வித்தை காட்டிய அணியிடம் திணறி தோல்வி அடைந்த இலங்கை அணி,
 • வித்தை காட்டிய அணியிடம் திணறி தோல்வி அடைந்த இலங்கை அணி,

  இலங்கை மற்றும் வங்கதேச அணிகளுக்கிடையேயான முதல் ஒரு நாள் போட்டியில் வங்கதேச அணி 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

  இலங்கை-வங்கதேசம் அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி தம்புல்லாவில் நடைபெற்றது.

  இதில் வங்கதேச அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. துவக்க வீரர் செளமியாசர்கார் 10 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சபீர் ரஹ்மானுடன் மற்றொரு துவக்க வீரர் தமிம் இக்மால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அணியின் ஓட்டம் மளமளவென உயர்ந்தது.

  சபீர் ரஹ்மான் அரைசதம் கடந்து 54 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அடுத்து வந்த முஸ்தபிகுர் ரஹீம் 1 ஓட்டத்தில் வெளியேறினார்.விக்கெட்டுகள் ஒரு புறம் விழுந்தாலும் தமிம் இக்பால் தன்னுடைய நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார்.

  இதனால் அவர் சதம் கடந்து 127 ஓட்டங்கள் குவித்தார். இவருக்கு ஈடுகொடுத்து ஆடிய சஹிப் அல் ஹசன் 72 ஓட்டங்கள் குவித்தார்.

  அடுத்து வந்த வீரர்கள் தங்கள் பங்கிற்கு அதிரடி காட்ட வங்கதேச அணி 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 324 ஓட்டங்கள் குவித்தது. இலங்கை அணி சார்பி லக்மல் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

  கடின இலக்கை துரத்திய இலங்கை அணிக்கு துவக்க வீரர் குணரத்னே ஓட்டம் எதுவும் எடுக்காமல் முதல் ஓவரிலே எல்பிடபில்யூ ஆகி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார். குணரத்னே வெளியேற அடுத்து வந்த வீரர்கள் வங்கதேச அணி வீரர்களின் பந்து வீச்சை தாக்கு பிடிக்கமுடியால் வெளியேறினர்.

  இலங்கை அணி 45.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்கள் எடுத்து 90 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

  இலங்கை அணியில் அதிகபட்சமாக சண்டிமல் 59 ஓட்டங்களும், பெரரா 55 ஓட்டங்களும் குவித்தனர்.

  வங்கதேச அணி சார்பிம் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் வங்கதேச அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உக்ள்ளது.

  வித்தை காட்டிய அணியிடம் திணறி தோல்வி அடைந்த இலங்கை அணி, வித்தை காட்டிய அணியிடம் திணறி தோல்வி அடைந்த இலங்கை அணி, வித்தை காட்டிய அணியிடம் திணறி தோல்வி அடைந்த இலங்கை அணி,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
மங்கையர் பகுதி
சினிமா
இலங்கை சட்டம்
இந்திய சட்டம்
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink