பிரான்ஸ் மாவீரர் தினம்..! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு,
 • பிரான்ஸ் மாவீரர் தினம்..! ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு,

  அறம், அஹிம்சை வழி போராட்டங்களை கடந்த தாயக விடுதலைக்காக ஆயுத போராட்டகளை முன்னெடுத்து வீர சாவை தழுவிக்கொண்ட போராளிகள், பொது மக்கள் ஏராளம்.

  இந்நிலையில், ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி உலகலாவிய ரீதியில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

  குறிப்பாக புலம்பெயர் நாடுகளில் தமிழ் மக்களினால் மாவீரர் தினம் நேற்றைய தினம் மிகவும் உணர்வுப்பூர்வமாக முன்னெடுக்கப்பட்டிருந்தது.

  பிரித்தானியா, கனடா, ஜேர்மன், டென்மார்க், அவுஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப்பட்டிருந்த நிலையில், பிரான்சிலும் மாவீரர் தினம் உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது.

  இதன் போது மணியோசை எழுப்பப்பட்டதை தொடர்ந்து பொது சுடர் ஏற்றப்பட்டு, விடுதலைப் புலிகளின் கொடி ஏற்றப்பட்டு மாவீரர்களுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலக்கியம்
இந்திய சட்டம்
இலங்கை செய்தி
 மரண அறித்தல்