வெளிநாட்டில் புலிகளை முடக்கிய ஆசாமி இரகசியம் அம்பலம். பிள்ளையானின் முக்கிய புள்ளி சுவிஸ்சில் செய்த உதவி,
 • வெளிநாட்டில் புலிகளை முடக்கிய ஆசாமி இரகசியம் அம்பலம். பிள்ளையானின் முக்கிய புள்ளி சுவிஸ்சில் செய்த உதவி,

  புலம்பெயர்தமிழர்கள் எதற்காகப் போராடுகிறார்கள்  இத்தனை காலம் போராடி எதைச் சாதித்தார்கள்  இனி என்ன செய்யப் போகிறார்கள் இதில் எத்தனை நாடுகளில் இருந்து எத்தனை தமிழ் தலைவர்கள் பங்கு பற்றி இருக்கிறார்கள் தமிழக புத்தி ஜீவிகள் எத்தனை பேர் கலந்து கொண்டுள்ளனர் உங்களுக்கும் புரியவில்லையா படித்துப் பாருங்கள் புரியும்.

  சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவுப் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் யாழ்ப்பாணத்திலும், ஐரோப்பாவிலும் இயங்கும் டான் தொலைக்காட்சியின் பணிப்பாளர்  ஆகியோரின் வங்கிக் கணக்குகளை விசாரணை செய்ய கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

  அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண, வெளிநாட்டு வங்கிகளில் பணத்தை வைப்பிட்டுள்ளதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

  இவருடன் இணைந்து சட்டவிரோதமான வகையில் நிதியை திரட்டியதாக, டான் தொலைக்காட்சியின் நிறைவேற்றுப் பணிப்பாளர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

  இவர்களின் வங்கிக்கணக்குகள் மற்றும் நிதிப்பரிமாற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு மேலதிக நீதிவான் நீதிமன்றம்  நிதிக்குற்ற விசாரணைப் பிரிவுக்கு அனுமதி அளித்துள்ளது.

  2009ஆம் ஆண்டில் இருந்து மேஜர் ஜெனரல் கபில ஹெந்தவிதாரண மற்றும் அவருக்கு நெருக்கமானவர்களின் பணத்தை, தொலைக்காட்சியின் பணிப்பாளர் , லக்சம்பேர்க்கில் உள்ள நிதி நிறுவனங்களில் முதலிட்டுள்ளதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அடுத்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

  இது குறித்து ஆழமாக விசாரணை நடத்தி  அறிக்கை சமர்ப்பிக்குமாறும் நீதிமன்றம் பணித்துள்ளது.

  சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்சவுக்கு மிகவும் நெருக்கமானவரான மேஜர் ஜெனரல் கபில ஹெந்த விதாரண, விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதற்கான புலனாய்வு நடவடிக்கைகளின் மூளையாகச் செயற்பட்டவராவார்.

  2009 மே 18ம் நாள் ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்த பின்னர், புலம்பெயர் நாடுகளில் விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை முடக்குவதிலும் இவர் முக்கிய பங்காற்றியிருந்தார்.

  ஆரம்பத்தில் இராணுவப் புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக இருந்த இவர் பின்னர் அரச புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார்.

  மகிந்த ராஜபக்ச தோல்வியடைந்த உடனேயே இவர் பதவியை விட்டு விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.

  தற்போது மேற்கொள்ளப்படும் விசாரணையில், புலம்பெயர் தமிழர்கள் மத்தியில், சிறிலங்கா புலனாய்வுப் பிரிவின் ஊடுருவல்கள் பற்றிய தகவல்களும் அம்பலமாகக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  இவர் இருந்த காலங்களில் ஐரோப்பிய நாடுகளில் புலிகளை முடக்குவதற்காக பாரிய ஆட்கள் களமிறக்கப்பட்டிருந்ததுடன் சுமார் 20க்கும் மேற்பட்ட தமிழர்கள் செயல்ப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது இவர்களுக்கு முழு சுவிஸ் நாட்டிற்கும் போக்கு வரத்துச் செய்யும் மாதாந்த போக்கு வரத்து அட்டையுடன் தினசரி கொடுப்பனவுகளும் கொடுக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்தப் படியும் வழங்கப் பட்டுள்ளது.

  சுவிஸ் நாட்டிலுள்ள மாநிலங்களில் பல இளைஞர் அமைப்புக்ளும் தமிழ் உணர்வாளர்களும் விடுதலைப் புலிகளின் செயல்ப் பாட்டாளர்களும்.ஏனைய தமிழ் உணர்வாளர்களையும் கண்காணித்து போட்டோக்களுடன் உடனுக்குடன் தகவல் வழங்குவதே இவர்களின் பணி.

  இவர்களுக்குத் தெரியாமல் இன்னுமொரு புலனாய்வாளர் சுவிஸ் நாட்டில் பிள்ளையானின் நெருங்கிய சகா ஒருவரின் வீட்டில் பிள்ளையானால் அறிமுகப் படுத்தப்பட்டு நிரந்தரமாக தங்க வைக்கப் பட்டுள்ளார் அவர் நன்கு யாழ்ப்பாணத் தமிழ் பேசக் கூடியவர் அவரிடம் ஜேர்மன்,சுவிஸ்,பிரான்ஸ் நாடுகளைக் கண்காணிப்பதே.

  மேற்படி நபர் புலிகளின் எதிர் கருத்து உள்ளவர்களை உள்வாங்கி அவர்களுக்கு பண உதவி செய்து புலிகளின் செயல்ப் பாட்டாளர்கள் அவர்களது தொடர்பு அவர்களின் நிதி சேகரிப்பு அவர்கள் ஜெனிவா நோக்கி அணி திரள்வது என சகலவற்றையும் சேகரித்துள்ளார்.

  இதன்பின் பின் இத்தாலியில் உள்ள மகிந்தவின் சிங்கள செயல்ப் பாட்டாளர்களை ஒருங்கிணைத்து ஜெனிவா முன்பு இலங்கை அரசுக்குச் சார்பாகவும்  புலிகளுக்கு எதிராகவும் ஆர்ப்பாட்டம் நடத்த ஏற்ப்பாடு  செய்துள்ளதுடன் அவர்களையும் ஒருங்கிணைத்து புலி ஆதரவாளர்களால் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்தால் இதற்க்கு எதிராக ஐநா முன்றலில் அவர்களாலும் ஒரு ஆர்ப்பாட்டம் நடத்த முடிந்தது.

  புலிகளின் ஆதரவாளர்களால் நடத்தப்படும்  அனைத்துக் கூட்டங்களிலும் குறிப்பிட்ட புலனாய்வாளர் சந்தடி சாக்கின்றி 5 பிரான்கிட்க்கு விற்க்கப்படும் லேபல் தாங்கிய பட்டியை அணிந்து கொண்டு கூட்டத்தோடு கூட்டமாக சமூகம் தந்துள்ளார் அதனால் இவரகளை  பெரும்பாலும் சந்தேகமின்றி புலிகளின் செயல்ப் பாட்டாளர்களும் கண்டு கொள்ள வில்லை புலிகளின் செயல்ப் பாட்டாள்ர்களால்   எப்படி செயல்ப்பட திட்டம் வகுத்தாலும் அத்திட்டம் நிறைவேறும் முன்னே இலங்கை அரசின் பாதுகாப்பு தரப்பினரின் கவனத்துக்கு வந்து விடும்

  இதனால் ஜெனிவா முதல் ஏனைய நாடுகளில் இவர்களால் முன்னெடுக்கப்பட்ட அனைத்து செயல்ப் பாடும் தோல்வியையே தழுவி மக்கள் மத்தியில் ஒரு வித  வெறுப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

  விடுதலைப் புலிகளது ஐரோப்பிய செயல்ப் பாட்டாளிகள் எங்கு கூட்டம் நடத்த முயன்றாலும் புலனாய்வாளர்களின் ஆட்கள் அங்கு வந்து விடுகின்றனர்  அதைப் பற்றிய எந்த தரவும் செயல்ப் பாட்டாளர்களிடம்  இல்லை ஆனால் இவர்கள் என்ன ஏற்ப்பாடு செய்தாலும்  புலனாய்வாளர்களுக்கு தெரிந்து விடும்  உடனே அவர்கள் அந்த இடத்துக்கு வந்து விடுகின்றனர் எனவே  தமிழர்களின் முயற்சிக்கு எந்த வித பயனும் இல்லாமல் போய்விடுகிறது.

  இம்முறை ஜெனிவா முன்பு நடந்த  நீதி வேண்டிய புலம் பெயர் தமிழ் மக்களது ஆர்ப்பாட்டத்தின் போது  நடந்த விடயங்கள் அனைத்தும்  இலங்கை பாதுகாப்பு தரப்பிடம் அறிக்கையாக உள்ளதாக ஒரு தகவல் தெரிகிறது அது சுவாரஸ்யமான விடயம்.

  நீதிவேண்டிய போராட்டம் இடம் பெற இருந்த தினம் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களைக் கலந்து கொள்ளுமாறும். எங்கிருந்து ஆரம்பித்து  எங்கு முடிவுறும் அங்கு இடம் பெறும் நிகழ்வுகள் என்ன என்னும் விபரம் புலனாய்வாளர்களுக்கு கிடைத்துள்ளது அவர்களும் தயாராகி ஆர்ப்பாட்டம் இடம் பெறும் இடத்தில் போலிப் பத்திரிகையாளர்களாக கூட்டத்தோடு சேர்ந்துள்ளனர்

  அவர்களின் பாட்டுக்கு ஒரு அறிக்கை தயாரித்துள்ளனர் அந்த அறிக்கையில்.

  கடந்த ஏழு வருடங்களாக  சுவிஸ்சில் இடம் பெற்ற நீதி வேண்டி போராடும் தமிழ் மக்களது போராட்டங்களில் ஜெனிவா முதல் மாவீரர் நாள் நினைவுகள் வரை ஒரு குறிப்பிட்ட நபர்களே செயல்ப் படுவதும் அவர்களே உணவு விடுதி நடத்துவதும் அவர்களே வாகனத் தரிப்பிடத்துக்கு நிதி வசூலிப்பதும் அது தொடர்பான புகைப் படங்களும் அறிக்கையில் சுட்டிக்காட்டி இலங்கை அரசின் கவனத்திற்க்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

  உடனே உசாராகிய இலங்கை அரசு யாரையும் பகைக்காமல் ஒரு அறிக்கையைத் தயாரித்து சுவிஸ் அரசின்  கவனத்துக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் ஜெனிவா மனித உரிமைப் பேரவையின்  கவனத்திற்க்குகொண்டுவந்துள்ளனர்  அதில் குறிப்பிடப் பட்டுள்ள விடயம்.

  1.இலங்கையில் இன சுத்திகரிப்பு இன அழிப்பு என்று கூறி புலம் பெயரும் அல்லது புலம் பெயர்ந்த தமிழர்கள் அவர்கள் வாழும் நாடுகளில் தங்களுக்கு அல்லது தனது உறவினருக்கு இலங்கையில் ஏற்ப்பட்ட பாதிப்பு  எந்த இடத்தில் எந்த ராணுவ அல்லது பொலிஸ் அதிகாளிகளினால் என  புலம் பெயர் நாடுகளில் உள்ள பொலிஸ் பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனரா.

  2.ஜெனிவா மனித உரிமைச் சபையில் இலங்கை தொடர்பான விடயங்கள் முன்னெடுக்கும் போதே இவர்களில் இது போன்ற ஆர்ப்பாட்டங்கள் இடம் பெறுகின்றன ஏனைய நேரங்களில் இவர்களின் ஆர்ப்பாட்டங்கள் நடப்பதில்லை அது ஏன் உண்மையில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்ப்பட்டால் தீர்வு கிடைக்கும் வரை அவர்களால் போராட்டங்களை முன்னெடுக்க முடிவதில்லை.

  3.ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொள்ளும் மக்கள் பல நாடுகளில் இருந்து வருகிறார்கள் அப்படியானால் அவர்களால் அவர்கள் வாழும் நாடுகளில் இப்படி போராட்டங்களை முன்னெடுக்க முடியவில்லை இதில் எத்தனை பேர் உண்மையாகப் பாதிக்கப் பட்டவர்கள்.

  4.ஒரு குறிப்பிட்ட குழுவினர் பொருளாதாரத்தை ஈட்டவே இப்படிப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை ஒருங்கிணைத்தல் ஆர்ப்பாட்டத்தில் கோசம் எழுப்பி வரும் மக்களிடம் உணவு விற்ப்பனை செய்தல் இந்த உணவு விநியோகத்தினால் இலண்ட்சக் கணக்கான சுவிஸ் நாணயத்தைச் சேர்க்கின்றனர்.

  5.இப்படிப்பட்ட கோணத்தில் இவர்கள் வாழும் நாடுகளின் அரசை தங்களுக்குச் சாதகமாக வைத்துக் கொண்டு  அப்பாவி மக்களை கோசம் போடா வரவைத்து உணர்ச்சி பூர்வமான வசனங்களைப் பேசி அவர்களுடன் நிதி வசூலிப்பது.

  6.இப்போதுள்ள நல்லிணக்க அரசு இனபேதமின்றி அனைத்து மக்களையும் நடத்துகின்றது முடிந்தவரை எந்த மக்களின் பிரச்சனைக்குத் தீர்வுக்கான உலக நாடுகளின் ஒத்துழைப்புடன் செயல்ப் பட்டு வருகின்றோம் இப்படி பிரச்சனயானவர்களை இலங்கைக்கு அனுப்பி வையுங்கள் உங்களின் மேட பார்வையில் பார்வையிலே அவர்களுக்கு எந்த இடையூறும் இன்றி அவர்களின் சொந்த இடத்திலேயே வாழ வைக்கிறோம் தமிழ் மக்களுக்கு எந்த இடையூறும் வராமல் இருக்க உத்தரவாதம் கொடுக்கிறோம்.

  7.இலங்கையில் தமிழர் பகுதிகளில் காணாமல் போனோர் தொடர்பாக ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்  காணாமல்ப் போனன பலர் வேறு வேறு பெயர்களில் பல நாடுகளிலும் வாழ்கிறார்கள் அது தொடர்பான முறைப்பாட்டில் பல பொய்யான முறைப்பாடு என்று விசாரணை மூலம் தெரிய வந்துள்ளது.

  8.காணாமல் போனோர் தொடர்பாக பல உயர் மட்ட ராணுவ பொலிஸ் அதிகாரிகள் உட்பட பலர் கைது செய்து  தடுக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும்  இங்கு செயல்ப்படும் அதிகாரிகளை போர்க்குற்றவாளி அவர்களைக் கைது செய்யுங்கள் என்று கோஷமிட்டு பயன் இல்லை இவர்களைக் கோஷமிட வைத்து ஒரு குழுவினர் பொருளாதாரத்தை முறை கேடாக ஈட்டுகிறார்கள் அதை சுவிஸ் நாடு கண்காணிக்க வேண்டும்.

  9.சுவிஸ் அரசுடன் தற்போதைய நல்லிணக்க அரசு 3 ஒப்பந்தங்களில் கைச்ச்சாத்திட்டுள்ளது அத்துடன் சுவிஸ் ஜனாதிபதி இலங்கை சென்று வந்துள்ளார் அத்துடன் சுவிஸ் சட்ட அமைச்சரும் சென்று வந்துள்ளனர்.சுவிஸ் தூதர் உள்ளிட்ட குழுவினர் யாழ் சென்று முல்வர் விக்னேஸ்வரனைச் சந்தித்து பேசி உள்ளனர் முதல்வர் விக்னேஸ்வரனைத் வேறு எவரும் சுவிஸ்சில் உள்ள அகதிகளைத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்று சொல்லவில்லை.சுவிஸ் நாட்டில் உள்ள தமிழர்களின் எதிர் காலம் ஆரோக்கியமானதாக இல்லை,

  இப்படி புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் செயல்ப் பாடுகள் தொடர்பாக இலங்கை அரசினால் 90 குற்றச் சாட்டுகள் சுவிஸ் அரசிடமும் ஐநா சபையிலும் கையளிக்கப் பட்டுள்ளது  பிரான்ஸ் ஜெர்மன் நாடுகளின் கவனத்திற்க்கும் கொண்டுவரப் பட்டுள்ளது இலங்கை வெளிவிவகார அமைச்சர் mangala samaraveera பிரான்ஸ் ஜேர்மன் போன்ற நாடுகளிலும் பல ஒப்பந்தங்களில் கைச் சாத்திட்டு உள்ளார் இனி வரும் காலங்களில் இலங்கை அரசின் சார்பாகவே எல்லா நாடுகளும் கருத்துக் கூறும் என்பதில் ஐயமில்லை.

  இப்போது புரிகிறதா தமிழ் மக்களே பொல்லைக் கொடுத்து அடிவாங்கும் நிலைக்கு வந்து விட்டோம் இனிமேலாவது ஒற்றுமையுடன் சரியான வழியில் சரியாக போராட்டத்தை முன்வையுங்கள்,

  இன்றுவரை ஈழத் தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களுக்கு அவர்களால் முன்னெடுக்கப் பட்ட எந்த ஒரு ஆர்ப்பாட்டமும்  சிதையக் காரணம்.என்ன.ஜெனிவாவில் நடந்த தீக்குளிப்பு.ஒவ்வொரு முறையும் இடம் பெற்ற. ஜெனிவா முன்பான.தமிழர்களுக்கு நீதி வேண்டி. போராட்டம்.

  ஐக்கியநாடுகள் மனித உரிமைச் சபையில் புலம் பெயர். ஈழ. தமிழக.பிரமுகர்கள் கலந்து கொண்டு எத்தனையோ முறை  இடம் பெற்ற  ராஜ ரீகப் போராட்டம்.எத்துவுமே தமிழ் மக்களுக்குப் பயன் தரவில்லை என்றால் பயன் தரவில்லை என்றால் இதற்க்கு என்ன காரணம் என்பதை  தமிழர் தலைவர்களும்  தமிழ் மக்களும் உணரவேண்டும்.

  அன்புடன் மணிமாறன்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
விவசாயத் தகவல்கள்
வினோத நிகழ்வுகள்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்