பாகுபலி 2 முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை,
 • பாகுபலி 2 முதல் நாள் உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூல் செய்து சாதனை,

  பாகுபலி-2 இந்தியாவில் மட்டும் முதல் நாள் ரூ100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. உலகம் முழுவதும் ரூ.150 கோடி வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.

  ராஜமவுலி இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரபாஸ், தமன்னா, அனுஷ்கா உள்பட பலர் நடித்துள்ள பாகுபலி–2 திரைப்படம் நேற்று வெளியாகியது.

  முதல் பாகத்தை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் இன்று நாடு முழுவதும் வெளியாகியது. 4 மொழிகளில் வெளியான இந்த திரைப்படம் திரையிடப்பட்ட அனைத்து அரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. முதல் நாளிலேயே 150 கோடி ரூபாய் வசூல் செய்த இந்திய திரைப்படம் என்ற சாதனையை பாகுபலி 2 நிகழ்த்தி உள்ளது.

   இதற்கிடையில் திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர் இடையேயான பிரச்னை காரணமாக தமிழ் மொழியில் திரைப்படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் சிக்கல் தீர்க்கப்பட்டு படம் வெளியாகி இருக்கிறது.

  கேரளாவில் நடிகர் மம்முட்டியின் கிரேட் பாதர் படத்தின் முதல் நாள் வசூலான ரூ.4.31 கோடிய முந்தி உள்ளது கிரேட் பாதர் 202 தியேட்டர்களில் வெளியிடப்பட்டது. ஆனால் பாகுபலி-2 300 தியேட்டர்களில் வெளியிடப்பட்டு உள்ளது.

  இந்தியாவில் மட்டும் பாகுபலி-2, 3500 திரையரங்குகளில் திரையிடபட்டு உள்ளது.உலகம் முழுவதும் மொத்தம் 4800 இடங்களில் 6700 திரையரங்குகளில் திரையிடப்பட்டு உள்ளது.

  ஆந்திரா, தெலுங்கானாவில் மட்டும் முதல் நாள் ரூ60 கோடி வசூலாகி உள்ளது. இந்தியாவின் மற்ற மாநிலங்களில் ரூ70 கோடி வசூலாகி உள்ளது. இந்தியாவை தவிர்த்து உலகின் பிற நாடுகளில் ரூ.30 கோடி வசூலை குவித்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
எம்மவர் நிகழ்வுகள்
தையல்
 மரண அறித்தல்