விராட் கோலி ஐ.பி.எல்: மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாடுகிறார்,
  • விராட் கோலி  ஐ.பி.எல்: மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாடுகிறார்,

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், நாளை மும்பை அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி விளையாடுகிறார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அவர் அந்த தொடரில் இருந்து பாதியிலேயே வெளியேறினார். தற்போது நடைபெற்று வரும் ஐ.பி.எல். தொடரிலும் அவர் களமிறங்கவில்லை. பெங்களூர் அணியின் கேப்டனான கோலி, அந்த அணியின் முதல் மூன்று போட்டிகளிலும் களமிறங்காததால், ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    இந்நிலையில், தோள்பட்டை காயத்தில் இருந்து குணமடைந்துள்ளதாக விராட் கோலி கூறியதால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் பங்கேற்பார் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. அவர் ஐ.பி.எல். போட்டிக்கு திரும்புவதை பி.சி.சி.ஐ. தற்போது உறுதி செய்துள்ளது.

    இதுகுறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையில், “விராட் கோலி மீண்டும் போட்டியில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றிருப்பதாக பி.சி.சி.ஐ. மருத்துவக் குழுவானது புதன்கிழமை உறுதி செய்தது. ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் அடுத்த ஆட்டம் பெங்களூரில் ஏப்ரல் 14-ம் தேதி நடைபெறுகிறது. மும்பை அணிக்கு எதிராக நடைபெறும் இந்தப் போட்டியில் விராட் கோலி விளையாடுவார்” என தெரிவித்துள்ளது.

    பெங்களூர் அணி, இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், கேப்டன் கோலியின் வருகை அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    விராட் கோலி  ஐ.பி.எல்: மும்பை அணிக்கு எதிரான நாளைய போட்டியில் விளையாடுகிறார்,
  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சாதனையாளர்கள்
சிறுவர் உலகம்
ஆன்மிகம்
மருத்துவம்
 மரண அறித்தல்