பாகுபலி 2: நடிகர்கள் பெற்ற சம்பளம்,
 • பாகுபலி 2: நடிகர்கள் பெற்ற சம்பளம்,

  ராஜமெளலியின் ‘பாகுபலி 2’ திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியாகி சாதனை செய்து வருகிறது.
  இந்த படத்திற்காக சுமார் ஐந்து வருடம் எஸ்.எஸ்.ராஜமெளலி தனது குடும்பத்துடன் கடுமையாக உழைத்தார் என்றும் தெரிந்ததே. இந்த படத்தில் அவரும் ஒரு பங்காளர் என்பதால் அவரது தரப்பு வருமான தொகை ரூ.100 கோடியை தாண்டியிருக்கும் என்று கூறப்படுகிறது.

  இந்நிலையில் இந்த படத்தில் நடித்த மற்ற நட்சத்திரங்களின் சம்பளம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது.

  பிரபாஸ்: சுமார் ரூ.50 கோடி

  ராணா: ரூ.20 கோடி முதல் ரூ.25 கோடி

  அனுஷ்கா: ரூ.10 கோடி முதல் ரூ.15 கோடி

  தமன்னா: ரூ. 3 கோடி

  ரம்யாகிருஷ்ணன்: சுமார் ரூ.3 கோடி

  சத்யராஜ்: ரூ.3 கோடி முதல் 4 கோடி

  நாசர்: ரூ.1 கோடி முதல் ரூ.1.5 கோடி வரை

  மேற்கண்ட அனைவருமே இந்த படத்திற்காக இரவுபகல் பாராது உழைத்த கடின உழைப்பிற்கு கிடைத்த ஊதியமே ஆகும். மேலும் இந்த படம் இன்னும் 100 வருடத்திற்கு மேலும் பேசப்படும் என்பதால் இந்த படத்தில் பங்கு பெற்றதால் கிடைத்த, கிடைக்க போகும் புகழ்தான் அவர்களது விலைமதிப்பில்லா ஊதியம் என்பது குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
தையல்
 மரண அறித்தல்