தலையை ஏன்,மொட்டை அடிக்கிறார்கள்,
 • தலையை ஏன்,மொட்டை அடிக்கிறார்கள்,

  இந்து மதத்தில் எண்ணிலடங்கா சடங்குகள் நிலவுகிறது. மொட்டை அடித்தல், உபநயனம், திருமணம் போன்றவைகள் சில உதாரணங்கள். பிறந்தது முதல் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஒவ்வொரு இந்துக்களும் இவையனைத்தையும் பின்பற்ற வேண்டியிருக்கும். இந்த சடங்குகளும், பண்பாடுகளும் இந்து மதத்தில் முக்கிய பங்கினை வகிக்கிறது.

  மோட்சத்தை அடைய (மீண்டும் பிறவி எடுக்காமல் இருக்க) இதனை இந்துக்கள் பயபக்தியுடன் பின்பற்றுவார்கள். தலையை மொட்டையடித்து கொள்வது என்பது பல இந்துக்கள் பின்பற்றி வரும் ஒரு முக்கியமான சடங்காகும். திருப்பதி, பழனி மற்றும் வாரணாசி போன்ற புனித ஸ்தலங்களில் தலையை மொட்டையடித்து, முடியை கடவுளுக்கு காணிக்கையாக கொடுப்பது கட்டாயமான ஒரு பழக்கமாக உள்ளது.

  தலைமுடி என்பது பெருமையான ஒரு விஷயமாகும். அதனை கடவுளுக்கு காணிக்கையாக அளிப்பதன் மூலம், நம் செருக்கும், ஆணவமும் நம்மை விட்டு நீங்கும் என நம்பப்படுகிறது.

  தாங்கள் வேண்டியது நடைபெற்றால், கடவுளுக்கு நேத்திக்கடன் செலுத்துவதற்காகவும் சிலர் தங்கள் தலையை மொட்டையடித்து கொள்வதுண்டு. சரி, தலையை மொட்டையடித்து கொள்வதற்கான காரணம் என்ன? ஏன் அதனை இந்துக்கள் பின்பற்றுகின்றனர்? தெரிந்து கொள்ள மேலும் படியுங்கள்.

  மறுபிறப்பு.


  பிறப்பு மற்றும் மறுபிறவி மீது இந்துக்களுக்கு நம்பிக்கை உண்டு. கடந்த ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பை துண்டிப்பதற்காகவே குழந்தைகளுக்கு முதல் மொட்டை போடப்படுகிறது. அப்படி தலையை மொட்டை அடிப்பதால் அக்குழந்தை இந்த பிறப்பில் புதிய வாழ்க்கையை தொடங்குகிறது. அதனால் இது ஒரு முக்கியமான சடங்காக பார்க்கப்படுகிறது.

  முழுமையாக சரணாகதி அடைதல்

  தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தை குறிக்கும் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தலைமுடியை மொட்டை அடித்து கொள்வதன் மூலம், நாம் கடவுளிடம் சரணாகதி அடைகிறோம். தலைமுடியை மொட்டை அடிப்பதன் மூலம் நம் தலைக்கனத்தை இழந்து, கடவுளுக்கு அருகில் வருகிறோம். இது பணிவை எடுத்துக்காட்டும் ஒரு செயலாகும். மேலும் எந்த ஒரு ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல் கடவுளை உணர ஒரு சின்ன முயற்சியாகும்.

  மன்னட் என்னும் பகுதியில் மக்கள் தங்கள் தலையை மொட்டை அடித்து கொள்வார்கள். நீங்கள் வேண்டியது நிறைவேறினால் கடவுளுக்கு அந்த கடனை அடைக்க மொட்டை அடிப்பார்கள். அதுவே மன்னட். அதனால் ஒருவரின் வேண்டுதல் நிறைவேறும் போது, கடவுளுக்கு தன் நன்றியை காட்ட, தன் தலையை மொட்டையடித்து, தலை முடியை காணிக்கையாக செலுத்துவார். இந்த சடங்கு முக்கியமாக திருப்பதி, பழனி மற்றும் வாரணாசி கோவில்களில் கடைப்பிடிக்கப்படுகிறது.

  முக்கிய சடங்கு
  அதனால் இந்து மதத்தில் மொட்டை அடிப்பது என்பது மிகவும் முக்கியமான சடங்காகும். இது பணிவை எடுத்துக்காட்டும் செயல். உங்களை ஒட்டு மொத்தமாக கடவுளுக்கு அற்பணிக்கும் ஒரு முயற்சி.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
வினோத நிகழ்வுகள்
தொழில்நுட்பம்
தங்க நகை
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்
wso shell IndoXploit shell r57 shell hacklink hacklink satış wordpress download Google hacklink