இந்தியா– ஆஸ்திரேலியா 3–வது டெஸ்ட் நடக்கும் ராஞ்சி ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய டோனி,
  • இந்தியா– ஆஸ்திரேலியா 3–வது டெஸ்ட் நடக்கும் ராஞ்சி ஆடுகளத்தை பார்வையிட்டு ஆலோசனை வழங்கிய டோனி,

    இங்கு டெஸ்ட் அரங்கேறுவது இதுவே முதல் முறையாகும். தற்போது இந்த தொடர் 1–1 என்று சமநிலையில் இருப்பதால் ராஞ்சி டெஸ்ட் போட்டி இரு அணிக்குமே முக்கியத்துவம் பெற்றுள்ளது.

    ராஞ்சி, முன்னாள் கேப்டன் டோனியின் சொந்த ஊராகும். அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், சொந்த ஊரில் முதல் முறையாக டெஸ்ட் போட்டி நடப்பதால் அது ரசிகர்களுக்கு மறக்க முடியாத அனுபவமாக அமைய வேண்டும் என்பதில் தனிப்பட்ட முறையில் அக்கறை காட்டுகிறார். இதனால் அவ்வப்போது மைதானத்திற்கு சென்று ஆடுகளம் (பிட்ச்) தயாரிப்பிலும் கவனம் செலுத்துவதை பார்க்க முடிகிறது. பிட்ச் தயாரிப்பாளர் எஸ்.பி.சிங்குடனும் ஆலோசனை நடத்தியுள்ளார்.

    இது குறித்து பிட்ச் பராமரிப்பாளர் எஸ்.பி.சிங் கூறும் போது, ‘டோனி, ராஞ்சியில் இருக்கும் போதெல்லாமல் அடிக்கடி மைதானத்திற்கு வந்து இங்குள்ள ஜிம்மில் உடற்பயிற்சியில் ஈடுபடுவார். அது போலத் தான் நேற்று முன்தினமும் இங்கு வந்தார். ஆடுகளத்தை பார்த்து விட்டு சில ஆலோசனைகளை வழங்கினார். எல்லாமே வழக்கமான ஒன்று தான். கடந்த 4 ஆண்டுகளாக ஆடுகள தயாரிப்பில் டோனி ஒரு போதும் தலையிட்டது இல்லை. ஆனால் தலைச்சிறந்த வீரரான அவரிடம் இருந்து, ஒரு தரமான ஆடுகளத்தை தயாரிப்பதற்காக பயனுள்ள யோசனைகளை எதிர்பார்ப்பது உண்டு’ என்றார்.

    மேலும் அவர் கூறுகையில், ‘இந்த டெஸ்ட் போட்டிக்காக நாங்கள் மூன்று ஆடுகளங்களை தயார் செய்து உள்ளோம். ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதமான தன்மை கொண்டது. இதில் எந்த ஆடுகளத்தை பயன்படுத்துவது என்பது குறித்து போட்டிக்கு 2 நாட்களுக்கு முன்பாக இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்யும். எந்த ஆடுகளம் என்றாலும் அது பேட்டிங் மற்றும் பந்து வீச்சு இரண்டுக்கும் ஒத்துழைக்கும். நிச்சயம் போட்டி 5 நாட்கள் நீடிக்கும் என்று நம்புகிறோம்’ என்றார்.

  • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
அரசியல் கட்டுரைகள்
சரித்திரம்
இலங்கை சட்டம்
மங்கையர் மருத்துவம்
 மரண அறித்தல்