இயற்கை விவசாயம் என்றால் என்ன,
 • இயற்கை விவசாயம் என்றால் என்ன,

  இயற்கை விவசாயம் என்பது சுற்றுச் சூழலுடன் ஒத்துப்போய் , அதற்கு கெடுதல் விளைவிக்காத தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி , நல்ல மகசூல் எடுப்பதுடன் , விவசாயத் தொழிலாளிகளுக்கும் எவ்வித கேடும் வராத அளவில் செய்யும் விவசாயமாகும்.

  இந்த முறையில் முக்கியமான அம்சங்கள்:

  . 1 பயிர்களின் கழிவுகளை கம்போஸ்ட் செய்தும் , . பண்ணை கால்நடைகளின் கழிவுகளையும் மட்டுமே உரமாகப் பயன்படுத்துதல்
  . 2 . சரியான நேரத்தில் பொருத்தமான பயிர்களைப் பயிரிடுதல்
  . 3 . பயிர்ச் சுழற்சி முறையில் பயிர்களைப் பயிரிடுதல்
  . 4 . பசுந்தாள் உரங்களும் பயறு வகைப் பயிர்களைப் பயிரிடுதலும்
  . 5 மண்ணிற்கு மேல் " மல்ச்சிங்க் " செய்தல். (அதாவது மண்ணின் ஈரம் ஆவியாகி வீணாகாமல் தடுக்கும் ஒரு உத்தி)

  பூச்சிகள் , பூஞ்சாளங்கள் , களைகள் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துதல்:

  . 1 சூழ்நிலைக்குப் பொருத்தமான பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  . 2 நோய்களுக்கு எதிர்ப்பு சக்தியுள்ள பயிர்களைத் தேர்ந்தெடுத்தல்
  . 3 நல்ல பயிர் மேலாண்மை
  . 4 பயிற் சுழற்சியைக் கடைப்பிடித்தல்
  . 5 பூச்சிகளைத் தின்னும் பூச்சிகளை வளர்த்தல்
  . 6 இயற்கை பூச்சிகொல்லிகளை உபயோகித்தல்

  இவை தவிர நல்ல நீர் மேலாண்மையும் நல்ல கால்நடைகளை வளர்ப்பதும் இன்றியமையாதவை.

  ஒரு இயற்கை விவசாயி இயற்கையுடன் இசைந்து விவசாயம் செய்து மண்வளம் , சுற்றுச் சூழ்நிலை , சுகாதாரம் ஆகியவைகளைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொடுப்பவன் ஆவான்

 • பகிர்ந்தளிக்க :

தொடர்புடைய செய்திகள்
இலங்கை செய்தி
உலக செய்தி
தங்க நகை
விளையாட்டு செய்தி
 மரண அறித்தல்