சூரியனை விட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்ட 4D எக்ஸ்-ரே ஸின்க்ரோட்ரான்,
 • சூரியனை விட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்ட 4D எக்ஸ்-ரே ஸின்க்ரோட்ரான்,

  தொழில் நுட்பம் வளந்துகொண்டே போகும் இந்தக்காலத்தில் இன்னும் ஒரு கண்டுபிடிப்பு வியப்பில் ஆழ்த்துகிறது. அதுசூரியனை விட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்ட 4D எக்ஸ்-ரே ஸின்க்ரோட்ரான் இது என்ன என்று பார்த்தால் நம்மை இன்னும் வியப்பில் ஆழ்த்துகிறது.

  எந்தப் பொருளாக இருந்தாலும், அதன் உள்பகுதியில் என்ன இருக்கிறது என துல்லியமா கண்டுபிடிக்க முடியுமென விஞானிகள் கூறுகிறார்கள் அதாவது பெரிய எரிமலை வெடிப்பதைப்பற்றித் தெரிந்து கொள்ளலாம்.

  நாம் சாப்பிடும் குறிப்பிட்ட ஐஸ் கிரீம் வகைகள் ஏன் அதிக சுவையாக இருக்கின்றன என்பதைக்கூட, ஐஸ் படிகங்களுக்குள் ஊடுருவி ஆய்வு செய்து அறிய முடியும் என சொல்கிறார்கள் .

  மான்செஸ்டர் பல்கலைக்கழக ஸின்க்ரோட்ரான் நிபுணர் கமெல் மடி தெரிவிப்பதாவது , “எக்ஸ்-ரே கம்ப்யூட்டர் வரைவு என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்.

  எந்த ஒரு பொருளின் உள்வடிவத்தையும் மூன்று கோணங்களில் தெளிவாகக் காட்டிவிடும் அளவுக்கு மிக அதிக சக்தி வாய்ந்த வெளிச்சத்தைக் கொண்ட தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது”

  இந்த ஸின்க்ரோட்ரான் வெளிச்சம், சூரியனைவிட 10 பில்லியன் மடங்கு அதிக வெளிச்சம் கொண்டதுஎந்தப் பொருளையும் துளையிடாமலோ, வெட்டாமலோ உள்ளே இருப்பதைத் தெளிவாகப் பார்க்கலாம்.

  வெளிச்சம் மூலம் பெறப்படும் தகவல்கள் அனைத்தையும் இன்னொரு பக்கம் உள்ள கேமரா தெள்ளத் தெளிவாகப் பதிவு செய்து கொள்ளும்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மரண அறிவித்தல்
சுவிஸ் செய்தி
வினோத நிகழ்வுகள்
உலக செய்தி
 மரண அறித்தல்