செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம்,
 • செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம்,

  கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ம் திகதி முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுமிகள் வளாகத்தின் மீது ஸ்ரீலங்கா வான்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட 61 பாடசாலை மாணவிகளை நினைவு கூரும் நினைவேந்தல் நிகழ்வு யாழ் பொது நூலகத்திற்கு அருகில் மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.

  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் இளைஞர் அணித் தலைவர் இன்னாசிமுத்து சத்தியசீலன் தலைமையில் இன்று பி.ப 4.00 மணியளவில் ஆரம்பமாகியது.

  முதல் நிகழ்வாக செஞ்சோலையில் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவிகளில் ஒருவரான இராசேந்திரன் மகிழ்வதனி அவர்களின் சகோதரி இராசேந்திரம் காந்தறூபி அவர்கள் நிகழ்வின் பிரதான சுடரை ஏற்றிவைத்தார்.

  அதனைத் தொடர்ந்து யாழ் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.J. ஜெயரட்ணம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோரும் நினைவுச் சுடரை ஏற்றினார்கள்.

  தொடர்ந்து மதத் தலைவர்கள் பொது அமைப்புக்களின் தலைவர்கள் பொது மக்கள் அனைவரும் நினைவுச் சுடர்களை ஏந்தி மலர்தூவி வணக்கம் செலுத்தினர்.
  தொடர்ந்து அஞ்சலி உரைகள் இடம்பெற்றது.

  யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை P.து. ஜெயரட்ணம் வடமாகாண விவசாய அமைச்சர் கௌரவ ஐங்கரநேசன் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் ) அருட்சகோதரி லுமினா திருமதி பத்மினி சிதம்பரநாதன் ( மகளீர் விவகார தலைவி- தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி)
  விரிவுரையாளர் திரு சரவணபவன் (யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்க தலைவர்) திருமதி சிவரதி ராஜ்குமார் (வவுனியா மாவட்ட செயலாளர் – த.தே.ம.முன்னணி) கௌரவ எம்கே.சிவாஜிலிங்கம் (வடமாகாண சபை உறுப்பினர்) செல்வராசா கஜேந்திரன் (பொதுச் செயலாளர்)
  ஆகிரோரது உரைகளுடன் அஞ்சலி நிகழ்வு நிறைவுபெற்றது.

  செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம், செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம், செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம், செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம், செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம், செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம், செஞ்சோலை படுகொலை சோக மயமான யாழ் நகரம்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தொழில்நுட்பம்
சிறுவர் உலகம்
இலங்கை செய்தி
இலங்கை சட்டம்
 மரண அறித்தல்