தாலியின் மகத்துவம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.
 • தாலியின் மகத்துவம் நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள்.

  ஓம் விராட் விஸ்வப் பிரம்மனே நமஹா.ஆக்கம்.மார்க்கண்டு தேவராஜா(LLB) மயூராகோல்ட்ஸ்மித் சுவிட்சர்லாந்து.

  ஒரு மனிதனுக்கு இரண்டு கண்கள் இருப்பது போல் ஒவ்வொரு ஊருக்கும்  இரண்டு கண்கள் உண்டு,
  ஓன்று தேவாலயம் மற்றது வித்தியாலயம்.
  அதேபோல் ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கண்ணைப் போல் பாதுகாக்க வேண்டிய இரண்டு விடயங்கள் உண்டு.ஒரு மனிதன் திருமணமாகும் வரைக் கண்ணைப் போல் பாதுகாக்க வேண்டியது தாய் தந்தை.

  திருமணமானதும் கண்ணைப் போல் பாதுகாக்க வேண்டியது தாய் தந்தை மற்றது மனைவி.இந்த இரண்டும் சரியாக இருந்தால் சமூகத்தில் ஒருவரது நாணயம் காப்பாற்றப் படும் செல்லுகின்ற இடமெல்லாம் செல்வச்  சிறப்பு காத்திருக்கும் இல்லையேல் சீரளிவு தானாகவே வந்துவிடும்.

  இது ஆண்களுக்கும் பொருந்தும் ஒருபடி மேலே போய்  பெண்களுக்கும் பொருந்தும் கணவனின் தாய் தந்தையர் அந்தப் பெண்ணின் தாய் தந்தையர்  இந்த இரண்டையும் இரண்டு கண்ணாகக் கருதி கணவனை உயிராகக் கருதுவாள் அதைக் காப்பாற்றுவது கணவனால் அணியப்படும் தாலி.

  சிலர் விதண்டாவாதமாக தாலியே அணிய முடியாத வசதியற்றவருக்கு எப்படிச் சாத்தியமாகும் என்று கேட்கலாம் அங்கும் நிறைந்த செலவத்துடன் பல விடயங்கள் காத்திருக்கின்றன இன்று முதல் சந்திப்பு.முதல் பரிசு.முதல் நினைவு. முதல் முத்தம்.என்று வரிசையாக நினைவில் இருக்கும் சம்பவம் அவர்களிடம் நிறையவே இருக்கும்.

  தாலி அணிந்துள்ள ஒவ்வொரு பெண்ணும் கண்டிப்பாகக் கடைப் பிடிக்க வேண்டியவை.

  பெண்களே கொஞ்சம் சிந்தியுங்கள்,நீங்கள் பிள்ளையார் தாலி அணிந்திருந்தால்,அதற்கு நிறையவே பூசைக்கிருத்திக முறை உண்டு அதற்கு பாலாபிசேகக் கிருத்தியம் செய்யவேண்டும் அதாவது ஒவ்வொரு வருடமும் தாலி அணிந்த தினத்தில் தாலியை கழுத்தில் அணிந்த வாறோஅல்லது தலைக்கு  மேலாகக் களற்றியோ பாலில் மஞ்சள் அறுகு இட்டு அதற்கும் அந்தத் தாலியை முழுமையாகக் கழுவி அதற்க்கு தாலி கட்டியவனால் குங்குமமிட்டு மீண்டும் அணியவேண்டும்.

  அம்மன் தாலியாக இருந்தால் அதற்கும் அபிசேகம் செய்தாக வேண்டும் அதை அந்தத் தாலியணிந்த பெண்ணே செயலாம்,அதற்கு நிறையவே விதி முறையுண்டு,

  ஹோமம் வளர்ப்பது என்பது பன்னிரண்டு பொருத்தமும் நிறைந்தவருக்கு எதற்கு என்று கேள்வி வரும் ,பத்துப் பொருத்தம் என்பார்களே,இவை அனைத்தும் சரியென்றால் ஹோமம் எதற்கு,தாலிகட்டி.பதினொன்று,இருபத்தி ஓன்று,முப்பத்தி ஓன்று என தாலியை கழற்றும் ஐதீகம் உண்டு.இதற்கும் பல விளக்கக் காரணம் உண்டு,

  பன்னிரண்டு பொருத்தம் பார்க்கும் பொது பன்னிரண்டு பாவங்கள் சாஸ்திர ரீதியாக விரிவாகப் பார்ப்பார்கள்.
  பன்னிரண்டு பாவ விளக்கம்,

  முதல் பாவம்:
  உடல் தோற்றம், பொலிவு, குணங்கள், வாழ்க்கையின் நிலை, செல்வம், செல்வாக்கு ஆகியவற்றை முதல் பாவத்தின் வலிமை, அதில் தங்கியிருக்கும் கிரகங்கள் அவற்றின் சிறப்பு முதலியவற்றைக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.

  இரண்டாம் பாவம்:
  குடும்ப சூழ்நிலை, செல்வம், கலை, பேச்சுத் திறமை, கல்வி ஆகியவற்றிக்கு உரியது

  மூன்றாம் பாவம்:
  சகோதரி, சகோதரர்கள், பணியாள்கள், வாகன வசதி, சங்கீத ஞானம், அரசின் ஆதரவு, துணிவு, வீர தீரச் செயல்கள், உறவினர். நண்பர்கள் உதவி முதலியவற்றிற்கு முக்கியமானது.

  நான்காம் பாவம்:
  கல்வி, நில புலன்கள், செல்வம், கால் நடைகள், முன்னோர் சொத்து. நண்பர்கள் ஆதரவு, உதவி முதலியவற்றுடன் தாயாரின் சுக சௌகரியங்களையும் அறிய முக்கியமானது. இந்த பாவத்தை மாத்ரு பாவம் என்று கூறுவர்.

  ஐந்தாம் பாவம்:
  இதைப் புத்திரஸ்தானம் என்று அழைப்பர். ஒருவருக்குச் சந்ததி விருத்தி – குழந்தைகள் பிறப்பது – எப்படியிருக்கிறது என்பதை அறிய ஐந்தாம் பாவம் முக்கியமானது. இந்த பாவத்தின் வலிமையைக் கொண்டுதான் ஒருவருக்கு மழலைச் செல்வம், உண்டா இல்லையா என்று தீர்மானிக்க வேண்டும். மற்றும் ஜாதகர் ஒருவரின் பூர்வ புண்ய பாவம், புகழ், பாவம், செல்வம், செல்வாக்கு, மதி நுட்பம் ஆகியவற்றையும் இந்த ஐந்தாம் பாவமே எடுத்துக் கூறக் கூடியது.

  ஆறாவது பாவம்:
  தாய் மாமன் குணம், உடல் ஆரோக்கியம், உதவி முதலியவற்றைக் கண்டறிய முக்கியமான பாவம், ஜாதகரின் உடல் ஆரோக்கியம், விரோதிகள் தன்மை, கடன், பொருள் சேதம், விபத்துகள் முதலியவற்றையும் எடுத்துக் கூறுவது இந்த பாவம்.

  ஏழாவது பாவம்:
  காதல் திருமணம், மனைவி உறவு முறை, நொருங்கிய உறவினர், சகோதர சகோதரிகள் ஆதரவு. உதவி, வழக்குகள், அரசு ஆதரவு. சமுகத்தில் செல்வாக்கு. விரோதம் முதலியவற்றைக் குறிக்கக் கூடியது. இதை களத்திர-மனைவி-பாவம் என்று பொதுவாகச் செல்வார்கள்.

  எட்டாவது பாவம்:
  ஆயுள் பாவம் பெண்களுக்கு தாலி பலத்தைக் குறிக்கும் பாவமும் இதுவே. உடல் கோளாறு, விபத்துகள். பொருள் இழப்பு, நோய்கள், மனைவியுடன்-கணவனுடன்-உறவு முறை முதலியவற்றையும் இந்த பாவத்தைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

  ஒன்பதாம் பாவம்:
  பித்ருஸ்தானம்-தந்தை-அதிர்ஷ்டம், பொன், பொருள், தான தர்ம குணம். தூர தேசப் பயணம், பிறவிப் பயன், தெய்வ பக்தி, பேரன் பேத்திகள், முன்னோரின் தர்ம சிந்தை முதலியவற்றை அறிய ஒன்பதாம் பாவம் உதவுகிறது.

  பத்தாம் பாவம்:
  இதை, கர்ம ஸ்தானம், தொழில் ஸ்தானம் என்றும் அழைப்பார்கள். வாணிபம், அரசாங்கப்பதவி, செல்வம், வெளி நாட்டுப் பயணங்கள், தெய்வபக்தி முதலியவற்றைக் கண்டறியலாம். ஜாதகருக்குக் கர்மம்-ஈமக்கடன்-செய்ய பிள்ளைகள் உண்டா என்பதை அறியவும் இந்த பாவம் முக்கியமானது.

  பதினொன்றாம் பாவம்:
  லாபஸ்தானம், மூத்த சகோதர ஸ்தானம், சகோதர சகோதரிகள் உறவு முறை, கல்வி, நகைகள், உடை, வீடு, மன மகிழ்ச்சி முதலியவற்றை பதினொன்றாம் பாவம் எடுத்துக் காட்டுகிறது.

  பன்னிரண்டாம் பாவம்:
  இதை விரைய ஸ்தானம், சோர ஸ்தானம் என்றும் மறைவிடம் என்றும் சொல்வார்கள். பன்னிரண்டாம் பாவம் நன்றாக இருந்தால் ஜாதகருக்குப் பொன்னும், புகழும் பெருகும். விரோதிகள் இருந்தாலும், பொருள் இழப்புகள் நேரிட்டாலும் ஜாதகர் மனம் தராமல் இருப்பார். ஆணாக இருந்தால் மனைவி பெண்ணாக இருந்தால் கணவன் நடத்தையை அறிய இந்த பாவம் முக்கியமானது.

  பன்னிரண்டு பாவங்களின் தன்மைகள் அனைத்தும் பொதுவானது. இவற்றில் தங்கும் கிரகங்கள் நிலை-வலிமை தன்மை ஆகியவற்றைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும்.

  1 தினப் பொருத்தம்
  2 கணப் பொருத்தம்
  4 பொருத்த விபரம்
  3 மகேந்திரப் பொருத்தம் (புத்திர விருத்தி மற்றும் ஸம்பத்)
  4 ஸ்திரி தீர்க்கம் (தீர்க்க சுமங்கலி)
  5 யோனிப் பொருத்தம் (தாம்பத்ய சுகம்)
  6 ராசிப் பொருத்தம்
  7 அனுகூல சஷ்டாஷ்டகம்
  8 ராசி அதிபதி
  9 வசியப் பொருத்தம்
  10 வேதைப் பொருத்தம்
  11 நாடிப் பொருத்தம்
  12 விருக்ஷம்

  உங்களின் தாய் தந்தையைவிட உங்களின் தாலி வலிவுடையது அந்தத் தாலியை அணிவிக்கும் கணவன்தான் உங்களின் கண்கண்ட தெய்வம்,அதனால்தான் தாலி அணியும் ஒவ்வொரு பெண்ணும் அதற்கு குங்குமப்போட்டு வைக்கிறார்கள் அது அவர்களை அறியாமல் ஏற்படுகின்ற பயபக்தி,உண்மையும் அதுதான், கோவிலுக்குச் சென்று சுவாமியை வணங்கும்,தாலியணிந்த பெண்களே,உங்கள் கழுத்தில் இருக்கும் தாலியின் வலிமை ,உங்களுக்குத் தெரியாது,

  தாலியின் வகைகள்,
  1,பிள்ளயார் தாலி,
  2,ஒற்றைக் கொம்புத் தாலி,
  3,இரட்டைக் கொம்புத் தாலி,
  4,மூன்று கொம்புத் தாலி,
  5 ,அம்மன் தாலி,
  6,லட்சுமி தாலி,
  7,பொட்டுத் தாலி,
  8,லிங்கத் தாலி,
  9,புலிப்பல் தாலி,
  10,பவளத் தாலி,

  இன்னும் ஆறுவகைத் தாலிகள் உண்டு அவை நம் மக்கள் மத்தியில் பழக்கத்தில் இல்லை எனலாம் சில இடங்களில் பொட்டுத்தாலி என்று ஆலயங்களுக்கு நேர் கடனாகவும் தாலியாகவும் அணிவதை காணலாம் அதனால்தான் பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழுங்கள் என வாழ்த்துவது,
  அவையாவன
  1. கலையாத கல்வி
  2. கபடற்ற நட்பு
  3. குறையாத வயது
  4. குன்றாத வளமை
  5. போகாத இளமை
  6. பரவசமான பக்தி
  7. பிணியற்ற உடல்
  8. சலியாத மனம்
  9. அன்பான துணை
  10. தவறாத சந்தானம்
  11. தாழாத கீர்த்தி
  12. மாறாத வார்த்தை
  13. தடையற்ற கொடை
  14. தொலையாத நிதி
  15. கோணாத செயல்
  16. துன்பமில்லா வாழ்வு

  இது சாதாரண வார்த்தை அல்ல இந்தத் தாலிகளை முறைப்படி அணியும் பெண்ணுக்கு ஏதேனும் இடர்வரின் உறக்கத்தில் கனவிலே அறிந்து கொள்வாள் அதுதான் தாலியின் பெருமை,

  இவற்றிக்கு விளக்கம் தர எனக்கு வயது போதாது.இருந்தாலும் இங்கு குறிப்பிடும் பதினாறுக்கும் தாலிக்கும் என்ன சம்பந்தம் எனக் கேட்கலாம் இங்குதான் விடயமே இருக்கிறது,ஒரு பெண்ணின் தெய்வீகத் தன்மை பதினாறு வயதில் ஆரம்பிக்கின்றது,

  கொம்புத்தாலி எனும் பொழுது ஒற்றைக் கொம்புத்தாலி அணியும் குலமும் விடயமும் எனது விஸ்வப் பிரம்மகுலம் எனும் புத்தகத்தில் விரிவாக எளுதியுள்ளேன்,புத்தகம் முடிவுற்றதும் வெளிவரும்,

  அடுத்து இரண்டு கொம்புத்தாலி.இதில் சாஸ்திரம் தொடர்பான பூரண விளக்கம் தேவை அதாவது செவ்வாய் தோசமுள்ள பெண்ணிற்கு கட்டப்படுவது,அதுஅவருடைய சாதக கிரக நிலைக்கு ஏற்ப மூன்று வகைப்படும்,(இதில் நிறைய சம்பிரதாயங்கள் உண்டு)

  மூன்று கொம்புத்தாலி.இரண்டாவது திருமணத்திற்கு கட்டப்படுவது அல்லது விஸ்வப் பிரம்மகுலத்தவருக்கு உரியது.இங்கு ஒரு பிராமணர் இந்தத் தாலிக்கு பூசை செய்யக் கூடாது

  மும் மூர்த்திகள் சாட்ச்சியாக முத்தொழிலுக்கும் முதல்வனை அதாவது பிரம்மனை முன்வைத்து இந்தத் தாலி அணியப் படுவது,மணமகன் பூணூல் அணிந்து மேலாடை இன்றி தாலிகட்டவேண்டும் ஏனெனின்,பதின் மூன்று கர்மம் படித்து ஒரு அந்தணர் பூனூல் அணிய வேண்டும் என்ற விதி உண்டு விஸ்வப்பிரம்மகுலத்தவர் பிறந்தவுடன் பூனூல் அணியும் தகுதி பெறுகிறார்,


  உதாரணமாக நமது வீடுகளில் இருக்கும் நாற்காலி கதிரை.என்பவை நம் வீட்டில் இருக்கும் பொழுது அதற்க்கு எந்த மதிப்பும் இல்லை அதே நாற்காலி ஒரு அரண்மனையில் இருந்தால் அது அரியாசனமாக மாறிவிடுகிறது.

  ஒரு ஆலயத்தில் இருந்துவிட்டால் அது சிம்மாசனமாக மாறி விடுகிறது.நீங்கள் அணியும் தாலியும் அவ்வாறே மிகவும் பெறுமதியான தெய்வீகத் தன்மை உள்ளது தாலி என்பதை மறக்கவேண்டாம்.
  நன்றி
  மார்க்கண்டு தேவராஜா, (L,L,B)
  மயூரா கோல்ட் ஸ்மித்
  சுவிஸ்
  Tp.079 767 45 55. E-mail   mayuragold@gmail.com.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
மருத்துவம்
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort