தாய்த் தமிழக கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்,
 • தாய்த் தமிழக கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன்,

  தாய் மண்ணின் விடிவிற்காகப் போராடிய மாவீரர்களை நெஞ்சினில் சுமந்து வீரவணக்கம் செலுத்தி நினைவு கொள்வதையும், மாவீரர் பெற்றோர் கௌரவிக்கப்படுவதையும் நாம் அனைவரும் அறிவோம் .அந்த வகையில், தாய்த் தமிழகமும் தமிழீழ விடுதலைக்காக தனது புதல்வர்களையும் ஈன்று கொடுத்து தனது பங்களிப்பையும் சிறப்பாகவே நிறைவேற்றியுள் வீரம் விளைந்த நெஞ்சுரத்தை கொண்ட வீர வேங்கைகளைப் பெற்றெடுத்த தாய்த் தமிழகத்தின் தாய்மார்கள்.

  தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் அவர்களது பெற்றோர்களையும் ஒவ்வொரு மாவீரர் தினத்தன்றும்…தமிழக உறவுகள் அனைவரும் நெஞ்சினில் சுமந்து நினைவு கொண்டு வீரவணக்கத்தோடு கௌரவிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு இனமான உணர்வுள்ள தமிழனதும் மிகுந்த எதிர்பார்ப்பாகும் அதுவே நமது வரலாற்றுக் கடமை.

  அந்த வகையில், தாய்த் தமிழகம் வீரத்தோடு ஈன்று அனுப்பிய ஒரு சில மாவீரர்களில் பூநகரி “தவளைப் பாய்ச்சல்” இராணுவ நடவடிக்கையின் போது வீர காவியமான கரும்புலி “லெப்டினன்ட் செங்கண்ணன்” அவர்களும் அடங்குவார். அந்த உன்னதமான வீரம் நிறைந்த மாவீரனுக்கு தமிழகத்தில் இதுவரை எந்த நிகழ்வுமே நடந்ததில்லை.!! அந்த மாவீரனை ஒருவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை அத்தோடு எந்தவொரு அடையாளங்களும் பதிக்கப்படவில்லை என்பதே மிகவும் வேதனையான விடயமாகும் தமிழ் தேசியம் பேசும் தமிழ் உணர்வாளர்கள் இதை நினைவில் கொள்ளவேண்டும் வெறும் வாயால் தேசியம் பேசுவதைவிட தாய்த் தமிழகத்தின் மாவீரன் தாயத்துக்கு  தம்லகத்தின் விலைமதிப்பற்ற உயிர்த் தற்கொடை கொடுத்த போராளிகளில் ஒருவன்.

  எதுவுமே செய்யாத, சாதிக்காத தன்னலம் கொண்ட அரசியல்வாதிகளை… அவர்கள் இறந்த பிற்பாடு ஒவ்வொரு வருடமும் தலையில் தூக்கி வைத்து கௌரவித்து… தெருவெங்கும் அவர்களுக்கு சிலைகள் வைத்து கொண்டாடும் சுயநல அரசியலைவிட  திரைப்படத்தில் தங்களுக்கென்று தொண்டர்களை வைத்து பாலாபிஷேகம் செய்வதைவிட தொண்டர்கள் தங்களது கனவு நாயகிகளுக்கு கோவில் கட்டி கொண்டாடுவதைவிட தன்னலம் பாராமல் தமிழ் மக்களின் விடுதலைக்கு தாய்த் தமிழகப் புதல்வன் தன் உயிரையே  கொடையாகக் கொடுத்தான் இதை நீங்கள் நினைவு கூருங்கள்.

  தாய்த் தமிழகம் பெற்றெடுத்த வீரப் புதல்வர்களையும் நினைவு கூர்ந்து, அவர்களது வீரப் பெற்றோர்களையும் இனம் கண்டு கௌரவித்து அவர்களுக்கான வீரம் செறிந்த நிகழ்வுகளை அவர்களுக்குரிய தகுந்த இடத்தில் நடாத்தி சிறப்பிப்பது தன்மானமுள்ள அனைத்துத் தமிழ் மக்களது கடமை தாயகத் தமிழருக்காக தாய்த்தமிழகத்தின் தமிழன்னை ஈன்றெடுத்த முத்து அது தன்னுயிரை தாயகத் தமிழனைக் காப்பாற்ற உயிர் தற்கொடயாழனாக தன்னை இணைத்துக் கொண்ட மாவீரன் அந்த வீரனனுக்கு எத்தனை செய்தாலும் இணையாகாது.

  மாவீரர் கரும்புலி லெப்டினன்ட் செங்கண்ணன் அவர்களின் இயற்பெயரும் முகவரியும்…

  தனுஸ்கோடி செந்தூரபாண்டியன்,
  சாத்தூர்,
  சிவகாசி,
  தமிழ்நாடு,
  இந்தியா.

  மேற்கண்ட முகவரியில்… தேடிச் சென்று செங்கண்ணன் அவர்களது பெற்றோரை இனம் கண்டு மற்றும் அவர்களது உறவினர்களையும் அழைத்து இந்த வருட மாவீரர் நாளை மிகவும் சிறப்பாக தாய்த் தமிழகத்தில் நடாத்த வேண்டும் என்பதே இனமானமுள்ள அனைத்து தமிழரின் விருப்பமாகும்.

  வீரத் தமிழ்மகன் செங்கண்ணன் பிறந்த மண்ணில் செங்கண்ணனுக்கு ஒரு துரும்பும் இல்லையா??? அந்தப் வீரப் புதல்வனுக்கு தாய் மண்ணில் எந்தவொரு உரிமையும் இல்லையா?தைத் தமிழகத்தின் தமிழன்னை ஈன்றெடுத்த கரும்புலி மாவீரனுக்கு தமிழகத்தின் தமிழ் தேசியம் பேசும் கட்சிகள் ஏன் நன்றி செலுத்தவில்லை.

  உண்மையில் இன்று தமிழ் ஈழத் தேசியத் தலைவரின் புகைப்படம் எந்த அளவுக்கு உண்மையான தமிழுணர்வுக்கு அப்பால் தேர்தலுக்காகப் பயன்படுத்தப் படுகின்றதோ அந்த அதையும் விட பலமங்கு தேசியத் தலைவருடன் தனது புகைப்படத்தை வைக்க வேண்டிய தமிழன் செங்கண்ணனே.

  தேசியத் தலைவரைத் தெய்வமாக மதிக்கிறோம் ஆனால் அவரை விளம்பரப் பொருளாகவோ அல்லது வியாபாரப் பொருளாகவோ ஈழத் தமிழர்கள் கனவிலும் நினைத்ததில்லை ஆனால் தேசியத் தலைவரை வீரத்திற்கும் மானத்திற்கும் தேர்தல் விளம்பரத்திற்கும் தேசிய உணர்வாளர்கள் பயன்படுத்தும் பொது தாய்த் தமிழகத்தின் தமிழனுக்கு தன்னை அர்ப்பணித்து தமிழ் ஈழப் போராட்டத்திற்கு வலு சேர்த்து மாவீரரான  செங்கண்ணன் என்ன உங்களின் கண்ணுக்குத் தெரியவில்லையா.

  இதுதானா உங்களின் தமிழ்ப் பற்று தமிழ் தர்மம் தமிழனுக்கு உயிரும் கொடுப்போம் என்பது வெறும் வாய்ப் பேச்சா தமிழ் ஈழத் தேசியத் தலைவர் எதையும் விற்றுப் பிழைக்கவில்லை தான் சார்ந்த சமூகத்துக்கு தமிழன் என்பதால் எதைச் செய்ய முடியுமோ அதையே செய்தார் அவர் பணத்துக்கு அரசியலுக்கு அரசியல் சாணக்கியத்துக்கு என ஒரு போதும் தலை சாய்க்கவில்லை தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு என்னென்ன சிய முடியுமோ தமிழ் மக்களைத் துணையாகக் கொண்டு துணிந்த தமிழன்.

  தமிழ் ஈழத் தேசியத்துக்கு போர் முனையில் பதில் சொல்லி துணிவோடு துணையாகத் தன்னுயிரை தமிழுக்காகவும் ஆசையாக் கொள்கைக்கும் துச்சமென தனது உயிரையே கொடுத்தவன் செங்கண்ணன் இன்று தமிழ் தேசியம் பேசும் வாய் வீச்சுக் காரனாக இருக்க வில்லை தாய்த் தமிழகத்தின் மானமுள்ள தமிழனாக ரோசமுள்ள தமிழனாக தங்களை இணைத்துக் இந்த வீரனும் ஒருவன் இந்த வீரனைக் கூடத்தெரியாமல் இன்று தமிழ் தேசியத்தை தமிழகத்தில் பேசும் தமிழ்ப் பற்றாளர்களே.

  நீங்கள் உண்மையான தமிழ் உணர்வாளர்களா இல்லை தமிழ் தேசியம் பேசி தமிழக தமிழர்களை பாளும் கிணற்றுக்குள் தள்ளுவதற்கு தமிழ் தேசியத்தைப் பேசுகின்றீர்களா உங்களின் சுஜ லாபத்துக்காக தமிழ் தேசியம் பேசவேண்டாம் தமிழர் மானத்துக்கு விலை பேச வேண்டாம் தமிழர்களை வைத்து உங்களின் நலனுக்காக எதுவும் பேசலாம் என்று நினைத்து தமிழகத் தமிழர்களிடம் இருக்கும் ஒற்றுமைக் கெடுக்க வேண்டாம்.

  ஈழத்தமிழர்கள் பட்ட துன்பம் போதும் தாய்த் தமிழக மக்களாவது நிம்மதியாக வாழ விடுங்கள் இல்லை தமிழ் தேசியம்தான் உங்களின் சுயலாபப் பொருள் என்றால் தமிழ் ஈழப் போராட்டத்திற்க்கு தாய்த் தமிழகத்தில் இருந்து தமிழ் ஈழத்தின் போராட்டத்தில் தன்னை அர்ப்பணித்து மாவீரரான   போராளிகளை இனம் கண்டு அவர்களின் குடும்பத்துக்கு உதவி செய்து அவர்களை உங்களின்  பிரச்சாரத்துக்கு முன் நிறுத்துங்கள்.

  வீரம் என்பது வெறும் வைப் பேச்சல்ல அதை நிரூபித்தவர் தமிழ் ஈழத் தேசியத் தலைவை மேதகு பிரபாகரன்  என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் தமிழகத்தில் தங்களை இணைத்துக் கொண்ட மாவீரர்களுக்கு மதிப்புக் கொடுங்கள் அப்போளுத்துதான் நீங்கள் உண்மையான தமிழ் உணர்வுள்ள மனிதாபிமான தமிழ் மறவர்கள்.

   

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
தங்க நகை
மரண அறிவித்தல்
ஆன்மிகம்
சுவிஸ் செய்தி
 மரண அறித்தல்