சோழ மன்னர்களின் பட்டியல்,
 • சோழ மன்னர்களின் பட்டியல்,

  தொகுப்பு.மார்க்கண்டு தேவராஜா(LLB)MP-TGTE-Zurich-Switzerland.சூரியன், சந்திரன் அக்கினி எனும் முச்சுடர்களின் குமாரர்களாய் உலகந்தோன்றிய காலத்தே தோன்றிய சூரியகுமரன், சந்திரகுமரன், அக்கினிகுமரன் என்பவர்களும் அவர்களின் மரபினரும் பிற்காலங்களில் சோழர், பாண்டியர் மற்றும் சேரர் என்று அழைக்கப்பட்டனர்.சூரிய மரபினர் ஆண்ட பூமிக்கு சோழர் நாடு எனவும், சந்திர மரபினர் ஆண்ட பூமிக்கு பாண்டியர் நாடு எனவும், அக்கினி மரபினர் ஆண்ட பூமிக்கு சேரமண்டலம் எனவும் அழைக்கபெற்றார்கள்.
  முற்காலச் சோழர்கள்
  இளஞ்சேட்சென்னி
  கரிகால் சோழன்
  நெடுங்கிள்ளி
  நலங்கிள்ளி
  கிள்ளிவளவன்
  கோப்பெருஞ்சோழன்
  கோச்செங்கண்ணன்
  பெருநற்கிள்ளி

  மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848

  இடைக்காலச் சோழர்கள்
  விசயாலயச் சோழன்கி.பி. 848-871(?)
  ஆதித்தச் சோழன்871-907 CE
  பராந்தகச் சோழன் Iகி.பி. 907-950
  கண்டராதித்தர்கி.பி. 949/50-957
  அரிஞ்சயச் சோழன்கி.பி. 956-957
  சுந்தர சோழன்கி.பி. 956-973
  ஆதித்தக் கரிகாலன்கி.பி. 957-969
  உத்தம சோழன்கி.பி. 970-985
  இராசராசச் சோழன் Iகி.பி. 985-1014
  இராசேந்திரச் சோழன்கி.பி. 1012-1044
  இராசாதிராசச் சோழன்கி.பி. 1018-1054
  இராசேந்திரச் சோழன் IIகி.பி. 1051-1063
  வீரராசேந்திரச் சோழன்கி.பி. 1063-1070
  அதிராசேந்திரச் சோழன்கி.பி. 1067-1070

  சாளுக்கிய சோழர்கள்
  குலோத்துங்கச் சோழன் I .கி.பி. 1070-1120
  விக்கிரமச் சோழன்கி.பி. 1118-1135
  குலோத்துங்கச் சோழன் IIகி.பி. 1133-1150
  இராசராசச் சோழன் IIகி.பி. 1146-1163
  இராசாதிராசச் சோழன் IIகி.பி. 1163-1178
  குலோத்துங்கச் சோழன் IIIகி.பி. 1178-1218
  இராசராசச் சோழன் IIIகி.பி. 1216-1256
  இராசேந்திரச் சோழன் IIIகி.பி. 1246-127

  வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள்!

  இந்திர விழா காண்பதற்கு, வட சேடியிலிருந்து வித்யாதரத் தம்பதியர்வந்தனர் என்று பார்த்தோம். புகார் நகரில் நடக்கும் இந்திர விழாவில்என்னவெல்லாம் காணலாம் என்று வித்யாதரன் தன் காதலிக்குச் சொல்லிக் கொண்டு வருகிறான். அப்படி அவன் சொல்லும் ஒரு இடம்நாளங்காடி என்னும் ஒரு கடைத்தெரு. அந்தக் கடைத் தெருவில்நாளங்காடிப் பூதம் என்னும் பூதம் குடி கொண்டுள்ளது. பூதம் என்றால் ஏதோ பேய், பிசாசு என்றோ, அதனால் அது ஒரு மூட நம்பிக்கை என்றோ நினைக்க வேண்டாம். வழி வழியாக சோழநாட்டு மக்கள் அதனை வணங்கி வந்துள்ளனர். தெய்வ சக்தி கொண்ட ஒன்றாக அது இருக்கவே, அதற்கு மக்கள் பொங்கலிட்டு, பூஜை செய்து வணங்கி வந்தனர். இதனைஇளங்கோவடிகள் இந்திர விழாவூரெடுத்த காதையில் விவரித்துள்ளார். அந்தப் பூதம் அங்கு வந்த கதையை, வித்யாதர இளைஞன் தன் காதலிக்கு விவரிக்கிறான். அந்தக் கதையில் இந்திரன் தொடர்பு வருகிறது.

  ஒரு முறை தேவலோகத்திலிருந்த அமிர்தம் கவர்ந்து செல்லப்பட்டது. அதை மீட்டுக் கொண்டு வர தேவர்களுக்குத் தலைவனான இந்திரன் செல்கிறான். அவன் இல்லாத நேரத்தில் அவனது ஊரான அமராபதியை,அசுரர்கள் தாக்கக்கூடும் என்று கருதி, பாதுகாப்புக்கு யாரை வைக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, முசுகுந்தன் என்னும் அரசன்,தான் காப்பதாகக் கூறினான். அவனைக் காவலுக்கு வைத்த போது,கூடவே, அவனுக்குப் பக்கபலமாக ஒரு பூதத்தை நிறுவினான் இந்திரன்.

  எதிர்பார்த்தது போல அசுரர்கள் அமராபதியைத் தாக்கினார்கள்.அவர்களால் அந்த நகரம் இருள் அடைந்தது. அப்பொழுது அந்தப் பூதம் இருள் நீக்க உதவியது. அதனால் முசுகுந்தன் அசுரர்களை வெல்ல முடிந்தது. திரும்பி வந்த இந்திரன் நடந்ததைக் கேள்விப்பட்டான். பூதம் முசுகுந்தனுக்கு உதவியதை அறிந்து மகிழ்ந்து, அந்தப் பூதத்தை முசுகுந்தனுக்கே அளித்து விட்டான். அப்படி பெறப்பட்ட பூதத்தைப் புகார் நகரில் நிறுவினான். அந்தப் பூதமே நாளங்காடிப் பூதம் எனப்பட்டது.

  இங்கு சில கேள்விகள் வருகின்றன. தான் பெற்ற பூதத்தைப் புகார் நகரத்தில் நிறுவினதால், முசுகுந்தனுக்கும், புகாருக்கும் என்ன தொடர்பு?முசுகுந்தன் யார்?
  சோழன் நகரமான புகாரில் அவனுக்கு என்ன வேலை?

  முசுகுந்தனைப் பற்றி மகாபாரதத்தில் விவரங்கள் இருக்கின்றன. அவன் ராஜ ரிஷியாகவும், பல நாடுகளைத் தன் கீழ் கொண்டு வந்த சக்கரவர்த்தியாகவும் போற்றப்படுகிறான். அவனுடன் சம்பந்தப்பட்ட இடங்கள் எல்லாம் கங்கைக் கரையில் இருக்கின்றன. அவனுக்கும் புகார் நகருக்கும் என்ன தொடர்பு என்று பார்த்தால், நாளங்காடிப் பூதத்தைப் பெற்ற விதத்தை, ‘அமரனிற் பெற்று, தமரில் தந்து” என்கிறது சிலப்பதிகாரம். அதாவது, அமரன் என்று சொல்லபப்டும் இந்திரனிடமிருந்து பெற்றதை, முசுகுந்தன் தன் தமருக்கு, அதாவது தன்னைச்சேர்ந்தோருக்குத் தந்தான் என்று பொருள் அமைகிறது. அதாவது சோழர்கள் முசுகுந்தனுடன் தொடர்புடையவர்கள் என்று தெரிகிறது. அந்தத் தொடர்பு என்ன என்பது
  1905 -ஆம் வருடம் திருவாலங்காடு என்னும் இடத்தில்கண்டெடுக்கப்பட்டுள்ள செப்புத் தகடுகளின் மூலம் தெரிகிறது.

  சமீபத்தில் விழாக் கண்ட தஞ்சை பெரிய கோவிலைக் கட்டிய ராஜ ராஜ சோழனின் மகனான முதலாம் ராஜேந்திர சோழன் ஆட்சிக் கட்டில் ஏறியஆறாம் ஆண்டு எழுதப்பட்டவை அவை. பல கோவில்களுக்குக் கொடுக்கப்பட்ட தானங்களைக் குறிக்கும் அந்தத் தகடுகளில், சோழர் வம்சாவளி எழுதப்பட்டுள்ளது. இன்றைக்கு நாம் அறிந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள். சிலப்பதிகாரம் நடந்த காலத்துக்குப் பிறகு வந்தவர்கள். ஆனால் சோழர் வம்சம், பல்லாயிரக் கணக்கான ஆண்டுகள் முன்னால் எங்கோ நீண்டு கொண்டே போகிறது. அப்படிச் செல்லும் வம்சத்தில், முசுகுந்தனைப் பற்றியும் அந்த ஏடுகளில் எழுதப்பட்டுள்ளன. எல்லாவற்றையும் விட அரிய செய்தி,
  எந்த மனு தர்மத்தை இன்று திராவிட விரும்பிகள் சாடுகிறார்களோ, அந்த மனுவின் பரம்பரையில் வந்தவர்கள் சோழர்கள்!

  செப்பேடுகளில் கொடுக்கப்பட்டுள்ள வம்சாவளிகள் (1)
  சூரியன்
  மனு
  இக்ஷ்வாகு
  விகுக்ஷி
  புரஞ்சயன்
  இக்ஷ்வாகு
  ககுஸ்தன்
  அர்யமன்
  அனலப்ரதாபன்
  வேணன்
  ப்ரித்து
  துந்துமாரன்
  யுவனாச்வன்
  மாந்தாதா
  முசுகுந்தன் (இவனே நாளங்காடிப் பூதத்தைஇந்திரனிடமிருந்து பெற்றவன்)
  வல்லபன்
  ப்ரிதுலக்ஷன்
  பார்திவசூடாமணி
  தீர்கபாஹு
  சந்த்ரஜீத்
  சங்க்ருதி
  பஞ்சபன்
  சத்யவ்ரதன் (ருத்ரஜீத் எனப்பட்டான். இந்தப்பெயர்களுக்கெல்லாம் காரணம் இருக்கிறது )
  உசீனரன்
  சிபி (இவனே புறாவுக்காகத் தன் தசையை அரிந்துகொடுத்தவன். இவனை முன்னிட்டே , சோழர்கள்தங்களைச் ‘செம்பியன்’ என்றழைத்துக் கொண்டனர்.)
  மருத்தன்
  துஷ்யந்தன்
  பரதன்
  சோழவர்மன் (இவன்தான் தமிழகத்தில் சோழ நாட்டைஸ்தாபித்து, சோழர்கள் ஆட்சியை ஆரம்பித்து வைத்தான்.)

  ராஜகேசரிவர்மன்
  பரகேசரி
  சித்ரரதன்
  சித்ரச்வன்
  சித்ரதன்வன் (இவன் காவேரி ஆற்றைக் கொண்டு வந்தவன்என்கிறது செப்பேடு )
  சுரகுரு
  வ்யக்ரகேது (த்ரேதா யுகத்தின் கடைசி மன்னன்.இவன்தான் புலிச் சின்னத்தை சோழர்கள் கொடியில் பொறித்தவன்.)

  இது வரை வரும் வம்சாவளியில், நாம் கவனிக்க வேண்டிய விவரங்கள்
  சோழ நாடு ஸ்தாபிக்கப்படட் போது காவேரி என்னும் நதியே நாட்டில் ஓடவில்லை என்று தெரிகிறது. அப்படி என்றால் சோழ நாட்டின் தொன்மை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்! கி-மு- 1.500 -வந்ததாகச் சொல்லப்படும் சிந்து சமவெளி மனிதன் எங்கே, மலை தோன்றியும், நதி தோன்றாத காலத்திலேயே நகரம் நிர்மாணித்த சோழ வர்மன் எங்கே! எது தொன்மை வாய்ந்தது?
  மனு, இக்ஷ்வாகு போன்றவர்கள் வம்சத்தில், மிக மிக முற்காலத்தில் முசுகுந்தன் வந்திருக்கிறான். அப்பொழுது அவன் பெற்ற பூதத்தை அப்போழுதேயோ அல்லது, பிற்காலத்தில் அவன் சந்ததியர் தமிழகப் பகுதியில் சோழ நாட்டை நிர்மாணித்த போதோ , புகார் நகரில் நாளங்காடிப் பூதம் என்று ஸ்தாபித்திருக்கின்றனர். அதைதான் இளங்கோவடிகள் ‘அமரனில் பெற்று, தமரிற் தந்து’ என்றிருக்கிறார். தெய்வமும், வழிபாடும் பகுத்தறிவல்ல என்னும் திராவிட விரும்பிகள் என்ன சொல்லப்போகிறார்கள்? சோழ நாடு ஸ்தாபிக்கப்படுவதற்கு முன்னமேயே, அங்கே வணங்கப்போகும் தெய்வம் வந்து விட்டது. முசுகுந்தச் சகக்ரவ்ர்த்தி முதல், புகார் மக்களையும் சேர்த்து, இன்று வரை கோடானுகோடி தமிழர்கள் தெய்வ வழிபாட்டில் ஈடுபட்டு இருக்கிறார்கள். இத்தனைக் கோடி மக்களும் முட்டாள்களா? அல்லது அவர்களது தெய்வ நம்பிக்கையை இழித்தும் பழித்தும் பேசியும் வந்தது மட்டுமல்லாமல், தொன்மை வாய்ந்த தமிழனின் மூலத்தையே சந்தேஹப் பட்டு, சிந்து சமவெளியில் அந்த மூலத்தைத் தேடும் இந்த திராவிட விரும்பிகள் முட்டாள்களா?
  இது வரை சொன்னது த்ரேதா யுகம் வரை வந்த வம்சாவளி என்று செப்பேடுகள் சொல்கின்றன. நிச்சயமாக இவர்கள் லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தவர்கள் இல்லை. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இருந்திருக்கலாம் எனலாம். யுகக் கணக்கு என்பது வேறானது என்றும் தெரிகிறது. அந்தக் கணக்கு என்ன என்பதை இந்தத் தொடரில் பிறகு பார்க்கலாம். இது வரை சொல்லப்பட்ட செய்திகளைக் கொண்டு, காவேரி நதி ஆரம்பித்த காலத்தை அறிவியல் முறைகள் மூலம் நிர்ணயம் செய்தால், மிகச் சரியாக சோழர்களது ஆரம்பமும்,. அதன் மூலம் தமிழனது தொன்மையையும் கணக்கிடலாம்.

  இனி அந்தச் செப்பேடுகள் தொடர்ந்து சொல்லும் வம்சாவளியைப் பார்ப்போம்.
  த்ரேதா யுகம் முடிந்ததும் நரேந்த்ரபதி என்னும் மன்னன் ஆட்சிக்கு வந்தான். அப்பொழுது நடந்த யுகம் த்வாபர யுகம். அந்த யுகத்தின் முடிவில்தான் கிருஷ்ணன் அவதரித்தான். மகாபாரத யுத்தம் நடந்தது.

  இந்தச் செப்பேடுகளும் சோழ பரம்பரையைப் பற்றி இந்த யுகத்தில் அதிகம் சொல்லவில்லை. ஆனால், நாம் ஆச்சரியப்படும் வண்ணம், போன கட்டுரையில் பார்த்தோமே, வட சேடியை ஆண்ட உபரிசர வஸு என்னும் மன்னன் – அவனைச் சோழன் மன்னன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  செப்பேடுகள் தரும் இந்த செய்தி சில முடிச்சுகளை அவிழ்க்கிறது.

  மனுவின் பரம்பரையில் வந்த மன்னர்கள் இமயம் முதல், புகார் வரை, ஏன் அதையும் தாண்டி, இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் அண்ணன் தம்பிகளாக இருந்திருக்கலாம். அவர்கள் ஆங்காங்கே திக் விஜயம் சென்று புது இடங்களைத் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும். அப்படி தமிழகப் பகுதிக்கு வந்து தனக்கென நாட்டை ஸ்தாபித்தவன் சோழவர்மன். அவன் பெயரை ஒட்டி சோழ நாடு என்னும் பெயர் வந்திருக்கிறது.

  துவாபர யுகத்திலும், சோழ நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டிருக்க வேண்டும். அல்லது, சேர. பாண்டிய மன்னர்கள் ஆக்கிரமிப்பால், சோழர்கள் பலம் குன்றியிருக்க வேண்டும். மகாபாரதத்தில் வரும் சில விவரங்கள் மற்றும் மகாபாரதக் காலத்தில் தமிழ் நாட்டை ஆண்ட சேர மன்னன் பற்றிய புறநானூற்றுச் செய்யுள் ஆகிய இவற்றை வைத்துப் பார்க்கும் போது, துவாபர யுகத்தில் சோழர்கள் பலம் குன்றி இருந்தனர் என்று தெரிகிறது. அது செப்பேடுகள் சொல்லும் வம்சாவளியிலும் பிரதிபலிக்கிறது.

  சோழர்கள் சகோதர வழி வம்சாவளியாக வட சேடி மன்னர் பரம்பரை இருந்திருக்கக்கூடும். அதனால் உபரிசர வசுவை தங்கள் வம்சாவளியிலும் குறிப்பிட்டிருப்பார். அந்தக் காலக் கட்டத்தில், சோழர்கள் குன்றி இருந்த காரணத்தால், அந்த நேர் வம்சாவளிச் சொல்லாமல், சகோதர வழி வம்சாவளியில் பெயர் பெற்ற மன்னனான உபரி சர வஸுவைப் பற்றி எழுதி உள்ளனர். அந்தத் தொடர்பு மக்கள் வரையிலும் இருந்திருக்க வேண்டும். அதனால்தான், சிலப்பதிகார காலக்கட்டத்தில், அதாவது, இரண்டாயிரம் வருடங்கள் முன்னும்கூட, வட சேடியில் இருந்து மக்கள் புகார் நகருக்கு வந்திருக்கின்றனர். புகார் பற்றிய எல்லாச் செய்திகளும் அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. உபரி சர வஸு பெற்ற இந்திரக் கொடி, மற்றும் இந்திர விழா போன்றவை சோழ நாட்டின் சொத்துக்களாக ஆகியிருக்கின்றன.

  இதிலிருந்து, வடக்கிலிருந்து வந்தவர்கள் சோழர்கள் என்று தெரிகிறது. தண்டமிழ்ப் பாவை காவேரி என்று அகத்திய முனிவரால் போற்றப்பட்ட காவேரி ஆறு பாய்வதற்கு முன்னாலேயே சோழர் ஆட்சி, தமிழ் நாட்டில் இருந்திருக்கிறது.

  பூம்புகாரின் தொன்மை 11,500 ஆண்டுகள்.(The following should be verified and edited)
  மனித வாழ்க்கைக்குத் தொடர்புடைய சப்தரிஷி யுகம் அல்லது லௌகீக யுகம் கி-மு- 17,476 ஆண்டு ஆரம்பித்திருக்கக்கூடிய சாத்தியக் கூற்றினைப் பார்த்தோம். அது உலகெங்கும் உள்ள ஆராய்ச்சியாளர்கள் ஒத்துக்கொண்டுள்ள பனியுகம் முடிந்த காலத்துடன் ஒத்துப் போகிறது என்ற ஆச்சரியமான உண்மையையும் பார்த்தோம். அதன் தொடர்பாக நம் தமிழ் மண்ணிலும் சில ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதில் முக்கிய ஆதாரம் பூம்புகார்!

  இந்தத் தொடரில் இந்திரன் சம்பந்தப்பட்ட விவரங்களில்தான் நாம் இன்னும் இருக்கிறோம். இந்திரன் சம்பந்தப்பட்ட இடம் புகார் நகரமாகும். அங்கு நடந்து வந்த இந்திர விழா குறித்த தமிழ் ஆதாரங்களைப் பார்க்கும்போது, போனஸாக பல விவரங்களும் கிடைக்கின்றன. அப்படிக் கிடைத்ததுதான், முசுகுந்தனும், மனுவில் ஆரம்பித்த சோழ பரம்பரையும், சோழர்கள் கொண்டாடிய சிபியின் உறவு முறையில் வரும் ராமனும்.

  அவர்களைப் பற்றிய விவரங்களைப் பார்க்கும் போது, அவர்கள் வாழ்ந்த காலம் பற்றிய விவரங்கள் நமக்குக் கிடைத்தன. அதை ஆராய்ந்தபோது யுகங்களைப் பற்றியும், ராமன் வாழ்ந்திருக்ககூடிய காலத்தைப் பற்றியும் கண்டோம். அப்படிக் கண்டபோது நமக்குக் கிடைக்கும் விவரம், பனியுகம் பற்றியது.

  பனியுகம் (Ice Age) என்றால் என்ன என்பதைப் பற்றி சுருக்கமாக அறிந்து கொண்டால், மேற்கொண்டு சில விவரங்களைப் பார்க்க நமக்கு உதவியாக இருக்கும்.

  பூமி தன் அச்சில் தற்சமயம் 23-1/2 டிகிரி சாய்ந்துள்ளது. இப்படி சாய்ந்து இருக்கவேதான் பருவங்கள் மாறி மாறி வருகின்றன. பூமியின் சுழற்சியின் காரணமாகவும், சுற்றியிருக்கும் கிரகங்களது இழுப்பு சக்தியின் காரணமாகவும் இந்த சாய்வு மெதுவாக வேறுபடுகிறது. இந்த வேறுபாடு 22 டிகிரி முதல் 25 டிகிரி வரை ஆகிறது என்று அறிவியலார் கூறுகின்றார்கள். இந்த இரு நிலைகளும் இடையே சுமார் 41,000 ஆண்டுகள் ஆகின்றன என்கிறார்கள், இதனுடன், சூரியனின் பின்னோக்கு இடப்பெயர்வும் (Precession ), சூரியனைச் சுற்றி பூமி செல்லும் பாதையில் ஏற்படும் மாற்றங்களும், பூமியில் நிலவும் தட்ப வெப்ப நிலையில் சில மாறுதல்களை உண்டாக்குகின்றன. அதனால் குறிப்பிட்ட அட்ச ரேகைப் பகுதிகளில் படிப்படியாக குளிர் அதிகமாகி பனி படிய ஆரம்பிக்கிறது.

  பனிப்பாறைகளாக இருக்கும் இப்படிப்பட்ட நிலை பல்லாயிரக்கணக்கான வருடங்கள் நீடிக்கும் . அப்படி பனி நீடிக்கும் காலத்தைப் பனி யுகம் என்கிறார்கள். ஆனால் பனி யுகம் என்றுமே இருந்து விடாது. பூமியின் சாய்மானம், சுழற்சி என்று முன் சொன்ன காரணங்கள் மாறி மாறி வருவதால், சூரிய ஒளி அதிகம் பட ஆரம்பித்து, பனி உருக ஆரம்பிக்கும். இப்படிப் பனி உருக ஆரம்பித்தது, 17,000 – 20,000 ஆண்டுகளுக்கு முன்னால் ஆரம்பித்தது என்று கணித்துள்ளனர். இனி வரப்போகும் காலத்தில், இன்றைக்கு 50,000 வருடங்களில், மீண்டும் பனியுகம் ஆரம்பிக்கும் என்கிறார்கள்.

  சூரிய வெப்பம் பூமியின் மீது விழ விழ, பனி உருக ஆரம்பிக்கிறது. அதனால், அதுவரை வெளியில் தெரியாத நிலப்பகுதிகள் தெரிய வரும். புது நதிகளும் தோன்றலாம். அப்படித் தோன்றிய ஒரு நதி, கங்கை ஆகும். கங்கோத்ரி என்னும் பனிக் கருவிலிருந்து, பனி யுகம் முடிந்த பின் கங்கை உருகி வர ஆரம்பித்தது.

  இவ்வாறு பல ஆறுகள் பெருக்கெடுக்கவே, அவை சேரும் கடல் மட்டமும் அதிகரிக்கிறது. பனி யுகம் முடிந்த காலம் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதும்,இன்றைக்கு 17,000 ஆண்டுகளிலிருந்து 7,000 ஆண்டுகளுக்குள், உலகெங்கும் பல இடங்களில் கடலோரப் பகுதிகள் கடலுக்குள் முழுகி விட்டன.
  இன்றைக்கு இருக்கும் அமெரிக்காவின் அளவுக்கு ஆங்காங்கே நிலப்பகுதிகளைக் கடல் கொண்டு விட்டது என்று க்ரஹாம் ஹான்காக்(Graham Hancok) என்னும் ஆழ் கடல் ஆராய்சியாளர் கருதுகிறார்.

  இப்படி கடல் மட்டம் ஏறின விவரங்களை ஆராய்ச்சி செய்துள்ளார் க்லென் மில்னே (Glenn MIlne) என்னும் ஆராய்ச்சியாளர்.
  அவர்கள் கூறும் விவரப்படி, இந்தியாவின் பரப்பளவுக்குச் சமமான அளவு ஆஸ்திரேலியப் பகுதியில் நிலப்பரப்பு கடலுக்குள் அமிழ்ந்து விட்டது.
  அது போல தென் கிழக்கு ஆசியா – அதாவது இந்தோனேசியா, இந்தியாவின் தெற்கில் உள்ள இந்தியப் பெரும்கடல் பகுதியிலும், இந்தியாவின் பரப்பளவு அளவுக்கு நிலப்பகுதி கடலுள் மறைந்து விட்டது என்கிறார்கள்.
  இதை ஒரு ஹேஷ்யமாக அவர்கள் சொல்லவில்லை.
  கடலின் ஆழம், பனி யுகம் முடிந்து கடல் மட்டம் உயர்ந்த விவரங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் உலகெங்கும் கடல் பகுதி, கடலோரப்பகுதில் உள்ள கடலின் ஆழம் ஆகியவற்றை அளந்து கொண்டு வருகிறார்கள்.
  அதில் நம் இந்தியப் பகுதியைப் பொருத்தமட்டில், மேற்சொன்ன இடங்களும்,துவாரகை இருக்கும் குஜராத் பகுதியும் அடங்கும்.

  அப்படி அவர்கள் காட்டும் ஒரு இந்தியப் பகுதி பூம்புகாரை ஒட்டியுள்ள கடல் பகுதி ஆகும். இன்றைக்கு இருக்கும் பூம்புகார் நிலப்பகுதியிலிருந்து கடலுக்குள் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில், 70 அடி ஆழத்தில் U – வடிவில் குதிரையின் லாடம் போன்ற அமைப்பைக் கண்டு பிடித்துள்ளார்கள்.

  அதன் மொத்த நீளம் 85 மீட்டர்.
  ‘U’ அமைப்பின் கை போன்ற இரு அமைப்புகளின் இடையே உள்ள தூரம் 13 மீட்டர். இந்த அமைப்பின் உயரம் 2 மீட்டர்.
  கை போன்ற அமைப்புப் பகுதி துண்டு துண்டான கற்களால் ஆனது போல இருக்கிறது. இயற்கையில் இந்தஅமைப்பு தானாகவே இருக்க முடியாது.
  இதை ஆராய்ச்சி செய்தவர்கள் இப்படி வரைபடமாகக் காட்டியுள்ளார்கள்.
  இதைப் படம் பிடித்து 2001 – ஆம் ஆண்டுவாக்கில் இங்கிலாந்தில் தொலைக்காட்சியில் காட்டினார்கள். (Photograph not available with me)

  இந்த அமைப்பு ஒரு கோவிலின் சுவராகவோ, அல்லது ஏதேனும் ஒரு கட்டுமானத்தின் அடித் தளமாகவோ இருக்கலாம் என்று நினைக்கிறார்கள்.
  இந்த அமைப்பு இருக்கும் இடம் ஒரு காலத்தில் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும்.
  க்லென் மில்னே அவர்களது கடல் மட்டக் கோட்பாட்டின் படி அந்த இடம் 11,500 ஆண்டுகளுக்கு முன் நிலப்பரப்பாக இருந்திருக்க வேண்டும்.
  அதாவது 11,500 ஆண்டுகளுக்கு முன் அதைக் கடல் கொண்டிருக்க வேண்டும்.

  அவர் சொல்லும் காலக் கட்டம் எத்தனை பழமை!
  எந்த ஆங்கிலேயர்கள் ஜெர்மானிய மாக்ஸ் முல்லர் துணையுடன், இந்தியாவின் தொன்மையை அழிக்க முற்பட்டார்களோ, தங்கள் மூதாதையரான ஆரியர்களே இந்தியாவில் 3,500 ஆண்டுகளுக்கு முன் புகுந்து, இன்றைக்கு இந்தியா எங்கும் பரவி விட்டனர் என்றார்களோ, அந்த ஆங்கிலேய நாட்டைச் சேர்ந்தவர்களான இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இன்று உலகெங்கிலும் கண்டுபிடிக்கப்பட்ட மனித நாகரீகத்திலேயே, மிகவும் தொன்மை வாய்ந்தது, இங்கே தென்னிந்தியாவில் இருக்கும் பூம்புகாரில்தான் என்கிறார்கள்.
  இதுதான் இயற்கையின் நீதி (Natural Justice ) என்பதோ!
  அது மட்டுமல்ல. அவர்களது இந்த ஆராய்ச்சியை நமது நாட்டு ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்கள் (NIO) முன்னிலையில் சொல்லி உள்ளார்கள். ஆனால் அப்போதைய அதன் தலைவர் (Dr A.S. Gaur) இதெல்லாம் சாத்தியமில்லை என்று சொல்லி விட்டார்.
  லாட வடிவிலான அந்த அமைப்பைச் செய்ய உயர்ந்த டெக்னாலஜி தேவை.
  11,500 ஆண்டுகளுக்கு முன் அந்த அளவு அறிவு கொண்ட மக்கள் இங்கு வாழ்ந்ததாக ஆதாரம் இல்லை என்று சொல்லி விட்டார்!!

  இதைக் கேட்டு அந்த ஆராய்ச்சியாளர்கள் மட்டுமல்ல, இந்திய சரித்திரத்தை ஆராயும் டேவிட் பிராலே (David Frawley) போன்றவர்களும் நொந்து போய் இருக்கிறார்கள்.

  எத்தனை விஷயங்கள் இந்த நாட்டில் இருக்கின்றன!
  எத்தனை விஷயங்களில் நாம் முன்னோடிகளாக இருக்கிறோம்!
  ஆனால் அவற்றைப் பற்றிய எந்த அறிவும், விழிப்புணர்வும் இல்லாமல் நாம் இருக்கிறோம்.
  நாம் தானே இதை எல்லாம் முன் நின்று சொல்ல வேண்டும்.
  அதை விட்டு விட்டு கேவலம், 3,500 வருடங்களுக்கு முன் ஆரியன் வந்தானாம்,
  அவன் விரட்டி விடவே, தமிழ் நாட்டுக்கு வந்தோமாம்
  என்று கதை பரப்பிக் கொண்டு,
  அதன் அடிப்படையில் எவனைத் திட்டலாம்,
  அதில் என்ன ஆதாயம் சம்பாதிக்கலாம் என்று பார்க்கும் திராவிடவாதிகளின் பசப்பில் மக்கள் மயங்கி கிடக்கிறார்கள்.
  நம்மிடம் ஆதாரமா இல்லை?
  நம் தமிழ் நூல்கள் சொல்லாத பழம் பெரும் நாகரீகமா?
  அந்த ஆதாரங்களை நாம் பார்ப்போம்

  புகாரின் பழமையும், காவேரியின் தோற்றமும்.
  புகார் நகரத்தின் பழமையைப் பற்றிய குறிப்புகள், ஐம் பெரும் காப்பியங்களுள் ஒன்றான மணிமேகலையில் வருகிறது.

  மணிமேகலையின் பதிகச் செய்யுள் புகார் நகரைப் பற்றியே ஆரம்பிக்கிறது.முதல் 32 வரிகளில், புகாரின் தொன்மை விளக்கப்படுகிறது. முதலில் ‘தீவத் தெய்வம்’ என்னும் தெய்வத்தைப் பற்றிய விவரம் வருகிறது. தீவத் தெய்வம் என்றால் தீவின் தெய்வம் என்று பொருள். இங்கு எங்கே தீவு இருக்கிறது என்ற கேள்வி எழுகிறது. இங்கு சொல்லப்படும் தீவு, நாவலம் தீவு!

  நாவலம் தீவு என்பது மேரு மலைக்குத் தெற்கில் உள்ளது என்று புராணங்கள் முதலான பல வடமொழி நூல்களிலும் சொல்லப்பட்டுள்ளது. அதே விவரம், மணிமேகலையின் பதிகத்திலும் சொல்லப்படுகிறது . அது மட்டுமல்ல நாவலம் தீவைக் காக்கும் தெய்வமாக ஒரு தெய்வம் புகார் நகரில் கோயில் கொண்ட கதையையும் அது சொல்கிறது. அப்படிச் சொல்லி வரும் போது மற்றொரு முக்கியக் குறிப்பையும் சொல்லி, புகார் நகரின் தொன்மையை விளக்குகிறது. அவை என்ன என்று பார்ப்போம்.

  மேரு மலைக்குத் தென் புறம் உள்ள நாவலம் தீவில், அந்நாளில் மாநில மடந்தைக்கு அசுரர்களால் துன்பம் ஏற்படுகிறது. அந்த அசுரர்களுக்கு அச்சம் உண்டாக்கி, அவர்களை விரட்டி அடிக்க, மேரு மலையிலிருந்து ஒரு பெண் தெய்வம் வந்தது. அந்தத் தெய்வம் சம்பு மரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்து ஆற்றலைப் பெறுகிறது. சம்பு மரத்தடியில் தவம் செய்யவே அந்தத் தெய்வம் சம்பு என்ற பெயர் பெற்றாள். அசுரர்களை விரட்ட அவள் கோயில் கொண்டு அமர்ந்த பதியே ‘சம்பாபதி’ என்ற பெயர் பெற்றது. அதுவே புகார் நகரத்தின் ஆதிகாலப் பெயர் என்று துவங்குகிறது மணிமேகலை. இன்னும் சொல்லப்படும் விவரங்களைப் பார்பதற்கு முன், இது வரை வந்த விவரங்களைப் பார்ப்போம்.

  முதலில் மேரு என்றால் என்ன? அது எங்குள்ளது?
  இந்த விவரங்கள், சரித்திரம் மறந்த நம் நாட்டவர்களுக்குத் தெரியாததால், மணிமேகலை போன்ற பழம் நூல்கள் அவற்றைப் பற்றிச் சொல்லும் போது, ஏதோ கற்பனை, கட்டுக்கதை என்றெல்லாம் அலட்சியப்படுத்தி வந்துள்ளனர்.ஆனால் மேரு மலை பற்றிய குறிப்புகளில் பல அறிவியல் உண்மைகள் புதைத்துள்ளன.

  முதலில் மேரு எங்குள்ளது?
  மேரு என்பதை மந்திர மலை என்றும் கூறுவது உண்டு.
  இந்த மேரு மலையை அச்சாகக் கொண்டு, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு, தேவர்களும், அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தார்கள் என்பது மிகப் பிரபலமான கதை.

  சிலப்பதிகார ஆய்ச்சியர் குரவையில் இந்தக் கதையைக் காண்கிறோம்.
  பரிபாடலிலும் ஆங்காங்கே இந்தக் கதை வருகிறது.
  இப்படிக் கடைந்ததனால் லக்ஷ்மியும், இன்ன பிற செல்வங்களும், அமிர்தமும்,வந்தன. மேருவின் சிகரத்தை சப்த ரிஷி மண்டலம் சுற்றி வருகிறது. தேவர்களுக்குப் பகல் பொழுது வரும் போது, சூரியன் எந்நேரமும் அந்த சிகரத்தில் தெரிவான் என்று இந்தக் கதை கூறுகிறது.

  மேரு என்பது பூமி சுழலும் அச்சு என்கிறது சூரிய சித்தாந்தம் என்னும் நூல்.
  இந்த அச்சின் வடக்கு முனை மேருவின் சிகரம் ஆகும்.
  ஆயிரம் வருடங்களுக்கு முன்பே இந்தியாவின் விண்வெளி அறிவில் முன்னோடியாக இருந்த பாஸ்கரரும், இலங்கை, உஜ்ஜயனி, குருக்ஷேத்ரம் ஆகிய இடங்களை ஒரு கோட்டினால் இணைத்தால் அது முடியும் வட துருவப் பகுதி மேருவின் சிகரத்தைக் குறிக்கும் என்று கூறியுள்ளார்.

  அந்த மேருவைப் பற்றிய கதை ஒரு உருவகமாக உள்ளது.
  பூமி தனது அச்சில் இடை விடாமல் சுழன்று கொண்டிருக்கிறது.
  அதனால், பகலும், இரவும் மாறி மாறி வந்து கொண்டிருக்கின்றன.
  அதாவது ஒளியும் இருட்டும், மாறி மாறி இந்தப் பூமியை இழுப்பது போல காட்சிக்கிறது.

  ஒளியை தேவர்களுக்கும் , இருளை அசுரர்களுக்கும் உருவகப் படுத்துவர்.
  தேவன் என்னும் சொல்லே ‘திவ்’ என்னும் வட மொழிச் சொல்லிலிருந்து உருவானது. ‘திவ்’ என்றால் ஒளி என்று பொருள்.
  ஒளி பொருந்தியவன் எவனோ அவன் தேவன் எனப்படுவான்.
  அல்லது எது ஒளி மயமானதோ அது தேவனுக்கு உருவகமாகும்.

  சூரியன் ஒளி பொருந்தியது.
  சூரியன் என்ற சொல்லிலிருந்து ‘சுரா’ அல்லது ‘சுரன்’ என்ற சொல் உண்டாகிறது.
  எனவே ஒளி பொருந்தியதை ‘சுரன்’ என்றனர்.
  அதன் எதிர்ப்பதம், ‘அ -சுரன்’.
  அசுரன் என்றால் ஒளி இல்லாதவன் என்று பொருள்.

  பூமியின் அச்சை மையமாகக் கொண்டு பகலும், இரவும் மாறி மாறி உலகை இழுக்கும் முறையை, மேரு மலையை அச்சாகக் கொண்டு தேவர்களும், (சுரர்களும்), அசுரர்களும் இழுத்தனர் என்று உருவகப் படுத்தப்பட்டது.
  இதனால், பூமியின் உள்ளே உருகிய நிலையில் இருக்கும், கனிமங்கள், எரிமலைக் குழம்பு போன்றவை அவ்வபொழுது வெளியாகின்றன.
  அவற்றிலிருந்து விலையுயர்ந்த ரத்தினம் முதல், நாம் உபயோகிக்கும் பல பொருட்களுக்கு ஆதாரமான தாதுப் பொருட்கள் வரை எல்லாம் கிடைக்கின்றன.
  இவையே பாற்கடலைக் கடைந்தால் கிடைத்த செல்வம் எனப்பட்டது.
  இதுவே மேரு மலையைப் பற்றிய கதையின் தாத்பரியம்.

  எந்நேரமும் கடைதலால் பூமிக்குள்ளிலிருந்து வந்து கொண்டிருக்கும் உள்-பூமியின் திரவக் குழம்பு. அட்லாண்டிக் கடலின் அடியில் இப்படித் தென்படுகிறது.

  இந்தத் தாத்பரியம் பல விதங்களிலும் உருவகப்படுத்தப்பட்டுள்ளது. ஒளி
  என்பது உயர்ந்த சிந்தனைக்கும், இருள் என்பது கீழ்த்தரமான சிந்தனைக்கும் உருவகமாகிறது.
  ஒளி நல்லவற்றுக்கும், இருள் கெட்டவற்றுக்கும் உருவகமாகிறது.
  அந்த அடிப்படையில், மக்களையும் உருவகப்படுத்தினர்.
  பூமியின் பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ளவர்கள் தேவர்கள் (சுரர்கள்) என்றும் தெற்கே உள்ளவர்கள் அசுரர்கள் என்றும் வகைப் படுத்தப்பட்டுள்ளனர்.
  இவர்களுக்குள்ளே ஒற்றுமை இருந்ததில்லை.
  ஒளிக்கும், இருளுக்கும் பகைமை இருப்பது போல, இவர்களுக்குள் பகைமை இருந்திருக்கின்றது.

  அசுரர்களுக்கு அருகாமையில், அமைந்த நிலப்பகுதி, நாவலம் தீவின் தென் பகுதி ஆகும். அதனால் சம்புத் தெய்வம் நாவலம் தீவின் தென் புறம் வந்து, தென் திசை நோக்கி அமர்ந்து, அந்தப் பகுதிக்கே காவல் தெய்வமாக விளங்கி இருக்கிறது.
  இனி சம்பு என்றால் என்ன?
  சம்புத் தீவு என்பதை நாவலம் தீவு என்றும் அழைத்தனர்.
  ஜம்பு என்றாலும், நாவல் என்றாலும், நாகப்பழ மரத்தைக் குறிக்கும்.
  நாவல் மரங்கள் அதிகம் காணப்பட்டதால் இந்தப் பகுதிக்கு நாவலம் தீவு அல்லது, ஜம்புத் தீவு என்ற பெயர் வந்தது.
  ஜம்பு என்பதே தமிழில் சம்பு என்றானது.
  மணிமேகலையில் சம்பு மரம் என்றும் சம்புத் தீவு என்றும் குறிக்கப்பட்டுள்ளதைக் கவனிக்கவும்.
  தென் மொழியான தமிழ் மொழியும், வடமொழியும் கலந்து அந்த நாளில் இருந்து வந்ததை இது காட்டுகிறது.
  சம்பு என்ற பெயராலேயே சம்பாபதி என்ற பெயரை புகார் நகரம் முதலில் பெற்றிருக்கிறது.
  அது இருந்த இடம் சம்புத் தீவு அல்லது நாவலம் தீவு என்னும் பெரும் நிலப்பகுதி ஆகும்.

  எந்த வழிபாட்டிலும் முதலில் சொல்லபப்டும் சங்கல்ப மந்திரத்தில், ஜம்புத் தீவில் உள்ள, பாரத வர்ஷத்தில் உள்ள, பாரதம் என்னும் கண்டத்தில் நாம் இருக்கிறோம் என்றே வருகிறது. சம்புத் தீவு என்று பெயரே தமிழிலும் ஆதி நாளில் புழக்கத்தில் இருந்திருக்கிறது.
  ஆனால் சிலப்பதிகாரம் எழுந்த கி-பி-இரண்டாம் நூற்றாண்டில் நாவலம் தீவுஎன்ற பெயர் மக்களிடையே வழங்கி வந்திருக்கிறது.
  உதாரணமாக, சிலப்பதிகாரம் ஆய்ச்சியர் குரவையில் நாவலம் தீவின் மன்னர்கள் பாண்டியனது ஏவலைக் கேட்டு இருந்தனர் என்று வருகிறது.

  அதுபோல, சேர மன்னன் செங்குட்டுவன் கண்ணகி சிலைக்குக் கல் கொண்டு வர இமய மலைக்குப் பயணம் கிளம்பிய போது, ‘இந்த நாவலம் தீவில் உள்ள பிற நாட்டு அரசர்களின் ஒற்றர்கள் நம் நாட்டு அரண்மனையைச் சுற்றிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் காதில் விழும் வண்ணம், நாம் வட நாட்டுக்குப் பயணம் செய்வதை முரசு அறிவித்துச் சொல்லவும். அவர்கள் தங்கள் நாட்டு மன்னர்களிடம் நமது வட நாட்டுப் படையெடுப்புப் பற்றித் தெரிவிக்கட்டும்’ என்கிறான்.
  எனவே நாவலம் தீவு என்பது நாம் இருக்கும் இந்தியத் துணைக் கண்டம் முழுவதையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ் நூல்கள் வாயிலாகவும் தெரிந்து கொள்கிறோம்.

  நாவலம் தீவில் உள்ள சம்பாபதியில் சம்புத் தெய்வம் குடி கொண்டுள்ளது என்று மணிமேகலை கூறுகிறது.
  இங்கே நாம் முன்னமே கண்ட நாளங்காடி பூதம் பற்றிய செய்தியையும் தொடர்பு படுத்தலாம்
  நாளங்காடிப் பூதம் என்னும் தெய்வம், சோழர்குல முன்னோனானமுசுகுந்தச் சக்கரவர்த்திக்கு அசுரர்களை விரட்ட உதவி செய்தது.
  அந்தப் பூதத்தை இந்திரனிடமிருந்து பெற்ற அந்த அரசன், புகார் நகரத்தில் அதனை நிலை நிறுத்தினான் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது என்று பார்த்தோம்.
  அதே புகார் நகரில், அசுரர்களிடமிருந்து காக்க சம்புத் தேவியும் குடி கொண்டனள் என்ற செய்தி முக்கியத்துவம் வாய்ந்தது.

  இவர்கள் யாரைக் காக்க வேண்டும்?
  அங்கு மக்கள் குடி இருந்திருந்தால, அவர்களை அசுரர்கள் தாக்குதலிலிருந்து காக்க சம்பு தேவியும் அங்கு கோயில் கொண்டிருப்பாள்.
  அப்படி அவள் கோயில் கொண்ட காலம் எது வென்று தெரிந்தால், அப்பொழுதிலிருந்தே மக்களும் அங்குக் குடி இருந்திருக்கின்றனர் என்று நாம் தெரிந்து கொள்ளலாம்.

  அந்தக் கால நிர்ணயத்தை, மணிமேகலையின் பதிகச் செய்யுள் சொல்கிறது.

  ஒரு சமயம் சம்பாபதியை காந்தமன் என்னும் சோழ மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு ஒரு ஆசை எழுந்தது. தன்னுடைய நாட்டின் நீர் வளத்தை அதிகப்படுத்த விரும்பி, அகத்திய முனிவரிடத்தில் இருந்த காவேரியைத் தன் நாட்டுக்குக் கொண்டு வர விரும்பினான். அதன்படி அவன் அகத்தியரை வேண்டிக் கொள்ள, அவர் தன் நீர்க் கரகத்தைக் குடகு மலையில் கவிழ்க்க அதிலிருந்து ‘காவேரிப் பாவை’ ஆறாகப் பெருக்கெடுத்து ஓடலானாள். அவள் நேர்க் கிழக்கு திசை நோக்கி ஓடி, சம்பாபதி நகரத்தை அடைந்தது. அங்கே இருந்த கடலில் கலந்தாள்.

  சம்பாபதியில் குடி இருந்த அந்த ‘அருந்தவ முதியோள்” எனப்படும் சம்புத் தெய்வம், காவேரியைக் கண்டு மிகவும் மகிழ்கிறாள். அவளை “ஆகாய கங்கை” என்று விளித்து, சோழனுக்கும், அவன் குடி மக்களுக்கும் இருந்த நீண்ட நாள் அவாவினைத் தீர்த்தவளே வருக, வருக என்று வரவேற்கிறாள்.

  குடகிலிருந்து காவேரியைப் பின் தொடர்ந்து அகத்திய முனிவரும் வந்து கொண்டிருந்தார். அவர் சம்பாபதி தேவியின் வரவேற்பைக் கண்டவுடன், மகிழ்ந்து காவேரியிடம் அந்த முது பெரும் தெய்வத்தை வணங்கச் சொல்கிறார்.
  பிறகு காவேரியின் பெருமையைக் கூறுகிறார்.
  அதுவும் எப்படிக் கூறுகிறார்?

  “பாடல் சால் சிறப்பிற் பரதத் தோங்கிய
  கோடாச் செங்கோற் சோழர்தங் குலக்கொடி” என்கிறார்.

  தமிழனையும், தமிழகத்தையும், பாரத நாட்டிலிருந்து பிரித்துப் பேசும் திராவிடவாதிகள் கவனிக்க வேண்டியது இங்கு உள்ளது.
  பலரால் பாடப்பட்ட சிறப்பை உடைய பாரத நன்னாட்டில் உயர்ந்து விளங்கிய, சிறந்த செங்கோன்மையுடன் விளங்கும் சோழர்கள் – அவர்களது குலப் பெருமையாக விளங்குபவள் காவேரி என்கிறார்.
  நாவலம் தீவில் உள்ள பாரதத்தில் உள்ள சம்பாபதி என்பதால், பாரதத்தை ஒட்டித்தான் தமிழ்க் குடிகள் இருந்திருக்கின்றனர் எனபதற்கு இது ஒரு சான்று.

  மேலும் அகத்தியனார் காவேரியைப் பலவாறாகப் புகழ்கிறார்.
  எந்த ஜோதிடத்தைத் திராவிடவாதிகள் வெறுக்கிறார்களோ, அல்லது வெறுப்பது போல பாவனை செய்கிறார்களோ, அந்த ஜோதிடக் கருத்தை வலியுறுத்திகிறார்.
  கோள்கள் நிலை திரிந்து, அதனால் கோடைக் காலம் நீடித்தாலும், தன் நிலை திரியாமல், தண்ணீர் தருபவள் இந்தக் காவேரி என்கிறார்.

  இதை எல்லாம் கேட்ட சம்பாதேவி மகிழ்ந்து ஒரு முக்கியக் கருத்தைச் சொல்கிறாள். தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் நான்முகப் பிரம்மன் ‘தெய்வக் கருவையும், திசைக் கருவையும்’ என்றைக்கு உருவாக்கினானோ, அன்றிலிருந்தே இருப்பது இம்மூதூர்.
  இது என்பெயரால், சம்பாபதி என்று அழைக்கப்பட்டது.
  இனிமேல், உன் பெயராலேயும், “காவேரிப் பூம் பட்டினம்” என்று அழைக்கப்படும் என்கிறாள்.

  ” என் பெயர்ப் படுத்த இவ்விரும் பெயர் மூதூர்
  நின் பெயர்ப் படுத்தேன் நீ வாழி’
  என்று காவேரிக்குப் பெருமை சேர்கிறாள்.

  பிற்காலத்தில் காவேரிப் பூம் பட்டினம் என்ற பெயரும் மருவி, காவேரி கடலுக்குள் புகுவதால், புகார் என்ற பெயரை அடைந்தது.

  இங்கு சம்பாதேவி சொல்வதில், தெய்வக் கரு, திசைக் கரு என்பதெல்லாம், நிலப்பரப்பு தோன்றி, ஆங்காங்கே தெய்வ சக்திகள் நிலை பெற்ற ஆதி காலத்தைச் சொல்கிறது. மனிதன் புழங்க ஆரம்பித்த நாளிலேயே, அவனுக்குக் காக்கும் கடவுளாக, இந்த சம்பா தேவியும், புகாரில் குடி கொண்டிருக்கிறாள்.
  அப்பொழுது அந்த நிலத்தில் காவேரி பாயவில்லை!
  அதாவது காவேரி என்னும் ஒரு நதி குடகு மலையில் புறப்பட ஆரம்பித்ததற்கு முன்பே புகார் நகரம் இருந்திருக்கின்றது .

  காவேரியை வரவழைத்த அரசனைப் பற்றி இந்தப் பதிகம் சொல்கிறது. அது உண்மையே என்று மெய்ப்பிக்கும் வண்ணம், திருவாலங்காட்டுச் செப்பேடுகளில், ஒரு சோழ மன்னன் காவேரியைக் கொண்டு வந்தான் என்று சொல்லப்பட்டதை, பகுதி 11 -இல் பார்த்தோம்.

  செப்பேடுகளில் அந்த மன்னன் பெயர் ‘சித்ரதன்வன்’ என்று வருகிறது. மணிமேகலையில், ‘காந்தமன்’ என்று வருகிறது. இரண்டுமே ஒரே அரசனது பெயராகத்தான் இருக்க வேண்டும்.
  செப்பேடுகளில், ஒரு விசேஷக் குறிப்புடன் இந்த மன்னனைப் பற்றி வருகிறது.
  அதாவது பாகீரதன் தவம் செய்து, கங்கையைக் கொண்டு வந்தான் என்று கேள்விப்பட்ட இந்த மன்னன், தானும் அப்படிப்பட்ட உயர்ந்த செயலைச் செய்து புகழ் ஈட்ட வேண்டும் என்று விரும்பி காவேரிக் கன்னியைத் தன் நாட்டுக்குக் கொண்டு வந்தான் என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

  காவேரியைக் கொண்டு வந்த இந்த மன்னன் காலத்துக்குப் பிறகு த்ரேதா யுகம் முடிந்தது என்று செப்பேடுகள் சொல்வது கவனிக்கத்தக்கது.
  பகுதி 15 -இல் லௌகீக யுகம் அதாவது மானுட வாழ்க்கைக்கு உகந்த சப்த ரிஷி யுகம் பற்றிய விவரங்களைக் கண்டோம்.
  அதன்படி ஏறத்தாழ கி-மு 11, 700 இல் ஆரம்பித்து கி-மு 7,300 வரை த்ரேதா யுகம் யுகம் நடந்தது என்று அறிகிறோம்.
  அதாவது இன்றைக்கு 13,000 ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து 9,000 ஆண்டுகள் வரை த்ரேதாயுகம் இருந்தது.
  அந்தக் காலக் கட்டத்தில்தான் கங்கையும் உற்பத்தி ஆகி இருக்க வேண்டும்.

  பாகீரதனைப் பற்றி இந்தச் சோழ மன்னன் நினைவு கூர்ந்ததைக் கவனிக்க வேண்டும். மேலும் பாகீரதன் பரம்பரையும், சோழன் பரம்பரையும் ஒன்றே என்பதை நாம் நினைவு கூற வேண்டும்.
  இந்தத் த்ரேதா யுகக் காலக் கட்டத்தின் ஆரம்பத்திலேயே, அதாவது 13,000 ஆண்டுகளுக்கு முன்னால் பனி யுகம் முடிந்த வேகத்தில், பல ஆறுகள் உண்டாகி இருக்கின்றன. அப்படி கங்கையும் உண்டாகி இருக்கின்றது. அதை முன்னோடியாக கொண்ட சோழ மன்னன் தன் நாட்டுக்கும் ஒரு நதியைக் கொண்டு வர விரும்பினான். ஆனால் அவன் ஆண்ட தென் பகுதியில் பனிக் கரு கிடையாது.

  அங்கே குடகு மலையில் குடத்திலிட்ட விளக்காக இருந்தது காவேரிதான். இன்றும் அந்த மலைக்குச் சென்று பாருங்கள். பிரம்ம கிரி எனப்படும் அந்தச் சிகரத்தில் குடம் போல ஒரு பெரும்பாறை இருக்கிறது. அதன் வாய் போன்ற ஒரு பெரும் துவாரம் இருக்கிறது.
  அதற்குள் காவேரி ஊற்றி நீராகத்தான் சுரந்து கொண்டிருக்கிறாள்! காவேரியின் உற்பத்தி ஸ்தானத்தில் அவள் ஆறாக இல்லை. குடம் அல்லது கமண்டலத்துக்குள் இருக்கும் நீர் போலத்தான் அதற்குள் நிறைந்து இருக்கிறாள்.

  காவேரியின் உற்பத்தி ஸ்தானம் – பிரம்ம கிரி சிகரம். குளம் போன்ற இந்த இடத்தில் இருக்கும் சிறிய மண்டபத்தினுள் காவேரி உண்டாகிறாள்.

  அகத்திய முனிவர் அந்த மலையைத் தன் இருப்பிடமாகக் கொண்டிருந்தார். மகாபாரதத்தில் அகத்தியர் பற்றிய வர்ணனைகளில், அவர் பிரம்மகிரி மலைச் சிகரத்தில் இருப்பதாகத்தான் வருகிறது. இது இன்று கர்நாடகாவில் மேற்குத் தொடர்ச்சி மலையில், குடகு என்னும் இடத்தில் இருக்கிறது. அகத்தியர் பொதிகையில் வாழ்ந்தார் என்பது இதற்குப் பிறகே நடந்தது. அங்கு அவர் சென்றது தமிழ் நாட்டின் சரித்திரத்தில் ஒரு முக்கியத் திருப்பு முனை.

  இங்கு நாம் காவேரியின் தோற்றம் பற்றிப் பார்க்கலாம்.
  இந்த சிறிய மண்டபத்துள் இருக்கும் துவாரத்திற்குள் காவேரி ஊற்றாக வெளி வருகிறாள்.
  கமண்டலத்துக்குள் இருப்பது போன்ற தோற்றத்துடன் இருக்கும் காவேரி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் அந்த மலைப் பாறைக்குள்ளேயே செல்கிறாள். அதன் பிறகு அதில் ஒரு துவாரத்திலிருந்து உடைத்தெடுத்து வெளியில் வருகிறாள். அங்கிருந்து அவள் ஆறாகப் பெருகி வருகிறாள்.

  காவேரி பிறந்ததைப் பற்றி வழங்கி வரும் கதை இதன் உருவகம் போல் இருக்கிறது.
  காவேரி என்பவளை அகத்தியர் கமண்டலத்தில் அடைத்து வைத்ததாகவும், பிறகு விநாயகப் பெருமான், ஒரு காக்கையின் உரு வெடுத்து அந்தக் கமண்டலத்தைக் கவிழ்க்கவே காவேரி வெளிப்பட்டு ஆறாகி ஓடினாள் என்றும் ஒரு கதை வழங்குகிறது. செப்பேடுகளிலும், மணிமேகலையிலும் ஒரே விதமான விவரம் வரவே, காந்தமன் என்னும் சோழ அரசன், விநாயகப் பெருமானை வேண்டிக் கொள்ள, அகத்தியர் ஆசியுடன், கமண்டலம் போன்ற மலைப் பாறையில் துளை போட்டு, காவேரியை வெளிப்படச் செய்தான் என்று தெளிவாகிறது.

  அவள் உயரமான மலையிலிருந்து வரவே, அவளை சம்பாதேவி ‘ஆகாய கங்கை’ என்றாள்.
  கங்கை தோன்றின த்ரேதா யுகக் காலக் கட்டத்திலேயே காவேரியும் தோன்றி இருக்கிறாள் என்று செப்பேடுகள் தெரிவிக்கின்றன.
  அது இன்றிலிருந்து 9,000 ஆண்டுகளுக்கு முன் எப்பொழுது வேண்டுமானாலும் இருக்கலாம்.

  அதற்கு முன் – அதாவது இன்றிலிருந்து 11,500 ஆண்டுகளுக்கு முன் இருந்த புகார் நகரின் பகுதிகளைக் கடல் கொண்டுவிட்டது என்பதைச் சென்ற பகுதியில் பார்த்தோம்.
  அந்தப் பகுதியில் மனித முயற்சியில் உருவாகியிருக்கக் கூடும் என்று நாம் நினைக்கத்தக்க அமைப்பு இன்று கடலுக்குள் மூழ்கிய நிலையில் இருக்கிறது.
  காவேரி நதியானது அந்த ஆண்டுக்கு முன்னும் தோன்றியிருக்கலாம், பின்னும் தோன்றி இருக்கலாம்.
  ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் அங்கு மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.
  கடலுக்குள் தெரியும் அமைப்பை உண்டாக்கக்கூடிய அறிவுடைய மக்கள் அன்று இருந்திருப்பார்களா என்று கேட்டார்களே, அதே காலக் கட்டத்தில் மலையை உடைத்து காவேரி நதியைக் கொண்டு வந்திருக்கிறார்களே, அது மட்டும் சாதாரணச் செயலா?

  கங்கையைக் கொண்டு வந்த பாகீரதனை இன்றும் பாரதம் நினைக்கிறது.
  ஆனால், காவேரியைக் கொண்டு வந்த காந்தமனைப் பற்றி ஐம் பெரும் காப்பியத்தில் சொல்லப்பட்டும், ஏன் நம் மக்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுத்துக் கொண்டாடவில்லை?

  இன்றைக்கு அறிவியல் மிகவும் வளர்ந்து விட்ட நிலையில், காவேரி போன்ற ஒரு ஆறு எத்தனை ஆண்டுகளாக இருந்திருக்கக்கூடும் என்று ஆராய்ச்சி செய்து சொல்ல முடியும். அப்படிப்பட்ட ஒரு ஆராய்ச்சி இன்று சிந்து சமவெளிப் பகுதியில் நடந்து கொண்டிருக்கிறது. அதில் தெரிந்து கொண்ட விவரம், சிந்து நதி அல்ல, சரஸ்வதி நதி தீரத்தில் மக்கள் வாழ்ந்த அடிச்சுவடுகளே அவை என்று தெரிய வந்திருக்கிறது.

  நம் காவேரி நதியைப் பற்றி ஏன் நாம் ஆராயாமல் இருக்கிறோம்?
  திராவிட மயக்கத்தில் சிக்காமல், இனியேனும் ஒரு மறத் தமிழன் இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ளட்டும்.

  பழங்குடிகளான தமிழ்க் குடிகள்
  காவேரி ஆறு பிறப்பதற்கு முன்னமே புகார் நகரம் இருந்தது என்று பார்த்தோம். அந்தக் காவேரி பாரத நாட்டின் ஏழு நதிகளுக்குள் ஒன்று என்ற பெருமையைப் பெற்றது. கங்கை, யமுனை, நருமதை, சரஸ்வதி, காவேரி, குமரி, கோதாவரி என்று தமிழ் நிகண்டுகள் கூறுகின்றன. சரஸ்வதி மறைந்து போன அடையாளங்கள் உள்ளன. ஆனால் குமரி மட்டும் இன்று இல்லை.

  ஆனால் அதுவும் சப்த நதிகளுள் ஒன்று எனச் சொல்லப்பட்டதால், பாரதம் எங்கும் புகழ் மணக்க அந்த நதி ஒரு காலத்தில் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. இந்த ஏழு நதிகளுமே, ஒரே காலக்கட்டத்தில் பெருமையுடனும், மக்களுக்கு உயர்வைவும் தந்திருக்க வேண்டும். காவேரியின் காலம் இன்றிலிருந்து 9,000 ஆண்டுகளுக்கு முன் என்றால், அதே காலக் கட்டத்தில் குமரியும் இருந்திருக்க வேண்டும். ஏழு நதிகளும் கோலோச்சி இருக்க வேண்டும். இங்கே கவனிக்கக் வேண்டியது, சிந்து நதிக்கு முக்கியத்துவம் இல்லை என்பது.

  தமிழன் சிந்து நதியுடன் சம்பந்தப்பட்டிருந்தால், எங்கேனும் அதைப் பற்றிய குறிப்பு வந்திருக்கும். ஆனால், புகாரில் வாழ்ந்த மக்கள், 700 கிலோ மீட்டருக்கும் அப்பாலில் இருந்த மலையிலிருந்து காவிரியைக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி இருக்கின்றனர் என்றே தெரிகிறது. அந்தக் காவேரி நதியைத் தண்டமிழ்ப் பாவை என்றும் அகத்தியர் பாராட்டி இருக்கின்றார். அந்த நதி நுழைந்த புகார் நகரம் அதன் பெயரையே எடுத்துக் கொண்டது.இதெல்லாம் தமிழனின் வேர்கள் எங்கே என்பதை சந்தேஹமில்லாமல் சொல்லுகின்றன.

  இனி புகார் நகரில் தமிழ்க் குடிகள் காலம் காலமாக வாழ்ந்து வந்தனர் என்பதற்குச் சான்றுகளைப் பார்ப்போம்.

  சிலப்பதிகாரம் பாட ஆரம்பிக்கும் போதே, இளங்கோவடிகள் திங்களைப் போற்றி, ஞாயிறைப் போற்றி, மாமழையைப் போற்றி பிறகு புகார் நகரைப் போற்றித் தன் காப்பியத்தை ஆரம்பிக்கிறார். புகார் நகரைப் பற்றிப் போற்றும் போது, கடலால் சூழப்பட்ட உலகை, சோழன் தொன்று தொட்டு அவன் குலத்தோடு பொருந்தி. உயர்ந்து. பரந்து ஒழுகவே பூம் புகார் போற்றுதும், பூம் புகார் போற்றுதும் என்று போற்றுகிறார்.

  அது மட்டுமல்ல, பொதிகை மலை ஆனாலும், இமயமலை ஆனாலும், எங்கெல்லாம் மக்கள் வாழ்ந்தார்களோ. அங்கிருந்து வேறு இடம் பெயர்ந்துச் செல்ல வேண்டிய அவசியம் இருக்கவில்லை என்கிறார். இங்கும் பாரதம் தழுவிய ஒருமித்த நிலையைக் காட்டுகிறார். புகார் நகரிலும் மக்கள் ஆதியிலிருந்து எங்கே வாழ்ந்து வந்தார்களோ, அங்கேயே தொடர்ந்து வாழ்ந்து வரக்கூடிய பழங்குடியினராக இருந்தனர் என்கிறார்.

  “பதியெழு வறியாப் பழங்குடி கெழீஇய
  பொதுவறு சிறப்பின் புகாரே யாயினும்
  நடுக்கின்றி நிலை இய என்பதல்லதை …”

  என்று அவர் தங்கள் பதியிலிருந்து வேறு இடம் பெயராதவர்கள் என்றும், ஆதியில் தோன்றி சலிப்பின்றி அங்கேயே நிலை பெற்று இருந்தனர் என்றும் கூறுகிறார். இவ்வாறு தங்கள் ஊரை விட்டு அவர்கள் என்றுமே அகலாததற்குக் காரணத்தை உரை ஆசிரியர் அடியார்க்கு நல்லார்தருகிறார்.

  புகார் நகரத்து மக்களுக்கு செல்வ வளம் இருந்தது. அதனால் செல்வம் தேடி வேறு இடம் பெயரவில்லை. அங்கே பகைவர் பயமில்லை. அதனால் மக்கள் இடம் பெயரவில்லை என்கிறார். கோவலன், கண்ணகி ஆகியோரது பெற்றோர், அவர்தம் மூதாதையர் என்று காலம் காலமாகப் புகார் நகரிலியே வாழ்ந்து வந்தனர் என்று சொல்கிறார்.

  புகார் ஒரு துறை முகம். சிலப்பதிகாரம் நிகழ்ந்த காலத்திலேயே, அங்கே பல நாட்டு வணிகர்களும் வந்து வியாபாரம் செய்தனர் என்று வருகிறது. இமய மலையைத் தாண்டியும் மக்கள் வந்தனர் என்றும் தெரிகிறது. ( பகுதி – 10).அந்த நகரத்தின் வளத்துக்குக் குறைவில்லை என்பதை அறிய திருக்குறளில் சொல்லப்படும் ஒரு கருத்து உதவுகிறது.

  நாடு என்னும் அதிகாரத்தில் நாடு என்றால் என்ன என்று சொல்லப்படுகிறது . குறைவு இல்லாத விளைபொருளும், தகுதி வாய்ந்த அறிஞரும், குறைவற்ற செல்வம் உடையவர்களும் கூடி வாழ்வதே நாடு ஆகும். அந்த நாட்டுக்கு உரிய உறுப்புகள், ஊற்று நீர், மழை நீர், தகுந்த மலை, அம்மலையிலிருந்து வரும் ஆற்று நீர், வலிமையான அரண் போன்றவை என்று குறள் – 737 கூறுகிறது.

  முன் பகுதியில் பார்த்தோமே, காந்தமன் என்னும் சோழ அரசன், அவனுக்கு ஒரு ஒரு குறை இருந்தது. நாடு என்று அந்த நாளில் மக்கள் கொண்டிருந்த அளவுகோலின்படி, சோழ நாட்டிலும், அதன் தலை நகரான புகார் நகரிலும் ஆற்று நீர் ஓடவில்லை. அதனால் அவர்கள் ஆறு இருக்கும் இடத்திற்கும் தங்கள் நகரத்தை மாற்றிக் கொள்ளவில்லை. ஆறு இல்லை என்பது மட்டுமே ஒரு குறையாக இருந்தது. மற்றபடி எல்லா நிறைகளும் அவர்களுக்கு இருந்திருக்கின்றன.

  தொன்று தொட்டு வந்த நகரமாகவும், ஆதி தெய்வமான சம்புத் தெய்வம்குடி கொண்டிருக்கும் நகரமாகவும் புகார் விளங்கவே. அவர்கள் குறையை வேறு எப்படி சரி செய்யலாம் என்று பல காலமாக யோசித்திருப்பர். பாகீரதன் கங்கையைக் கொண்டு வந்ததைக் கேள்விப்பட்டவுடன், அதுவே அவர்களுக்கு ஒரு முன் உதாரணம் போல ஆயிற்று. குடகு மலையிலிருந்து காவேரியைக் கொண்டு வந்து விட்டனர். தங்கள் இருப்பிடத்தை விட்டு நீங்க வேண்டியிராத நிலைமையையும் பெற்றனர். மேலும் ஆறு ஒன்று ஓடவே, பஞ்சம் என்ற நிலை அந்த நகரத்துக்கு வரவில்லை.

  சிலப்பதிகாரம் சொல்லும் காலக்கட்டம் கி-பி இரண்டாம் நூற்றாண்டு. பல ஆயிரக் கணக்கான ஆண்டுகளாக அந்த நகர மக்கள் அமைதியாக, பகையும், பஞ்சமும் இல்லாமல் இருக்கவே, அங்கேயே வாழ்ந்து இருந்திருக்கின்றனர்.கடலுக்குள் முழுகிய காலம் 10,000 வருடங்களுக்கும் மேலாக இருக்கவே, அதன் தாக்கம் மறைந்தும், மறந்தும் போய் இருக்கிறது. அதைப் பற்றிய குறிப்பு சங்க நூல்களில் வரவில்லை. 11,500 வருடங்களுக்கு முன் ஒரு கடல் சீற்றமோ அல்லது கடல் நீர் மட்டம் ஏறி நிலத்தை உள்வாங்கிய நிலையோ ஏற்பட்டிருக்க வேண்டும். கடலுக்குள் தெரியும் பகுதி ஐந்து கிலோமீட்டர் தொலைவில் தான் இருக்கிறது. எனவே மிகப் பெரிய அளவில் கடல் சீற்றம் புகார் பகுதியில் நடைபெறவில்லை எனலாம். அதனாலேயே பழங்குடிகள் என்ற நிலையில் மக்கள் அங்கு தொடர்ந்து வாழ்ந்து வந்திருக்கின்றனர்.இங்கிருந்த குடிகளது மூலத்தை 3,500 வருடங்களுக்குள் அடக்கி, சிந்து சமவெளிப் பகுதியில் இருந்து விரட்டப் பட்டு வந்தனர் என்று சொல்வது கொடுமை.

  திருக்குறளில், குடிமை என்னும் அதிகாரத்தில் சொல்லபப்டும் சில கருத்துக்கள் தமிழ்க் குடிகளது பழமையை மேலும் உறுதி ஆக்குகின்றன. திருக்குறள் பிற்பட்டு எழுந்த நூலாக இருக்கலாம். ஆனால், அது திருவள்ளுவர் காலத்துக்கும் முற்பட்டு வாழ்ந்த தமிழ்ச் சமுதாயத்தினரது வாழக்கை முறையைப் பிரதிபலிப்பதாக எடுத்துக் கொள்ளலாம். உதாரணமாக குறள் 955 – இல் ‘பழங்குடியினர்’ வறுமைக் காலத்திலும் தம் குணத்திலிருந்துக் குறைய மாட்டார் என்று சொல்லப்பட்டுள்ளது.

  இந்தப் பழங்குடியினர் யார்?
  இதற்கு உரை எழுதிய பரிமேலழகர் பழங்குடியினர் என்றால் தொன்று தொட்டு வரும் குடியில் பிறந்தவர்கள் என்கிறார்.
  அப்படித் தொன்று தொட்டு வருதல் என்றால் என்ன?
  அதற்கும் ஒரு விளக்கம் தருகிறார் பரிமேலழகர்.
  ” ‘சேர, சோழ, பாண்டியர்’ என்றாற்போலப் படைப்புக் காலம் தொடங்கி மேம்பட்டு வருதல்” என்கிறார்.
  அதாவது சேர, சோழ, பாண்டியர் என்றாலே தொன்று தொட்டு வருபவர் என்று பொருளாகும்.
  அவர்கள் மனிதப் படைப்பு ஆரம்பித்த காலத்திலிருந்தே இருந்து வருபவர்கள். அவ்வாறு ஆதி நாளிலிருந்து வழி வழியாக இருந்து வரும் குடிகள் பழங்குடிகள் என்கிறார்.

  அந்தப் பழங்குடிகள் நான்கு வர்ணத்தவர் என்கிறார் பரிமேலழகர். குடிமை அதிகாரத்தின் விளக்கம் பற்றிச் சொல்லும் போதே இவ்வாறு கூறுகிறார்.
  இவர்களுள் யார் உயர்ந்த குடிகள் என்ற பேச்சு வருகிறது.
  அதற்கு பிராமண வர்ணத்தவர் உயர்வு என்றோ, சூத்திர வர்ணத்தவர் தாழ்வு என்றோ சொல்லவில்லை.
  எல்லா வர்ணத்தவருமே பழங்குடிகள். அந்த வர்ணத்தவர்களில் யார் யாரெல்லாம், சிறந்த குணங்களோடு, அதாவது உயர் குடிப் பிறப்பாளராக இருந்தனர் என்கிறார்.

  எவரெல்லாம், செப்பமுடன், அதாவது கருத்து, சொல், செயலில் மாறாமல் இருப்பர்களோ, ஒழுக்கம், மெய்ம்மை, நாணம் (பழி பாவங்களுக்கு நாணுதல்) உடையவர்களோ, முக மலர்ச்சி, இன் சொல், ஈகை, பிறரை இகழாமை என்று இருப்பவர்களோ அவர்கள் உயர் குடியில் பிறந்தவர்கள் எனபப்டுவர் என்கிறார் வள்ளுவர்.

  பழங்குடிகளுக்கு இவையெல்லாம் குணங்கள் ஆகும் என்கிறார்.
  இந்த குணங்கள் ஒரு நாளில் வந்து விடாது,
  வழி வழியாக மூதாதையர் அவ்வாறு இருந்து வந்ததால், அதுவே பழக்கமாக அவர்கள் சந்ததியருக்குவந்து விடும் என்கிறார்.
  இதைதான் தொன்று தொட்டு வருவது என்று சொல்வது.
  தமிழ் நெறி விளக்கத்திலும் ( 112 ) ‘வான்றோய் தொல்குடி மரபு’ என்று சொல்லப்படுகிறது.

  இதன் அடிப்படையில் புறநானூறிலும் ஒரு பாடல் வருகிறது ( 43).
  சோழன் நலங்கிள்ளியின் தம்பி மாவளத்தானுடன், புலவர் தாமப்பல் கண்ணனார் தாயக்கட்டை போன்ற ஒரு விளையாட்டு விளையாடிக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அவர்களுக்குள் ஒரு கருத்து வேறுபாடு வருகிறது. கோபத்தில், மாவளத்தான் தன் கையில் இருந்த கவற்றினைப் புலவர் மீது வீசி விடுகிறான். அதைக் கண்ட மன்னன் பதறிப் போகிறான். அதைக் கண்ட புலவர் பாடல் ஒன்று பாடுகிறார். அதில் அவர் சொல்கிறார், மன்னனே, நீ புறாவுக்காக துலாக்கோலில் அமர்ந்தவன் மரபில் வந்தவன். அந்தக் குடியில் பிறந்தவர் தவறு செய்ய மாட்டார். எனவே இந்த விளையாட்டில் நான் தான் தவறு செய்திருப்பேன். உன் தம்பி தவறு செய்திருக்க முடியாது. அதனால் அவன் கவறு எறிந்தது சரியே என்கிறார்.

  தொன்று தொட்டு வரும் குடி வழக்கத்தால் இப்படி சொல்கிறார்கள்.சில ஆயிர வருடங்கள் மட்டுமல்ல. பல்லாயிரக் கணக்கான வருடங்கள் நல்ல நாகரீகப் பண்பில் தோய்ந்து இருந்திருந்தால்தான் இப்படி அவர்கள் எழுதி இருக்க முடியும்.

  காவேரி நதியின் தோற்றத்தைப் பற்றிய விவரங்களை நோக்குகையில், ஒரு முக்கிய செய்தி கிடைக்கிறது.
  பொதுவாக நதிகளைத் தேடி மக்கள் இடம் பெயர்ந்து சென்று அங்கு வாழ்ந்திருக்கின்றனர். சிந்து சமவெளி நாகரீகம் நதி நீர் நாகரீகமாக 5,000 வருடங்களுக்கு முன்னால் ஆரம்பமானது என்கிறார்கள்.
  ஆனால் தமிழர் வாழ்க்கை நதி நீர் நாகரீகமல்ல.
  அவர்கள் எங்கே இருந்தார்களோ அங்கே வளம் இருந்திருக்கின்றது.
  நதியைத் தேடி அவர்கள் போகவில்லை.
  மாறாக, காவேரியை அவர்கள் பகுதிக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.
  காவேரியும், குமரியும் சேர்ந்த ஏழு நதிகளும் புண்ணிய நதிகள் என்று போற்றப்பட்டிருக்கின்றன.
  அவற்றின் காலம் 9,000 ஆண்டுகளுக்கு முந்தின த்ரேதா யுகம் என்றும் தெரிகிறது. காவேரி வருவதற்கு முன்பே தமிழன் இருந்திருக்கிறான்.
  நீர்ப் பஞ்சமென அவன் வேறிடம் தேடியும் போகவில்லை.

  அதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
  அந்தக் காரணம் இந்திரன்! ஆம்.
  வேத மரபில் சொல்லபப்டும் இந்திரன் அவர்களுக்கு வளம் கொடுத்திருக்கிறான்.

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
தொழில்நுட்பம்
மருத்துவம்
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort