பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த மன்னாதி மன்னன்,
 • பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த மன்னாதி மன்னன்,

  “நாடோடி மன்னன்” திரைப்படத்தின் மகத்தான வெற்றிக்குப்பின், கண் திருஷ்டி போல் எம்.ஜி.ஆருக்கு ஒரு விபத்து ஏற்பட்டது.

  புகழ் பெற்ற திரைப்பட நடிகராக விளங்கிய போதிலும், படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் தனது நாடகக் குழுவின் நாடகங்களில் நடிப்பது எம்.ஜி. ஆரின் வழக்கம். சீர்காழியில், “இன்பக்கனவு” நாடகத்தில் நடித்தபோது, ஒரு சண்டைக் காட்சியில் நடிகர் குண்டுமணியை அலாக்காகத் தூக்கினார். குண்டுமணி, மிகப் பருமனான நடிகர். அப்படியும், அவரை எம்.ஜி.ஆர். எளிதாகத் தூக்கிவிட்டார். ஆனால், எதிர்பாராத விதமாக குண்டுமணி சற்றே சரிந்ததால், எம்.ஜி.ஆரின் கால் மீது விழுந்தார்.

  நிலை தடுமாறிய எம்.ஜி.ஆர். மேடையின் மீது விழ, அவரது கால் எலும்பு முறிந்து விட்டது.

  வலி கடுமையாக இருந்த போதிலும், அதைத் தாங்கிக் கொண்டு, மேடையில் அமர்ந்தவாறே எம்.ஜி.ஆர். பேசினார். “எதிர்பாராதவிதமாக, கால் எலும்பில் முறிவு ஏற்பட்டு விட்டது. தொடர்ந்து நடிக்க முடியாத நிலையில் இருப்பதற்காக வருந்துகிறேன். விரைவில் குணம் அடைந்து, இந்த நாடகத்தை மீண்டும் உங்கள் முன் நடத்துவேன்” என்று கூறினார்.

  எம்.ஜி.ஆருக்கு கால் எலும்பு முறிந்ததை அறிந்து, ரசிகர்கள் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களுக்கு ஆறுதல் கூறி விட்டு, காரில் சென்னைக்குப் புறப்பட்டார். இதற்குள் எம்.ஜி.ஆருக்கு விபத்து ஏற்பட்ட செய்தி, சென்னைக்கு எட்டிவிட்டது. அவரது வீட்டின் முன்னால் பெருமளவில் மக்கள் கூட்டம் திரண்டு விட்டது.

  சென்னை திரும்பிய எம்.ஜி. ஆர்., தனது வீட்டின் வாசலில் கூடியிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்து திகைத்து விட்டார். “எனக்கு ஒன்றும் நேராது. கவலைப்படாதீர்கள்” என்று ஆறுதல் கூறிவிட்டு, மருத்துவமனைக்குச் சென்றார்.

  அங்கு “எக்ஸ்ரே” எடுக்கப்பட்டது. கால் எலும்பு அடியோடு முறிந்துவிடவில்லை என்றும், விரிசல்தான் ஏற்பட்டிருக்கிறது. சிகிச்சை மூலம் சரி செய்து விடலாம் என்றும் டாக்டர்கள் கூறினர்.

  சில நாட்கள் அசையாமல் படுக்கையில் இருக்க வேண்டியது அவசியம் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்தினர். அதன்படி, எம்.ஜி.ஆர். ஆஸ்பத்திரியில் “அட்மிட்” ஆனார்.

  கால் எலும்பு முறிந்து விட்டதால், குணம் அடைந்தாலும் சண்டைக் காட்சிகளில் பழைய வேகத்துடன் எம்.ஜி.ஆர். நடிக்க முடியாது என்று தமிழ்நாடு முழுவதும் வதந்தி பரவியது.

  இதனை அறிந்த எம்.ஜி.ஆர்., அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

  அதில் அவர் கூறியிருந்ததாவது:-

  “எனது உடல் நலம் குறித்து, அக்கறையோடு விசாரிக்கும் அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

  எனக்கு வர இருந்த பேராபத்து, உதய சூரியனைக் கண்ட பனித்துளிபோல விலகி விட்டதற்கு முக்கியக் காரணம், உங்களைப்போன்ற ரசிகர்களின் அன்பும், ஆசியும்தான். என் உடல் நலம் தேறியபின், நான் இதுவரை இருந்ததைவிட பன்மடங்கு அதிக சக்தியுடனும், தெம்புடனும் மீண்டும் கலைக்கும், நாட்டுக்கும் பணியாற்றுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.”

  இவ்வாறு அந்த அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டிருந்தார்.

  அவர் கூறியது போலவே, விரைவாக குணம் அடைந்தார். விரிசல் ஏற்பட்ட எலும்பு சரியாகியது. முன்னிலும் அதிக வலிமை பெற்றார். நிருபர்கள் முன்னிலையில், அவர் பெரும் பளுவைத் தூக்கிக் காட்டினார். நடையில் எவ்வித தடுமாற்றமும் இல்லை. வேகமும் சற்று கூடியிருந்தது!

  நாடோடி மன்னனுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த படம் “தாய் மகளுக்குக் கட்டிய தாலி”. அறிஞர் அண்ணா எழுதிய கதை. வசனத்தை அரங்கண்ணல் எழுதினார்.

  எம்.ஜி.ஆருக்கு ஜோடியாக ஜமுனா ராணி நடித்தார். பி.கண்ணாம்பா, ராஜசுலோசனா, எம்.ஜி.சக்ரபாணி, சின்னப்பதேவர், தங்கவேலு ஆகியோரின் நடிப்பிலும் உருவான இந்தப்படம்  31-12-1959-ல் வெளிவந்தது.

  1960-ல் “பாக்தாத் திருடன்”, “ராஜா தேசிங்கு”, “மன்னாதி மன்னன்” ஆகிய படங்களில் எம்.ஜி.ஆர். நடித்தார்.

  சதர்ன் மூவிஸ் தயாரிப்பில் தயாரான “பாக்தாத் திருடன்”, படத்தின் திரைக்கதையை ரவீந்தர் எழுத, வசனம் எழுதியவர் ஏ.எஸ்.முத்து. தயாரித்து இயக்கியவர், டி.பி.சுந்தரம்.

  இதில், எம்.ஜி.ஆருக்கு ஜோடி வைஜயந்திமாலா. இருவரும் இணைந்து நடித்த முதல் படம் இது தான். டி.எஸ்.பாலையா, எம்.என்.நம்பியார், அசோகன், சந்தியா, ஹெலன் ஆகியோரும் நடித்தனர்.

  நடேஷ் ஆர்ட் பிக்சர்ஸ் தயாரித்த “மன்னாதி மன்னன்” 19-10-1960-ல் வெளிவந்தது.

  இதில் எம்.ஜி.ஆருக்கு ஜோடி பத்மினி. அஞ்சலிதேவி, எம்.ஜி.சக்ரபாணி, பி.எஸ்.வீரப்பா, ஜி.சகுந்தலா ஆகியோரும் நடித்தனர். கதை-வசனம் கண்ணதாசன். இயக்கம்: எம்.நடேசன். இசை: விசுவநாதன் – ராமமூர்த்தி.

  “அச்சம் என்பது மடமையடா! அஞ்சாமை திராவிடர் உடமையடா!” என்ற கண்ணதாசனின் புகழ்பெற்ற பாடல் இடம்பெற்ற இந்தப் படத்தில், எம்.ஜி.ஆருக்கும், பத்மினிக்கும் நடனப்போட்டி நடக்கும். அதில் எம்.ஜி.ஆர். ஜெயிப்பார்; பத்மினி தோற்பார்! பின்னர் எம்.ஜி.ஆரிடம் பத்மினி நடனம் கற்றுக்கொள்வார்.

  நடனக் கலையில் வல்லவரான பத்மினிக்கு ஈடுகொடுத்து எம்.ஜி.ஆர். ஆடியதை, ரசிகர்கள் பாராட்டினர். இந்தப்படமும் சூப்பர்ஹிட்.

  “மதுரை வீரன்” என்ற மாபெரும் வெற்றிப்படத்தை எடுத்த லேனா செட்டியாரின் “கிருஷ்ணா பிக்சர்ஸ்” தயாரித்த படம் “ராஜாதேசிங்கு.”

  வரலாற்றுப் பின்னணி கொண்ட இந்த கதைக்கு கவிஞர் கண்ணதாசனும், மக்களன்பனும் வசனம் எழுதினர். உடுமலை நாராயணகவி கண்ணதாசன், தஞ்சை ராமையாதாஸ் ஆகியோர் பாடல்களை எழுத ஜி.ராமநாதன் இசை அமைத்தார். இயக்கம்: டி.ஆர்.ரகுநாத்.

  இதில் எம்.ஜி.ஆருடன் பானுமதி, பத்மினி ஆகியோர் இணைந்து நடித்தனர். எஸ்.எஸ்.ராஜேந்திரன், என்.எஸ்.கிருஷ்ணன், டி.கே.ராமச்சந்திரன், தங்கவேலு, டி.ஏ.மதுரம், எம்.என்.ராஜம், எம்.சரோஜா ஆகியோரும் நடித்திருந்தனர்.

  நீண்ட காலம் தயாரிப்பில் இருந்த இந்த பிரமாண்டமான படத்தின் கதைப்படி, இதில் எம்.ஜி.ஆர். இறந்து விடுவார். இந்த கதையமைப்பை எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஏற்காததால் படம் சரிவர ஓடவில்லை.

  வரலாற்று படங்களில் இருந்து “ராபின் ஹூட்” பாணியில் சமூகப் பட கதாநாயகனாக எம்.ஜி.ஆர். மாறிய வரலாறு !    

  பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-10): சமூக கதைக்களத்தில் கால்பதித்த எம்.ஜி.ஆர்.!
  பொதுவாக சரித்திரப் படங்களிலும், ராஜாராணி படங்களிலும் அதிக அளவில் நடித்து வந்த எம்.ஜி.ஆர்., திருடாதே படத்தின் மூலம் சமூகப் பட கதாநாயகனாக நவீன கதைக்களத்தில் கால்பதித்தார். அவர், நவீன உடைகள் அணிந்து நடித்த  முதல் படம்  “திருடாதே”. இந்தப்படம்  உருவானதில்  ஒரு சுவாரஸ்யமான கதை இருக்கிறது.

  எம்.ஜி.ஆர். ‘சக்ரவர்த்தி திருமகள்’ என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது, அவருடன் பட அதிபர் சின்ன அண்ணாமலைக்கு நெருங்கி பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அப்போது ஒருநாள், எம்.ஜி.ஆரிடம், “நீங்கள் ஏன் ராஜா- ராணி கதையிலேயே நடித்துக் கொண்டிருக்கிறீர்கள். நல்ல சமூகக் கதையில் நடித்தால் என்ன?” என்று கேட்டுள்ளார் சின்ன அண்ணாமலை.

  “சந்தர்ப்பம் வந்தால் பார்க்கலாம்” என்று கூறிய எம்.ஜி.ஆர். பேச்சை வேறு திசைக்கு கொண்டு சென்றார். பின்னர் வேறு ஒருநாள் இதுபற்றி பேசியபோது ஏற்றுக்கொண்டார். “சரி, தங்களுக்கு தைரியமிருந்தால் எனக்கொன்றும் ஆட்சேபணை இல்லை. நல்ல கதையாகப் பாருங்கள்” என்று அவர் கூறியதும் சின்ன அண்ணாமலை, இந்திப்படமான ‘பாக்கெட் மார்’ என்னும் கதையை  தேர்வு செய்தார். எம்.ஜி.ஆருக்கு  அந்த கதை  மிகவும் பிடித்துப்போனது. சாவித்ரி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த அந்த படத்தில், மிகவும் குறைந்த சம்பளத்தில் நடிப்பதற்கு எம்.ஜி.ஆர். ஒப்புக்கொண்டார்.

  ஆனால் மற்ற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்திருப்பதால், தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை தினமும் சூட்டிங் நடத்தினால் படத்தைச் சீக்கிரம் முடிக்கலாம். அதற்கு தகுந்தாற்போல நடிகர்- நடிகைகளை போடவேண்டும். குறிப்பாக கதாநாயகியை புதுமுகமாகப் போட்டால்தான் நம் சவுகரியம் போல் சூட்டிங் நடத்தலாம் என்று யோசனை சொன்னார்.

  அவர் யோசனைப்படி புதுமுகமும் கிடைத்துவிட்டது. ஆம், ‘தங்கமலை ரகசியம்’ என்ற திரைப்பட தயாரிப்பில் சின்ன அண்ணாமலை ஈடுபட்டிருந்தபோது, டைரக்டர் கே.சுப்ரமணியத்தின் புதல்வி பத்மா சுப்ரமணியம் (பரதநாட்டியக் கலைஞர்) ஒரு பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார்.

  “இந்தப் பெண் பெங்களூரைச் சேர்ந்தவள். தாய்மொழி கன்னடம். கன்னடப் படத்திலும் நடித்திருக்கிறாள். தமிழ்ப்படத்திலும் நடிக்க வேண்டுமென்பது ஆசை. ஏதாவது தமிழ்ப்படத்தில் ஒரு சிறு ‘சான்ஸ்’ கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்க” என்று பத்மா சிபாரிசு செய்தார்.

  “தங்கமலை ரகசியம்” படத்தில் அழகு மோகினி, யவ்வன (இளமை) மோகினி என்று இரண்டு பெண்கள் நடனமாடும் காட்சி வருகிறது. அதில் ஒரு நடன மணியாக வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

  பத்மா சிபாரிசு செய்த பெண், மேக்கப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு வந்து காமிரா முன் நின்றதும் அசந்துபோன நீலகண்டன், “இந்தப் பெண், காமிராவுக்கு ரொம்பவும் நன்றாக இருக்கிறாள். எதிர்காலத்தில் நிச்சயம் பெரிய நடிகையாக வருவாள். கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று படத்திற்கு ஒப்பந்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்” என்று சின்ன அண்ணாமலையிடம் சிபாரிசு செய்தார்.

  பின்னர் நடனக்காட்சி படமாக்கப்பட்டு, தியேட்டரில் போட்டுப் பார்த்தபோது, எல்லோரும் ‘ஆகா’ என்று சொல்லும் அளவுக்கு அந்தப் பெண் காட்சி அளித்தார். அந்தப் பெண் வேறு யாருமல்ல, பின்னர் தமிழ்நாட்டில் மிகப் பெரிய கதாநாயகியாக பிரகாசித்த சரோஜாதேவிதான்!

  டைரக்டர் நீலகண்டன் கூறியபடி உடனே மூன்று படங்களுக்கு சரோஜாதேவியை ஒப்பந்தம் செய்த சின்ன அண்ணாமலை, எம்.ஜி.ஆரிடம் சென்று புதுமுகம் சரோஜாதேவி பற்றி கூறினார். ‘டெஸ்ட்’ எடுத்து பார்த்தபோது, எம்.ஜி.ஆருக்கும் சரோஜா தேவியை பிடித்துப்போனது.

  அதன்பின்னர் “சாவித்திரி பிக்சர்ஸ்” நிறுவனத்தின் மூலம் ‘பாக்கெட்மார்’ என்ற இந்திப்படக் கதையை தமிழில் எடுப்பது என்றும், அதில் எம்.ஜி.ஆர் -சரோஜாதேவி இணைந்து நடிப்பதென்றும் முடிவு செய்து அதற்கான பணிகள் ஆரம்பித்தன.

  அப்போது, படத்திற்கு என்ன தலைப்பு வைப்பது என்று சிந்தித்தபோது எம்.ஜி.ஆர், “எவ்வளவு லட்சம் செலவு  செய்து படம் எடுக்கிறோம். அந்தப் படத்தின் மூலம் மக்களுக்கு ஏதாவது நல்ல நீதிகள் கிடைக்க வேண்டும். அதே போல் நாம் தேர்ந்தெடுக்கும் படத்தின் பெயர் ஒரு நீதியைப் போதிப்பதாக அமைய வேண்டும். பணம் செலவு செய்து ‘போஸ்டர்’ ஒட்டுகிறோம்.

  பத்திரிகையில் விளம்பரம் போடுகிறோம். ஏதாவது ஒரு நல்ல கருத்தைச்சொல்லும் பெயராக இருந்தால் நாம் செலவு செய்வதற்கு பலன் உண்டல்லவா? அப்படிப்பட்ட ஒரு பெயரைப் படத்திற்கு வைக்க வேண்டும்” என்றார். அத்துடன் அப்படி யார் நல்ல பெயர் சொல்லுகிறார்களோ அவர்களுக்கு ரூ.500 பரிசு அளிப்பதாகவும் கூறினார்.

  இதனால் எல்லோரும் சுறுசுறுப்பாக யோசனை செய்தார்கள். கடைசியில் படக் குழுவைச் சேர்ந்த மா.லெட்சுமணன், இந்தப் படத்திற்கு “திருடாதே” என்று பெயர் வைக்கலாம் என்று சொன்னதை அனைவரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டனர். எம்.ஜி.ஆருக்கும் அந்தப்பெயர் ரொம்பவும் பிடித்துவிட்டது. மா.லெட்சுமணனுக்கு 500 ரூபாய் பரிசளித்தார் எம்.ஜி.ஆர்.

  ‘திருடாதே’ படம் வேகமாக வளர்ந்து வந்தது. எம்.ஜி.ஆரும், “திருடாதே” படத்தை மிக நன்றாக தயாரிக்க ரொம்பவும் உதவியாக இருந்து வந்தார்.

  ஆனால், இந்த படத்தை திட்டமிட்டபடி முடிப்பதில் சோதனை ஏற்பட்டது. ஒருநாள் எம்.ஜி.ஆர். நாடகத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. படுத்த படுக்கையாகிவிட்ட எம்.ஜி.ஆர்., பட அதிபருக்கு ஏற்படும் நஷ்டத்தை சரிகட்ட யோசனை கூறினார். படத்தை ஏ.எல்.எஸ். அவர்களுக்கு ஒரு நல்ல தொகைக்கு விற்பனை செய்வதற்கு ஏற்பாடு செய்தார். தன்னை வைத்து படம் எடுத்த கம்பெனியின் எதிர்காலத்தின் மீதும் எம்.ஜி.ஆர். அதிக அக்கறை கொண்டிருந்ததற்கு இந்த சம்பவம் ஒரு சாட்சி.

  அதன்பின் “திருடாதே” ஏ.எல்.எஸ். வெளியீடாக மூன்று ஆண்டு கழித்து வெளிவந்தது. மிகப்பெரிய வெற்றிப்படமாக ஓடியது. “திருடாதே” தயாராவதில் மிகவும் தாமதம் ஆனதால், “நாடோடி மன்னன்”, “கல்யாணப் பரிசு” ஆகிய படங்கள் அதற்கு முன்னதாகவே வெளிவந்துவிட்டன. அவற்றின் மூலம் சரோஜாதேவியும் பெரும் புகழ் பெற்றார்.

  “திருடாதே” தந்த பிரமாண்ட வெற்றியால், உற்சாகம் அடைந்த எம்.ஜி.ஆர். தொடர்ந்து சமூகப் படங்களில் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்தார். அவரது சமூக படங்களின் வெற்றிப் பயணத்தை பகிர்ந்து கொள்வோம்….

   

  பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த மன்னாதி மன்னன், பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த மன்னாதி மன்னன், பொன்மனச் செம்மலின் வெற்றி வரலாறு (பகுதி-9): நாட்டிய தாரகையை வியக்க வைத்த மன்னாதி மன்னன்,
 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
ஆய்வுக் கட்டுரை
இந்திய சட்டம்
இலங்கை செய்தி
தங்க நகை
 மரண அறித்தல்
kadıköy escort diyarbakir escort adana escort elazığ escort erzurum escort escort erzurum mersin escort porno izle porno porno izle porno konulu porno escort sivas escort sivas escort corum tokat escort adana escort diyarbakir escort