சிவன், திருமால், பிரமன் முதலிய மூவரையும் பாடியிருப்பதால் சர்வ சமய நோக்குடையவராயிருந்திருக்க வேண்டும். இவர் பிரமனைத் துதித்திருப்பதால் கி.பி ஏழாம் நூற்றாண்டுக்குப் பிந்தியவர் என்பதோடு, இன்னா நாற்பதின் பல கருத்துக்களை அப்படியே எடுத்தாளுவதால் இவர் அவருக்கும் பிந்தியவர் எனலாம்.

  அதனால் இவரது காலம் கி.பி.725-750 எனப்பட்டது. இந்நூல் கடவுள் வாழ்த்து நீங்கலாக 40 செய்யுட்களைக் கொண்டது. இவற்றுள், 'ஊரும் கலிமா' எனத் தொடங்கும் பாடல் ஒன்று மட்டுமே (8) பஃறொடை வெண்பா. ஏனைய அனைத்தும் இன்னிசை வெண் பாவினால் ஆக்கப்பட்டுள்ளது. இந்நூலில் நான்கு இனிய பொருள்களை எடுத்துக் கூறும் பாடல்கள், நான்கே நான்கு தான் உள்ளன(1, 3, 4, 5). எஞ்சிய எல்லாம் மும்மூன்று இனிய பொருள்களையே சுட்டியுள்ளன; இவற்றில் எல்லாம் முன் இரண்டு அடிகளில் இரு பொருள்களும், பின் இரண்டு அடிகளில் ஒரு பொருளுமாக அமைந்துள்ளமை கவனிக்கத் தக்கது. வாழ்க்கையில் நன்மை தரும் கருத்துக்களைத் தேர்ந்தெடுத்து 'இனிது' என்ற தலைப்பிட்டு அமைத்திருப்பதால் இஃது 'இனியவை நாற்பது' எனப்பட்டது. இதனை 'இனிது நாற்பது', 'இனியது நாற்பது', 'இனிய நாற்பது' என்றும் உரைப்பர்.
  இனியவை நாற்பது - மூலம்

  கடவுள் வாழ்த்து

      கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
      தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
      முந்துறப் பேணி முகநான் குடையானைச்
      சென்றமர்ந் தேத்தல் இனிது.

  (அருஞ்சொற்பொருள்: கண்மூன்றுடையான்- சிவபெருமான்; துழாய்மாலையான்- திருமால்/பெருமாள்; முகநான்குடையான்- பிரமன்; ஏத்தல்-போற்றித்துதித்தல்.)

  நூல்

  பாட்டு: 01.

      பிச்சைபுக் காயினுங் கற்றல் மிகவினிதே
      நற்சவையில் கைக்கொடுததல் சாலவும் முன்னினிதே
      முத்தேர் முறுவலார் சொல்லினி தாங்கினிதே
      தெற்றவும் மேலாயார்ச் சேர்வு.

  (அருஞ்சொற் பொருள்: நற்சவை- நற்சபை/நல்அவை; கைக்கொடுத்தல்- உதவுதல்; சாலவும்- மிகவும்; தெற்றவும்- தெளிவாக; மேலாயார்- பெரியோர்கள்/மேலானவர்; சேர்வு- சேர்ந்திருத்தல்/துணைக்கொள்ளுதல்)

  பாட்டு: 02.

      உடையான் வழக்கினி(து), ஒப்ப முடிந்தால்
      மனைவாழ்க்கை முன்னினிது, மாணாதாம் ஆயின்
      நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
      தலையாகத் தானினிது நன்கு.

  (அருஞ்சொற்பொருள்:உடையான் - பொருளுடையவன்; வழக்கு- வழங்குதல்/ ஈதல்; மாணாதாம்- மாட்சிமைப்படவில்லை; நெடியார்- தாமதிக்காதவராய்; துறததல்- விட்டுநீங்கல்/துறவியாகப்போதல்; தலையாக- முதன்மையாக.)

  பாட்டு:03.

      ஏவது மாறா இளங்கிளைமை முன்னினிதே
      நாளும் நவைபோகான் கற்றல் மிகவினிதே
      ஏருடையான் வேளாண்மை தானினி(து) ஆங்கினிதே
      தேரிற்கோள் நட்புத் திசைக்கு.

  (அருஞ்சொற்பொருள்: ஏவது- ஏவியது; இளங்கிளைமை- இளைய புதல்வர்கள்; நவை- குற்றம்; ஏர்- ஏர்களை/ ஏர்மாடுகளை; தேரின் - ஆராய்ந்துபார்த்தால்; திசைக்கு- தான்செல்கின்ற திசையில்.)

  பாட்டு: 04.

      யானையுடைய படைகாண்டல் முன்னினிதே
      ஊனைத்தின்(று) ஊனைப் பெருக்காமை முன்னினிதே
      கான்யாற்(று) அடைகரை ஊரினி(து) ஆங்கினிதே
      மானம் உடையார் மதிப்பு.

  (அருஞ்சொற்பொருள்: படை-சேனை; காண்டல்- படையை உண்டாக்கல்; ஊன்- மாமிசம்; ஊன்- உடம்பு; மதிப்பு- கொள்கை.)

  பாட்டு: 05.

      கொல்லாமை முன்னினிது கோல்கோடி மாராயஞ்
      செய்யாமை முன்னினிது செங்கோலன் ஆகுதல்
      எய்தும் திறத்தால் இனிதென்ப யார்மாட்டும்
      பொலலாங்(கு) உரையாமை நன்கு.

  (அருஞ்சொற்பொருள்: கொல்லாமை- ஓருயிரையும் கொல்லாமை; கோல்கோடி- நடுநிலைமை தவறி; மாராயம்-சிறப்பு; யார்மாட்டும்- யாவரிடத்தும்; பொல்லாங்கு- குற்றம்/ இல்லாததும் பொல்லாததும்.)

  பாட்டு: 06.

      ஆற்றுந் துணையால் அறஞ்செய்கை முன்னினிதே
      பாற்பட்டார் கூறும் பயமொழி மாண்பினிதே
      வாய்ப்புடைய ராகி வலவைகள் அல்லாரைக்
      காப்படையக் கோடல் இனிது.

  (அருஞ்சொற்பொருள்: ஆற்றுந்துணை- முடிந்தஅளவு; அறம்- தருமம்; பாற்பட்டார்-நன்னெறியில் வாழுபவர்கள்; பயம்- பயனுடைய; வலவை- வெட்கம்; காப்படைய-காவலாக; கோடல்- கொள்ளுதல்.)

  பாட்டு: 07.

      அந்தணர் ஓத்துடைமை ஆற்ற மிகவினிதே
      பந்தம் உடையான் படையாண்மை முன்னினிதே
      தந்தையே ஆயினும் தானடங்கான் ஆகுமேல்
      கொண்(டு)உடையான் ஆகல் இனிது.

  (அருஞ்சொற்பொருள்: அந்தணர்- வேதியர்; ஓத்து- வேதம்; பந்தம்- சொந்தபந்தம்; படை- தானை/சேனை; அடையான்- ஏற்காதவன்.)

  பாடல்: 08.

      ஊரும் கலிமா உரனுடைமை முன்னினிதே
      தார்புனை மன்னர் தமக்குற்ற வெஞ்சமத்துக்
      கார்வரை யானைக் கதங்காண்டல் முன்னினிதே
      ஆர்வ முடையவர் ஆற்றவும் நல்லவை
      பேதுறார் கேட்டல் இனிது.

  (அருஞ்சொற்பொருள்: ஊரும்- ஏறிச்செல்லும்; கலிமா- குதிரை; உரன்- வலிமை; தார்- மாலை; சமம்- போர்; வரை- மலை; கதம்- கோபம்; ஆர்வம்- அன்பு; பேதுறார்- மயக்கமடையாதவராய்.)

  பாடல்: 09.

      தங்கண் அமர்புடையார் தாம்வாழ்தல் முன்னினிதே
      அங்கண் விசும்பின் அகல்நிலாக் காண்பினிதே
      பங்கமில் செய்கையர் ஆகிப் பரிந்துயார்க்கும்
      அன்புடைய ராதல் இனிது.

  ( அருஞ்சொற்பொருள்: அமர்புடையார்- விருப்பமுடையார்/சேர்ந்துவாழ்பவர்; விசும்பு- வானம்; காண்பு- காணுதல்; பங்கம்- குற்றம்; பரிந்து- இரக்கம்கொண்டு.)

  பாடல்: 10.

      கடமுண்டு வாழாமை காண்டல் இனிதே
      நிறைமாண்பில் பெண்டிரை நீக்கல் இனிதே
      மனமாண்(பு) இலாதவரை அஞ்சி அகறல்
      எனைமாண்பும் தான்இனிது நன்கு.

  ( அருஞ்சொற்பொருள்: கடம்- கடன்; நிறை- கற்பு; அகறல்- அகன்றுபோதல்/நீங்கிப்போதல்.)

  மனித வாழ்க்கைக்கு இன்றியமையாத ஆசாரங்களை அதாவது ஒழுக்கங்களை எடுத்துக்கூறும் ஒரு நூல் ஆசாரக்கோவை. பண்டைக்காலத் தமிழ் நூல்களின் தொகுப்புக்களில் ஒன்றான பதினெண்கீழ்க்கணக்கில் ஒன்றாக வைத்து எண்ணப்படும் இது ஒரு நீதி நூல். வண்கயத்தூரைச் சேர்ந்த பெருவாயின் முள்ளியார் என்னும் புலவர் இதனை எழுதினார்.

  பல்வேறு வெண்பா வகைகளால் அமைந்த 100 பாடல்களால் ஆனது இந்நூல். ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு விடயம் தொடர்பான ஒழுக்கத்தை எடுத்து இயம்புகின்றது. இவ்வொழுக்கங்களின் பட்டியல்:

      1. ஆசார வித்து
      2. ஒழுக்கம் தவறாதவர் அடையும் நன்மைகள்
      3. தக்கிணை முதலியவை மேற்கொள்ளல்
      4. முந்தையோர் கண்ட நெறி
      5. எச்சிலுடன் தீண்டத் தகாதவை
      6. எச்சிலுடன் காணக் கூடாதவை
      7. எச்சில்கள்
      8. எச்சிலுடன் செய்யக் கூடாதவை
      9. காலையில் கடவுளை வணங்குக
      10. நீராட வேண்டிய சமயங்கள்
      11. பழைமையோர் கண்ட முறைமை
      12. செய்யாமல் தவிர்க்க வேண்டியவை
      13. செய்யத் தகாதவை
      14. நீராடும் முறை
      15. உடலைப்போல் போற்றத் தக்கவை
      16. யாவரும் கூறிய நெறி
      17. நல்லறிவாளர் செயல்
      18. உணவு உண்ணும் முறைமை
      19. கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை
      20. உண்ணும் விதம்
      21. ஒழுக்கம் பிழையாதவர் செய்வது
      22. பிற திசையும் நல்ல
      23. உண்ணக்கூடாத முறைகள்
      24. பெரியோருடன் இருந்து உண்ணும் முறை
      25. கசக்கும் சுவை முதலிய சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை
      26. உண்ணும் கலங்களைக் கையாளும் முறை
      27. உண்டபின் செய்ய வேண்டியவை
      28. நீர் குடிக்கும் முறை
      29. மாலையில் செய்யக் கூடியவை
      30. உறங்கும் முறை
      31. இடையில் செல்லாமை முதலியன
      32. மலம், சிறுநீர் கழிக்கக்கூடாத இடங்கள்
      33. மலம் சிறுநீர் கழிக்கும் முறை
      34. மலம், சிறுநீர் கழிக்கும் திசை
      35. வாய் அலம்பாத இடங்கள்
      36. ஒழுக்க மற்றவை
      37. நரகத்துக்குச் செலுத்துவன
      38. எண்ணக்கூடாதவை
      39. தெய்வத்துக்குப் பலியூட்டிய பின் உண்க
      40. சான்றோர் இயல்பு
      41. சில செய்யக் கூடியவையும் செய்யக் கூடாதவையும்
      42. மனைவியைச் சேரும் காலமும் நீங்கும் காலமும்
      43. உடன் உறைதலுக்கு ஆகாத காலம்
      44. நாழி முதலியவற்றை வைக்கும் முறை
      45. பந்தலில் வைக்கத் தகாதவை
      46. வீட்டைப் பேணும் முறைமை
      47 நூல் ஓதுவதற்கு ஆகாத காலம்
      48. அறம் செய்தற்கும் விருந்து அளித்தற்கும் உரிய நாட்கள்
      49. நடை உடை முதலியவற்றைத் தக்கபடி அமைத்தல்
      50. கேள்வியுடையவர் செயல்
      51. தம் உடல் ஒளி விரும்புவார் செய்யத் தக்கவை
      52. தளராத உள்ளத்தவர் செயல்
      53. ஒழுக்கமுடையவர் செய்யாதவை
      54. விருந்தினர்க்குச் செய்யும் சிறப்பு
      55. அறிஞர் விரும்பாத இடங்கள்
      56. தவிர்வன சில
      57. நோய் வேண்டாதவர் செய்யக் கூடாதவை
      58. ஒருவர் புறப்படும் போது செய்யத் தகாதவை
      59. சில தீய ஒழுக்கங்கள்
      60. சான்றோருடன் செல்லும் போது செய்யத் தக்கவை
      61. நூல்முறை உணர்ந்தவர் துணிவு
      62. சான்றோர்க்குச் செய்யும் ஒழுக்கம்
      63. கற்றவர் கண்ட நெறி
      64, வாழக்கடவர் எனப்படுவர்
      65. தனித்திருக்கக் கூடாதவர்
      66. மன்னருடன் பழகும் முறை
      67. குற்றம் ஆவன
      68. நல்ல நெறி
      69. மன்னன் செய்கையில் வெறுப்படையாமை முதலியன
      70. மன்னன் முன் செய்யத் தகாதவை
      71. மன்னன் முன் சொல்லக் கூடாதவை
      72. வணங்கக்கூடாத இடங்கள்
      73. மன்னர் முன் செய்யத் தகாதவை
      74. ஆசிரியரிடம் நடக்கும் முறைமை
      75. சான்றோர் அவையில் செய்யக் கூடாதவை
      76. சொல்லும் முறைமை
      77. நல்ல குலப்பெண்டிர் இயல்பு
      78. மன்னர் அவையில் செய்யக் கூடாதவை
      79. பெரியோரிடம் உள்ள முச்செயல்கள்
      80. சான்றோர் பெயர் முதலியவை கூறாமை
      81. ஆன்றோர் செய்யாதவை
      82. மனைவியின் உள்ளம் மாறுபடுதல்
      83. கடைபோக வாழ்வோம் என எண்ணுபவர் மேற்கொள்ள வேண்டியவை
      84. பழகியவை என இகழத் தகாதவை
      85. செல்வம் கெடும் வழி
      86. பெரியவரை உண்டது யாது என வினவக் கூடாது
      87. கட்டிலில் படுத்திருப்பவருக்குச் செய்யத் தகாதவை
      88. பெரியோர் போல் வாழ்வோம் என எண்ணுபவர் செய்கைகள்
      89. கிடைக்காதவற்றை விரும்பாமை
      90. தலையில் சூடிய மோத்தல்
      91. பழியாவன
      92. அந்தணரின் சொல்லைக் கேட்க
      93. சான்றோர் அவையில் குறும்பு முதலியன செய்யாமை
      94. ஐயம் இல்லாத அறிவினர் செய்கை
      95. பொன்னைப் போல் காக்கத் தக்கவை
      96. எறும்பு முதலியவை போல் செயல் செய்தல்
      97, சான்றோர் முன் சொல்லும் முறை
      98. புகக் கூடாத இடங்கள்
      99. அறிவினர் செய்யாதவை
      100. ஒழுக்கத்தினின்று விலகியவர்


  தமிழ் இலக்கியம்
  சங்க இலக்கியம்
  அகத்தியம்     தொல்காப்பியம்
  பதினெண் மேற்கணக்கு
  எட்டுத்தொகை
  ஐங்குறுநூறு     அகநானூறு
  புறநானூறு     கலித்தொகை
  குறுந்தொகை     நற்றிணை
  பரிபாடல்     பதிற்றுப்பத்து
  பத்துப்பாட்டு
  திருமுருகாற்றுப்படை     குறிஞ்சிப் பாட்டு
  மலைபடுகடாம்     மதுரைக் காஞ்சி
  முல்லைப்பாட்டு     நெடுநல்வாடை
  பட்டினப் பாலை     பெரும்பாணாற்றுப்படை
  பொருநராற்றுப்படை     சிறுபாணாற்றுப்படை
  பதினெண் கீழ்க்கணக்கு
  நாலடியார்     நான்மணிக்கடிகை
  இன்னா நாற்பது     இனியவை நாற்பது
  களவழி நாற்பது     கார் நாற்பது
  ஐந்திணை ஐம்பது     திணைமொழி ஐம்பது
  ஐந்திணை எழுபது     திணைமாலை நூற்றைம்பது
  திருக்குறள்     திரிகடுகம்
  ஆசாரக்கோவை     பழமொழி நானூறு
  சிறுபஞ்சமூலம்     முதுமொழிக்காஞ்சி
  ஏலாதி     கைந்நிலை
  சங்கநூல் தரும் செய்திகள்
  தமிழ்ச் சங்கம்     சங்ககால நிலத்திணைகள்
  சங்க காலப் புலவர்கள்     சங்ககாலப் பெண் புலவர்கள்
  சங்க கால ஊர்கள்     சங்க கால மன்னர்கள்
  சங்க கால நாட்டுமக்கள்     சங்க காலக் கூட்டாளிகள்

  மதுரைப் பதியைச் சேர்ந்த கூடலூர்க் கிழார் என்பவர் இயற்றியது முதுமொழிக்காஞ்சி. சங்கம் மருவியகால 18 நூல்களின் தொகுப்பான பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் என அழைக்கப்படும் தமிழ் நூல் தொகுதியில் மிகச் சிறியது இது. ஒவ்வொன்றும் பத்து அடிகளைக் கொண்ட பத்துப் பாடல்களை மட்டுமே கொண்டுள்ளது. இந் நூலிலுள்ள எல்லாப் பாடல்களுமே,

      ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்

  என்றே தொடங்குகிறது. பத்து அடிகளைக் கொண்ட ஒவ்வொரு பாடலுக்கும் தனித்தனிப் பெயர் வழங்கப்பட்டுள்ளது. இப் பத்துப் பெயர்களும் வருமாறு:

      சிறந்த பத்து
      அறிவுப் பத்து
      பழியாப் பத்து
      துவ்வாப் பத்து
      அல்ல பத்து
      இல்லைப் பத்து
      பொய்ப் பத்து
      எளிய பத்து
      நல்கூர்ந்த பத்து
      தண்டாப் பத்து

  இவற்றையும் பார்க்கவும்

      தமிழ் இலக்கியம்

  வெளியிணைப்புகள்

  மொழிபெயர்ப்புகள்

  திருக்குறள் தமிழ் தவிர இந்திய மொழிகளில் குஜராத்தி, இந்தி, கன்னடம், கொங்கணி மொழி, மலையாளம், மராத்தி, ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி, சமற்கிருதம், சௌராட்டிர மொழி, தெலுங்கு போன்ற 13 மொழிகளிலும், ஆசிய மொழிகளில் அரபி, பருமிய மொழி, சீனம், பிஜியன், இந்தோனேசிய மொழி, யப்பானியம், கொரிய மொழி, மலாய், சிங்களம், உருது போன்ற 10 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவை தவிர ஐரோப்பிய மொழிகளான செக், டச்சு, ஆங்கிலம், பின்னிய மொழி, பிரெஞ்சு_மொழி, செருமன், அங்கேரிய மொழி, இத்தாலிய மொழி, இலத்தீன், நார்வே மொழி, போலிய மொழி, ரஷிய மொழி, எசுப்பானியம், சுவீடிய மொழி ஆகிய 14 மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

  திருக்குறளில் முழு கருத்து வடிவம் பெற இங்கே அழுத்துங்கள்,

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
ஆய்வுக் கட்டுரை
மங்கையர் பகுதி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink