அமெரிக்க விண்பொறியியல் ஆய்வுக்கல்லூரியில் வன்னித் தமிழன்,
 • அமெரிக்க விண்பொறியியல் ஆய்வுக்கல்லூரியில் வன்னித் தமிழன்,

  என்ன  பெருமை…அமெரிக்க விண்பொறியியல் ஆய்வுக்கல்லூரியில் வன்னித் தமிழன்!! என்னா பெருமை…

  அமெரிக்க விண்பொறியியல் ஆய்வுக்கல்லூரியில் வன்னித் தமிழன்!! என்னா பெருமை…

  அமெரிக்காவில் விண்பொறியியல் ஆய்வுக்கல்வி மாணவர் ர.ரணேந்திரன் தனது கற்கை நெறி திட்டத்திற்காக வடிவமைத்த ஏவுகணை ஒன்றுக்கே “அகரன்” என பெயரிட்டுள்ளார்.

  இது குறித்த செய்திகளும், காணொளிகளும் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றமை

  குறிப்பிடத்தக்கது. அத்துடன், இவரின் திட்டத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  யார் இவர் ?
  முல்லைதீவை வசிப்பிடமாக கொண்ட வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் அவர்களின் புதல்வனேரானேந்திரன் .இவர் புதுக்குடியிருப்பு ஸ்ரீ சுப்பிர மணிய வித்தியாசாலை புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்று பின்னர் சென்னை Srm பல்கலைக்கழகத்தில் விண்பொறியியல் இளங்கலை அறிவியல் கற்றவர்.

  பல்கலையால் அப்போது அனுப்பப்பட்ட நுண்செய்மதி ஒன்றில் கற்கும் வாய்ப்பு கிடைத்திருந்தது. Isro வின் பல இணைப்பகங்கள் உள்ளடங்கலாக இந்தியாவில் பல வான்பொறியியல் நிறுவனங்களில் கற்கைப்பயணம் மேற்கொண்டிருந்தவர்.

  விண்ணறிவியல் தொடர்பான பல ஆய்வுக்கட்டுரைகள் எழுதியுள்ளார். பட்டப்பின் கல்வி தற்போது அமெரிக்காவில். Spacecraft navigation dynamics and contol- விண்கலம் செலுத்துகை இயக்கவியலும் கட்டுப்படுத்தலும் என்கின்ற நுண்ணறிவியலில் ஆய்வுக்கல்வியை மேற்கொள்பவர்.

  இது தொடர்பில் பதினொரு செயற்றிட்டங்களிலும் ஈடுபட்டவர். விண்கலங்களை தாய்க்கலத்துடன் இணைக்கும் முறையின் மேம்பாடு பற்றி தனி ஆய்வை மேற்கொள்பவர். பல செயற்றிட்டங்கள் மற்றும் ஆய்வுமுறைகள் தொடர்பில், அமெரிக்க விண்வெளிவீரர்கள் மற்றும் அறிவியலாளர்கள் பலரது பாராட்டைப்பெற்றவர்.

  காலவெளி அறிவியலில் மேற்கொள்ளும் தனிப்பட்ட ஆய்வுகளுக்காக அமெரிக்க அறிவியலாளர்களின்

  கவனத்தைப்பெற்றவர். பாராட்டையும். வியாழக்கோளின் சுழற்சியால் விளையும் பொதுச்சார்பு விளைவுகளில் ஒன்றான காலவெளிச்சட்ட

  இழுகையான Einstein thirring lense விளைவை மையப்படுத்திய அறிவியல் உரையாடலில்நா சாவின் கோளியல் காந்தமண்டல ஆய்வுக்கூட அறிவியலாளரால் பதிலளிக்க இயலாத ஆய்வுக்கேள்வி என அவையில் பாராட்டுப்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

  விண்ணறிவியல் சார்ந்த பல அறிவியல் மாநாடுகளில் பங்குகொண்டவர். வானூர்தி அறிவியல் ,ஏவுகணை அறிவியல், செய்மதித்தொழில் நுட்பம் உள்ளடங்கலான பல

  பிரிவுகளில் செயற்றிட்டங்களை மேற்கொண்டவர். கற்கை நெறி சார்ந்து தற்போது வடிவமைத்த ஏவுகணைக்கு அகரன் எனப்பெயரிட்டார்.

  வரும் மாதங்களில் மேலும் திறன்வாய்ந்த ஏவுகணைகளால் தமிழை அழகுபடுத்துவேன் என தெரிவித்தார்.

  அமெரிக்க விண்பொறியியல் ஆய்வுக்கல்லூரியில் வன்னித் தமிழன்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
பிறந்த நாள் வாழ்த்துக்கள்
இலங்கை சட்டம்
சிறுவர் உலகம்
 மரண அறித்தல்