சைவமே தமிழர்களின் பாரம்பரிய சமயம்,
 • சைவமே தமிழர்களின் பாரம்பரிய சமயம்,

  தமிழர் உலகின் முதல் நாகரீகத்தைக் கொண்ட குடியினர் என்று பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டிருந்தாலும் இன்றுவரை பகிரங்கமாக எவருமே இந்த உண்மையை வெளிப்படுத்திப் பிரகடனம் செய்யவில்லை.

  உலகின் முதல் நாகரிக மாந்தரின் வழிவந்த தமிழர், தமக்கென சிறந்த நாகரிகத்தையும் பண்பாட்டையும் கொண்டிருந்தனர் என்றால் மிகையாகாது. அந்நாகரிகத்தின் வளர்ச்சியும் தொடர்ச்சியும் தமிழும் சைவமுமாகத் தொடர்ந்து எம்முடன் வந்துகொண்டிருக்கிறது. சுமேரிய நாகரிகத்திலிருந்து தோற்றம் பெற்ற எமது சைவசமயம் பல இடர்பாடுகளுள் சிக்குண்டு உருவமும் பெயரும் இழந்து நிற்கின்றது.

  பிற்காலத்தில் ஆரியம் கொண்டுவந்த இந்துக் கலாச்சார மூடப் பரிணமிப்பு எம் மொழியையும் எம் தொன்மைமிக்க வாழ்வுச் சிறப்புக்களையும் வெகுவாகச் சிதைத்தே விட்டது. இப்பாதிப்பிலிருந்து விடுபட விரும்பினாலும் அறிவு சார்ந்த சைவ முன்னெடுப்புக்களுக்கு ஆதரவற்ற நிலையே தமிழர்களிடையே நிலவுவதால், நாம் எம்மை மீட்க முடியாதவர்களாக எதுவுமற்று இருக்கவேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இந்நிலை மனிதநேயத்தைப் பாதிப்பதுடன் நின்றுவிடாது பொதுநல வளமுள்ள சமூகக் கட்டமைப்புக்கும் இடையூறாகவே இருந்துவருகின்றது.

  வடமொழியின் ஆதிக்கம் இந்துக் கலாச்சாரத்தில் உலக மூத்த நாகரிக்கக் குடிகளான தமிழரைப் புறம்தள்ளி நிலைகுலைய வைத்துள்ளது. தமிழரின் இன்றைய நிலையே அதற்கு ஆதாரம். தமிழரே உலக மூத்த நாகரிக மாந்தரின் வழிவந்தவர் என்ற உண்மை மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டுக்கொண்டும் இருக்கிறது. இவ்வுண்மை ம்றைக்கப்பட்டதனால் தொடர்ந்தும் தமிழர்களுக்கான உரிமைகளும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

  இதற்கான முக்கிய காரணம் தமிழன் முதன்முதல் நாகரிகமடைந்த இடத்தை விட்டு பலவித காரணங்களால் தூர தேசங்களுக்கு இடம்பெயர்ந்தமையும் ஆகும். தமிழனின் இடப்பெயர்வு தவிர்க்கமுடியாததாய் இன்றுவரை தொடர்ந்துகொண்டே இருக்கிறது.

  ஆனாலும் தமிழன் நாகரிகமடைந்தபோது இருந்த தடயங்கள் இன்றுவரை தொடர்கிறது. தமிழர் மனித குலத்துக்கு வழங்கிய அளப்பரிய படைப்புக்கள் எழுத்துருவாக்கமும் சமைய வாழ்வுமாகும். ( Evolution language, Evolution Religion) இவ்விரண்டையும் வேறு எந்த நாகரிகமடைந்த இனங்களும் வழங்கியிருக்கவில்லை. சுமேரிய இனமே இவ்விரண்டையும் ஒருங்கே வழங்கியிருக்கின்றது.

  நாகரிகத்தின் தோற்றம் விவசாயப் புரட்சியினாலேயேதான் தோற்றம் பெற்றது. இது முதன் முதலாக 10000 ஆண்டுகளுக்கு முன்னர் மத்தியகிழக்கு நாடுகளில் தோன்றி நடந்தேறிய நாகரிக வளர்ச்சி. இப்புரட்சி 200000 ஆண்டுகளுக்கு மேலான கற்கால மனிதனின் வாழ்வில் அளப்பரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த விவசாயப்பரிணமிப்பின் பின்னர் தான் சனத்தொகைப் பெருக்கமும் பன்மடங்காக அதிகரிக்கத் தொடங்கியது.

  இந்த வளர்ச்சி ஒவ்வொரு நூறு ஆண்டுகளும் 200 மடங்காகப் பெருகியது.இந்த இனப்பெருக்கமே உலகில் முதன்முதலாக நிகழ்ந்த சனத்தொகைப் பெருக்கமாகும். இந்த விரிந்த சமூகமே நாகரீகமடைந்த மனிதகுலத்தின் மூத்த குடிகளாகும். அதனாலேயே எம் முன்னோர் கல்தோன்றி மண்தோன்றாக் காலத்து மூத்த குடிகள் என உவமானமாகக் கூறிப் பெருமிதமடைந்தனர். இது தமிழரின் பிறப்புரிமை. இதைத் தொடர்ந்தும் உலகம் மறுத்தும் மறைத்துக்கொண்டும் இருக்கிறது.

  இதன் விளைவாக பல அறிவுசார் சிந்னைகளும் பற்பல கண்டுபிடிப்புக்களும் எழுச்சிபெற்றன. அத்தோடு எழுத்துருவாக்கமும் சமய வாழ்வும் கூட வளர்ச்சி கண்டது.

  அன்று உருவான எழுத்துருவாக்கம் கணிதத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஏனெனில் விவசாய உற்பத்திகளையும் சனத்தொகைப் பெருக்கத்தையும் நிர்வகிக்க கணக்குவழக்குகள் அத்தியாவசியமானதாக இருந்தன. இந்தப் பதிவுகளின் 80

  வீதமானவை கணிதக் குறியீடுகளைக் கொண்டவைகளாகும். மிகுதி இருபது வீதமானவை சித்திரவடிவங்களால் ஆக்கப்பட்டிருந்தன. இக்கணிதக் குறியீடுகள்தான் ஒலியலகுத் தன்மையுள்ள எழுத்துருவாக்கத்துக்கு வித்திட்டது. இதுவே தமிழ் இலக்கணத்தின் சூத்திரமானது.

  இந்த எழுத்துருவாக்கம் மனித இனத்தின் அதி உன்னத சாதனை எனலாம். இதற்கு நிகரான சாதனை அமைய வேண்டுமானால் இனிப் புதிதாய் ஒரு உலகம் தோன்றினாற்றான் உண்டு. இந்த எழுத்துருவாக்கப் பொறிமுறை தமிழ் இலக்கணத்திற்குள் மட்டுமே இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. (This mechanism is called digitalised the sound and information processing) This is thethethe methodology for constructing for natural or artificial (computer) language which using Bits Byte and words.

  இதுவே தமிழரின் தொன்மைமிக்க இலக்கண நூலான தொல்காப்பியம். இது சொல்லதிகாரம், எழுத்ததிகாரம், பொருளதிகாரம் என வகுக்கப்பட்டுள்ளது. மற்றைய எழுத்துருப் பாவனையாளர்கள் கடன்பட்டுத் தத்தமது வசதிக்கேற்ப இலக்கணத்தைத் திரித்து வைத்துள்ளனர். தமிழர் அல்லாதாரிடம் எழுத்துருவாக்கம் என்னும் பகுதியே கிடையாது. இதை மறைத்து தமது உயர் நிலையைத் தக்க வைப்பதற்கு ஆய்வுகளிலும் அது சார்ந்த கட்டுரைகளிலும் மறைப்புக்களைச் செய்கின்றனர் என்பதும் கண்கூடு. தமிழும் ஒரு பழைய மொழி என்று கூறும் அவர்கள் அதுவே உலகின் முதல்மொழி என்று வெளிப்படையாகக் கூறுவதில்லை.

  இதை ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் சுவாமிகள் உறுதிப்படுத்துகின்றார். நின்ற திருத்தாண்டகத்தில் " எண்ணாகி எண்ணுக்கோர் எழுத்தாகி, சொல்லாகி சொல்லுக்கோர் பொருளாகி என்று சிவனை விழிக்கின்றார் ". இதிலிருந்து எழுத்துருவாக்கம் பல்லாயிரம் ஆண்டுகள் பழைமை கொண்டது என்பதனை நாம்

  அறியலாம். கூடவே சைவமும் சுமேரியர் வழி வந்தது என்று உறுதிசெய்யலாம்.

  நாகரீகத்தின் மூலமான விவசாயத்தை அறிந்திராத, கால்நடைகளை மேய்த்துக்கொண்டு நாடோடிகளாக வந்த ஆரிய இனம், தமிழரின் சமய வாழ்வில் புகுந்தது மாத்திரமின்றி தம்மால் புரிந்து கொள்ள முடியாத கடவுள் தத்துவத்தை புராணக் கதைகளாக்கி, அப்புராணக் கதைகளுக்கு ஏற்றவாறு சடங்குகளை இயற்றி, மீண்டும் காலஓட்டத்தினூடு சடங்குகளையே வழிபாடுகளாக்கி தமிழருக்கே இந்துக் கலாச்சாரமாகத் திருப்பித் திணித்து வழிநடத்திக் கொண்டிருக்கின்றனர்.

  அன்று ஆரியர்கள் தாம் கொண்டுவந்த நாடோடிக் கதைகளை வேதம் என்றும், ஆடுமாடுகள் மேய்ந்த திறந்த புல் தரைகளில் குளிர் காய்வதற்கும், பயத்தைப் போக்குவதற்காகத் தீ முட்டியதை யாகங்கள் என்றும் சடங்குகளாக்கி எதிரிகளின் இடையூறுகளைச் சபிப்பதை மந்திரங்கள் என்றும் சுலோகங்கள் என்றும் புகுத்தினர். அவர்கள் (iindoeuropean) வெளிர் நிறம் கொண்டவர்களாக இருந்ததனால் தம்மை தேவர்கள் என்றும், பழுப்பு நிறமாக இருந்த திராவிடர்களை (Hemetic race) ( short and stocky, dark skin sumerians) அரக்கர்கள் என்றும் இனம்பிரித்தனர். நாகரிகம் கொண்ட சுமேரியர் வழிவந்த தமிழர் தீண்டத் தகாதவர் ஆயினர்.

  எழுத்துருவாக்கத்தின் கால அட்டவணை

  எழுத்துருவாக்கம் என்னும் மகத்தான சாதனை நான்காயிரம்(4000) ஆண்டுகளுக்கு முன்பாக 3000 ஆண்டுகால அட்டவணையின் பரிணமிப்பினூடாக முதற்சங்கம், இடைச்சங்கம் இரண்டும் பல வடிவங்கள் ஆய்வுகளோடு சுமேரியரால் நிறைவேற்றப்பட்டது. இது ஒரு தனி மனித முயற்சி அல்ல. பல அறிஞர்களின் கூட்டு முயற்சியாகவே இருந்திருக்க முடியும்.. ஆனாலும் தொல்காப்பியம்

  மட்டும் எஞ்சியிருந்ததால் தொல்காப்பியரின் பெயர் மட்டும் நிலைத்துவிட்டது.

  தமிழ் எழுத்துக்கள் உருவாவதற்கு கிட்டத்தட்ட ஏழாயிரம் ஆண்டுகள் வரை சென்றிருக்கிறது. இந்நிகழ்வு இந்திய வரலாற்றுக்கும் இந்தியத் துணைக் கண்டத்துக்கும் உட்படாதது. இது பற்றிய தெளிவான அறிவு சம்ஸ்கிருதத்தை வைத்து ஆய்வு செய்யும் ஆய்வாளர்களிடம் இல்லை. எதோ புராணக் கதைகள் மூலம் அவர்கள் உருவாக்கிய கடவுளின் படைப்புத்தான் எழுத்துருவாக்கம் எனும் கொள்கையிலிருந்து அவர்கள் மாறுவதாகவும் இல்லை. அதாவது வியாசர் கூறப் பிள்ளையார் எழுதிய கதையை இன்னும் நம்பியபடி ஆய்வுகளைத் தொடர்கின்றனர். தமிழர்களைத் தாழ்வாகவும் ஏற்றுக்கொள்ள முடியாத மனநிலைக் கட்டமைப்புடனும் பார்க்கின்ற சமஸ்கிரதவாதிகள், பிராமி எழுத்துக்களை மர்மமானதும் நூதனமானதுமாகவே கேள்விக்குறியுடன் பார்த்து, மேற்கொண்டு ஆய்வு செய்யவோ தமிழரின் தொன்மையுடன் பின்னோக்கிப் பார்க்கவோ மனமற்றவர்களாக இருக்கின்றனர். இந்நிலையில் மேற்குலகம் சமஸ்கிருதத்தை தமது மொழியுடன் தொடர்புடையது என்று மிகுந்த ஆர்வத்துடன் ஆய்வு செய்வதைக் காணலாம்.

  தாங்கள் கடன் வாங்கிய மர்மமான எழுத்துக்கள் யாருடைய கண்டுபிடிப்பு என்று அறியாமல் இது இந்திய நாகரீகத்துக்கு உரிய படைப்பு என்ற பொய்யான தோற்றத்தை ஏற்றுக்கொண்டு, அதற்கு மேலாதிக்கமாக இருக்கின்ற சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தி ஆய்வுகளை மேற்கொள்கின்றனர். இதற்குப் பக்கபலமாக மேற்குலக இனவாதிகளும் சமஸ்கிருதத்தை முன்னிலைப்படுத்தி தமிழை இரண்டாவதாகவும் நிறைப்படுத்துகின்றனர்.

  சிந்துவெளி நாகரீகம் புதிய நாகரீகத் தோற்றமா? அல்லது வேறு நாகரிகத்தின் தொடர்ச்சியா?

  பல்வேறு ஆதாரங்களிநூடு பார்க்கும்போது சிந்துவெளி நாகரீகம் வேறு ஒரு நாகரீகத்தின் தொடர்ச்சியாகவே தென்படுகிறது. ஏனெனில், சிந்துவெளி நாகரீகத் தோற்றத்தின் பரப்பாக இருந்திருந்தால் அங்கு கற்காலத்திலிருந்து வெண்கலக் காலத்திற்கு மாறிய தடயங்கள் அகப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு எதுவும் அங்கில்லை. கற்காலத்திலிருந்து இவ்வாறான நாகரிக வளர்ச்சி ஏற்பட கிட்டத்தட்ட 3000 ஆண்டுகளாவது எடுத்திருக்கும்.

  செங்கற்களின் வரலாறு:

  செங்கல்லின் கண்டுபிடிப்பு மனிதனின் கண்டுபிடிப்புக்களில் முக்கியம் வாய்ந்தது. ஏனெனில் களிமண்ணைக் கல்லாக்குவதர்க்குத் தீயிலிட்டுச் சுட்டபோது உலோகம் உருகி வெண்கலக் காலம் தோற்றம் பெற்றது. இவ்வரிய நிகழ்வு மெசொபொத்தேமியாவிலே சுமேரிய இனத்தவரின் காலத்தில் நடந்தேறியது( Civilisation Build on mud ) என ஆங்கிலத்தில் குறிப்பிடுகின்றனர். இத் தொழில் நுட்பமானது சுமேரியருக்கே உரியதாக யாரும் இதுவரை உரிமை கோரப்படாததாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது. அப்படி இருக்க நாகரிகத்தின் தோற்றம் சிந்துவெளி என எப்படிக் கூறலாம்??

  பொறிமுறையாக்கபட்ட நீர்பாசனமும் அதன் உத்திகளும்

  "Mesopoththemia Engineers are mastering controling the water "

  மெசொபொத்தேமியா யூகிரட்டிஸ், தைகிரிஸ் ஆகிய இரு நதிகளுக்கு இடைப்பட்ட சமவெளிப் பிரதேசம் ஆகும். இங்கு நீரோட்டத்தின் ஏற்றத்தாழ்வுகளின் போது அதை நிர்வகிப்பதற்கு கால்வாய்கள், நீர்த்தேக்கங்கள் போன்றவற்றை அமைத்து அப்பொறிமுறைகளினூடு திறம்பட வளர்ச்சி கண்டிருக்கின்றனர். இதே பொறிமுறைகளும் நிர்வகிப்புத் திறமைகளும் சிந்துவெளி நாகரீகத்திலும் ஒத்த அடையாளங்களுடன் பயன்படுத்தப்பட்டுள்ளன. இதிலிருந்து நீர்ப்பாசனப் பொறிமுறை நிர்வாக நாகரீகம் சுமேரியரியரிடமிருந்து வந்தது என்பது வெளிப்படை.

  மேலும் சக்கரங்களைக் கொண்டு நகர்வுகளை மேற்கொள்ளும் பொறிமுறை பாரங்களைச் சுமந்து செல்லவும் நீர்ப்பாசனச் சூத்திரங்களை அமைப்பதிலும் பயன்பட்டிருக்கிறது. இக்கண்டுபிடிப்பும் சுமேரியருக்கே உரித்தானது. (

  சக்கரத்தின் கண்டுபிடிப்பும் பயன்பாடும்

  குயவனின் திருகைக் கண்டுபிடிப்புத்தான் முதன் முதல் சக்கரத்தின் பாவனையாகக் காணப்படுகிறது. இது மிகப் பழமையான சுமேரிய நாகரிகத்தில் தோற்றம் பெற்றதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அங்கு பெரு மரங்கள் இருக்கவில்லை. ஆனால் களிமண் படுக்கைகள் தாராளமாகவே இருந்தன. ஆகவே மட்பாண்டங்களையே கொள்கலன்களாகச் சுமேரியர் பயன்படுத்தினர். மட்பாண்ட உற்பத்திக்கு இத் திருகிச் சக்கரங்கள் சீரான வட்ட வடிவம் இல்லாமலேயே பயன்படுத்தக் கூடியது. ஆனால் இவை உலோகக் கருவிகளால் நடுவில் துளையிடப்பட்டு சீரான வட்ட வடிவம் பெறும்போது வண்டில் சக்கரமாகப் பயன்பாட்டுக்கு வந்தது.

  மட்பாண்டத் திருகைச்கக்கரத்துக்கும் வண்டிற்சக்கரத்துக்கும் இடைப்பட்ட காலம் முன்னூறு ஆண்டுகளுக்கு மேலானதாகும். இந்த சக்கரப் பயன்பாட்டு வளர்ச்சி வேறு எந்த நாகரிகத்துக்கும் இல்லாத சிறப்புடன் சுமேரிய நாகரிகத்துக்கே உரியது என ஆய்வாளர்கள் வியக்கின்றனர்.

  அத்துடன் சிந்துவெளி நாகரீகத்தின் சக்கரப் பாவனையை ஒப்பிட்டுப் பார்க்கும் போது சிந்துவெளியில் சக்கரத்தைச் சுற்றிய உலோக வளையமும் அச்சுப் பகுதியிலிருந்து சக்கரப்பகுதியை இணைக்க குத்துக்கால்களையும் கொண்டதாக இன்றும் காணக்கூடியாதாக உள்ளது. சுமேரிய நாகரிகத்தின் கண்டுபிடிப்புக்களும் வளர்ச்சியும் சிந்துவெளி நாகரீகத்தில் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது. இதிலிருந்து சுமேரிய நாகரீகத்தின் பழைமையும் ஆரம்பக் கண்டுபிடிப்புக்களும் உறுதியாகின்றது.

  சிந்துவெளி நாகரீகத்தின் நகரக் கட்டமைப்புத் துல்லியமாகத் திட்டமிட்டு அமைக்கப்பட்டிருந்தது.

  1. இங்குள்ள கழிவுநீர் வடிகால் அமைப்பு இன்றைய நாகரீக உலகில் உள்ள அடிப்படைப் பொறிமுறை அமைப்புடன் உள்ளது.

  2. மழை நீரைத் தேக்கி வைக்கப் பாரிய நீர்த் தொட்டிகள் அமைக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் பொறியியல் நுட்பம் வளர்ச்சி பெற்றிருப்பது தெளிவாகின்றது.

  3. வீதி அமைப்புக்கள் திட்டமிட்டு நேர்ப்பாதைகளைப் கொண்டதாக இருக்கின்றது.

  4. கட்டட அமைப்புக்கள் திட்டமிடப்பட்டு தற்கால வீடமைப்புக்களை ஒத்ததாக பயன்பாடு நிறைந்ததாகக் காணப்படுகிறது.

  5. நதி நீரை பொறியியல் நுட்பம் நிறைந்த அணைகள் கட்டியும் திசை திருப்பியும் நீர்ப்பாசனத் திட்டங்களை வகுத்தும் திறம்படப் பயன்படுத்தியுள்ளனர்.

  6. இங்குள்ள நகரக் கட்டமைப்புக்களும் வீதிக் கட்டமைப்புக்களும் பெரும்பாலும் செங்கலைக் கொண்டே கட்டப்பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.

  7. இத்தகைய பாரிய நகரக் கட்டமைப்புக்குத் தக்கவாறு நெறிப்படுத்தப்படுவதற்கும் நீர்ப்பாசனப் பொறிமுறைகளை நிர்வகிப்பதற்கும் நிர்வாகக் கட்டமைப்பும்(சங்கங்கள்) இருந்திருப்பது கண்கூடு.

  இவையாவற்றையும் நுணுக்கமாகச் சீர்தூக்கிப் பார்க்கும் போது இங்குவாழ்ந்த சமூகம் ஏற்கனவே வேறு பாரிய வளர்ச்சி கண்ட நாகரீகப் பின்னணியில் இருந்து வந்து சிந்துவெளியில் குடியேறி இருக்க வேண்டும்.

  எப்படியெனில் இங்கிலாந்துப் பழைய நாகரிகத்திலிருந்து அமெரிக்கா, கனடா, ஒஸ்ரேலியா போன்ற நாடுகளுக்குச் சென்ற புதிய குடியேற்றச் சமூகம் அங்கங்கு இங்கிலாந்து நகர அனுபவங்களைக் கொண்டு புதிய நகரக் கட்டமைப்பைச் சிறப்பாக அமைத்துக்கொண்டதைப் போலாகும்.

  இதுவரை நாம் பார்த்த ஆதாரங்களை வைத்து நோக்கும் போது சுமேரிய நாகரிகத்திலிருந்து இடப்பெயர்வின்போது வந்து குடியேறியவர்கள் தான் சிந்துவெளி நாகரிக சமூகம் என்பது வெளிப்படையாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

  சுமேரியர் :8000 BC - 2400 BC

  சிந்துவெளி : 2350 BC - 1700 BC

  தமிழ்நாடு : 1700 BC – Now

   சிந்துவெளி நாகரிகத்தில் ஏன் கணிதப் பதிவுகளோ அல்லது எழுத்துப் பதிவுகளோ காணப்படவில்லை? விவசாயமும் வணிகமும் சிறப்படைந்து இருந்த சிந்துவெளி நாகரீகத்தில் கணிதம் தொடபான பதிவுகளோ எழுத்துத் தொடர்பான பதிவுகளோ மிக அரிதாகவே காணப்படுகின்றது. ஆனால் வியாபார முத்திரைகள் காணப்படுகின்றன.

  சுமேரிய நாகரீகத்தில் இயல்பாகவே களிமண் படுக்கைகள் பறந்து காணப்பட்டதால் களிமண் தட்டுக்களில் எழுத்துக்களையும் கணக்குவழக்குகளையும் பதிவு செய்து பழகிய சமூகம் சிந்துவெளிக்கு இடம்பெயர்ந்தபோது அங்கு மணல் ஆறு தவிர பெரும்பான்மையான நிலங்கள் களிமண் அல்லாத மண்ணாக இருந்தபடியால் மாற்று ஊடகத்தைக் கண்டுபிடிப்பதற்கான தேடலில் பல காலங்கள் கடந்திருக்கலாம்.

   இந்நிலையில் செப்புத் தகடுகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. ஆனாலும் இது போதியளவு பரவலாக்கத்துக்கு ஏற்றதாக அமையவில்லை. இதனால் சுருக்கப்பட்ட முத்திரை வடிவங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.இதன் பின்னரே ஓலைகள், மரங்கள் முதலியவற்றில் பதிவுசெய்யும் பாரம்பரியம் ஏற்பட்டிருக்கும்.

   பருவகாலங்களும் நாள்கொல்களின் அவதானிப்பும்.

  சிந்துவெளியில் காணப்படுகின்ற சித்திரங்கள் திதிச் சுழற்சி பற்றிய குறியீடுகளைக் கொண்டதாகும். திதி என்றால் சந்திர சூரிய சுழற்சி இடைவெளிகளை வைத்து நாட்களைக் கணிப்பது. இத்துடன் கோள்களின் நகர்வுகள் பற்றிய அறிவும் அவர்களிடம் இருந்திருக்கின்றது. ஆனால் இவற்றின் தோற்றம் வளர்ச்சி பெற்ற சமூகத்திலிருந்து தான் வந்திருக்க முடியும். இதை உற்றுநோக்கினால் சுமேரிய நாகரீகத்தின் தொடர்ச்சியே இது என்பதை விளங்கிக் கொள்ள முடியும். இன்றுவரை பயன்படுத்தப்படும்

  கால அளவைகளான 60 செக்கன், 60 நிமிடம், 24 மணித்தியாலம், 7 நாட்கள், 12 மாதங்கள், லீப் வருடம் உட்பட ஆண்டுக் கணக்குகள் எல்லாமே சுமேரியரின் கால அளவைகளாகும்.

  சிந்துவெளிக்குப் பின்னர் தென்னிந்தியாவிற்கு இடம்பெயர்ந்தபோது ஆரம்பகாலக் கோவில்கள், கட்டடங்கள் செங்கற்களாலேயே கட்டப்பட்டன. பின்னரே கருங்கல்லின் பயன்பாடு கண்டுபிடிக்கப்பட்டு அதன் நிலையான தன்மை கருதி கருங்கற்களால் கோவில்கள் கட்டப்பட்டன. செங்கல்லின் தொடர்ச்சிதான் தமிழரின் 7000 ஆண்டுகள் தொன்மையையும் சுமேரிய தோற்றத்தின் தொடர்ச்சியையும் உறுதி செய்கிறது. இத்துடன் நீர்ப்பாசன முறைகளும் அதன் உத்திகளும் சுமேரிய நாகரிக காலத்தில் இருந்து தமிழ் மன்னர்களின் திட்டங்கள் வரை தொடர்ச்சியாக இருப்பதும் 7000 ஆண்டுகள் தொன்மைக்குச் சான்று பகிர்கின்றன.

  சுமேரியர் காலத்திலிருந்து கோயில்கள் கட்டுவது(சிகரம் zigurat) இன்றைய தமிழர் வரை அவர்கள் பண்பாட்டு விழுமியங்களில் ஒன்றாக இருக்கிறது. இதுவும் சுமேரிய வழித்தோன்றல்களின் தொடர்ச்சியை உறுதி செய்கிறது.

  இந்த ஆய்வு முயற்சியின் முக்கியத்துவம்

  எழுதிப் பதிவு செய்யப்படாத, மறைக்கப்பட்ட இந்தியத் துணைக் கண்டத்துக்கும் இந்திய வரலாறுக்கும் உட்படாத உலகத்தின் மூத்த குடியான தமிழரின் வரலாற்றையும் தொன்மையையும் வெளிக்கொண்டு வருவதே இந்தப் பிராந்திய எல்லை தாண்டிய ஆய்வு முயற்சியின் நோக்கமாகும். இதன் முதற்கட்டமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சுமேரிய தமிழ் தொன்மைபற்றிய ஆய்வுப்பீடம் ஒன்று அமைய ஊக்குவிப்பதே ஆகும்.

   இதற்கான முன்னெடுப்பை வடமாகாணசபையின் அனுசரணையுடன் யாழ் பல்கலைக்கழகம் மக்களின் விழிப்புணர்வுக்கும் புரிதலுக்கும் கொண்டுவர, அறிவுசார் சமூகத்தினரின் ஆதரவைத் திரட்டுவதாகும். அடுத்த கட்டமாக பிரித்தானிய கல்வித் திணைக்களத்திற்கு தமிழர்களே சுமேரியரின் நேரடி வழித்தோற்றல்கள் என்பதற்கான சான்றுகளையும் உண்மைகளையும் எடுத்துரைத்து இவற்றைப் பாடத் திட்டங்களில் இணைத்துக்கொள்ள வேண்டுகோள் விடுத்தல் ஆகும்.

   இதுவரை காலமும் பாடத்திட்டங்களில் சுமேரிய மொழியும், இனமும் சரித்திரத்தில் தொடர்ச்சியற்றுப் போய் வேறு எங்கும் தடயங்கள் கிடைக்கப்பெறவில்லை.

  முதன்முதலில் நாகரீகமடைந்த மனிதகுலச் சனத்தொகை, மற்றைய கற்கால இனத்தைவிட பலமடங்கு அதிகமாகவே இருந்திருக்கும். இதை மேற்குலகு அறியாமலா இருக்கும். அதற்கான காரணம் அவர்களின் இனவாதக் கொள்கையே. தொன்மையான இனத்தின் சாதனைகளையும் அதுதொடர்பான கண்டுபிடிப்புக்களையும் உரிமைகோரவிடாது தடுப்பதற்கும் இது ஏதுவாகிறது.

   இது உலகின் ஆளும் வர்க்கத்துக்கு சார்பான வகையில் அமைந்த மூடிமறைப்பாகும். ஏனெனில் சுமேரியருக்கும் தமிழருக்கும் உள்ள அடையாளத் தொடர்புகள் வெள்ளிடை மலையாகவே உள்ளன.

  உலகம் இன்றைய நாகரீகத்தின் வளர்ச்சிக்குரிய அடிப்படைப் பாரிய கண்டுபிடிப்புக்களை சுமேரிய நாகரிகத்திடமே கடன் வாங்கியுள்ளது. மேற்குலகம் தமது நாகரிகத்தின் மூலம் சுமேரிய நாகரீகம் என்று

  குறிப்பிடுகின்ற அதே சமயம் தமிழருக்கும் சுமேரிய இனத்துக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பையும் ஒற்றுமையையும் குறிப்பிடவோ கூர்ந்து நோக்கவோ இல்லை. அல்லது திட்டமிட்டே மறைத்துள்ளது. இதை நிரூபிப்பதே இக்கட்டுரையின் முக்கியமான நோக்கமாகும். அவ்வாறு நிரூபிக்கும் போது முழு உலகும் தமிழரின் தொன்மையை ஏற்றுக்கொள்ளவேண்டிய நிலை ஏற்படும்.

  இதை ஆங்கிலத்தில்

  " History bigin with Summer"

  " Summerians are Inventers and the Builders",

  " The world has owe everything to Summerians"

  [Message clipped]  View entire message

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
சட்டம்
தமிழகச் செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort